search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நத்தம் விஸ்வநாதன்"

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சித் தலைவர் நெல்லை முபாராக் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியினரின் அறிமுகக் கூட்டம் நடந்தது. அந்த மேடையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

    அங்கு பேசிய முபாரக், "என்னுடைய அப்பா 2015-ல் தவறிப்போய்விட்டார். என்னுடைய தாயார் 2022-ல் இறந்துபோய்விட்டார். தாயும் தந்தையுமில்லாத எனக்கு தாயாக தந்தையாக எனக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கிறார்கள் என்ற சந்தோஷத்தோடு நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன். ஒரு அப்பா என்னுடைய திண்டுக்கல்லார் (திண்டுக்கல் சீனிவாசன்) இன்னொரு அப்பா நத்தம் ஐயா (நத்தம் விஸ்வநாதன்) இருக்கிறார், இதற்கு மேல், என்ன வேண்டும் என்று நான் கேட்கிறேன்.

    காலையில் போன் பண்ணும்போதுகூட, அப்பா (திண்டுக்கல் சீனிவாசன்) என்னுடைய பிள்ளையை மாதிரி உன்னை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று சொன்னார். ஆயிரக் கணக்கான அப்பாக்கள், ஆயிரக் கணக்கான அம்மாக்கள், லட்சக் கணக்கான சகோதரர்கள், லட்சக் கணக்கான சகோதரிகள், லட்சக் கணக்கான மாமன்மார்கள், லட்சக் கணக்கான மாமிமார்கள் லட்சக் கணக்கான சித்தப்பா, சித்திக்களைக் கொண்டிருக்கிற நான் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.

    இங்கே கிடைக்கிற வெற்றி என்பது வரலாற்று வெற்றியாக நான் கருதுகிறேன். ஒருபோதும் திண்டுக்கல்லையும் என்னையும் பிரிக்க முடியாது என்று சொல்லுகிற ஒரு புனிதமான உறவு நம் இருவருக்கும் இடையில் இருப்பதாக நான் கருதுகிறேன். எனவே, திண்டுக்கல்லை விட்டு என்னைப் பிரிக்க முடியாது" என்று நெல்லை முபாரக் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

    நெல்லை முபாரக், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதனை அப்பாக்கள் என்று குறிப்பிட்டு பேசியபோது, திண்டுக்கல் சீனிவாசன் உணர்ச்சி வசப்பட்டு அடக்கமுடியாமல் விம்மி அழுதார்.

    • மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம்.
    • தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழா.
    • செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தாராபுரம் :

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் சட்டமன்ற உறுப்பினருமான எம் .எஸ்.எம். ஆனந்தன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தாராபுரம் வழியாக வந்த அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வநாதனுக்கு பழனி முன்னாள் எம்.எல்.ஏ.வும் தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரி தாளாளருமான கே .எஸ் .என். வேணுகோபால் அவரது செந்தூர் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வைத்து வரவேற்பு அளித்தார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் நகர அ.தி.மு..க.செயலாளர் டி.டி.காமராஜ், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரன், அர்பன் வங்கி தலைவர் சாமிநாதன், மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளர் மகேஷ், ராமகிருஷ்ணா கல்லூரி டிரஸ்டி உறுப்பினர் முத்துக்குமார்,நகர அம்மா பேரவை செயலாளர் கே. என். ராமலிங்கம் ,நகர பொருளாளர் சாமுவேல், நகர இலக்கிய அணி செயலாளர் மாதவன், ராமகிருஷ்ணா பாலிடெக்னிக கல்லூரி முதல்வர் முரளி, செந்தூர் மோட்டார்ஸ் நிறுவன மேலாளர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

    ×