என் மலர்
நீங்கள் தேடியது "தீபாவளி பலகாரங்கள்"
- வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்ட மீன் சமையல்!
- செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும்.
செட்டிநாடு சமையல் தனித்துவமான நறுமணமும், காரசாரமான சுவையும் கொண்ட உணவுகளுக்குப் பெயர் போனது. அந்த சிறப்பு மிக்க பட்டியலில், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் ஒரு தனி இடத்தைப் பிடிக்கிறது. இது வழக்கமான மீன் வறுவலை விட முற்றிலும் மாறுபட்டு, பூண்டின் தனித்துவமான சுவையையும், அற்புதமான வாசனையையும் தாங்கி நிற்பதால், இதனைச் சுவைப்பவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். சாதத்துக்குத் துணையாகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ பரிமாற ஏற்ற இந்த உணவு, சுவை மிகுந்தது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும்கூட. இந்த ரெசிபியை நமக்கு செய்துகாட்டுகிறார் ஃபெரோஸ் ஹோட்டலின் செஃப் சதீஷ் தாமு.

செய்முறை
* முள் இல்லாத மீனை 65 மசாலா சேர்த்து நன்றாக ஊற வைத்து பொரித்து எடுத்து வைக்கவும். (பொரித்த மீனை கையால் லேசாக மசிக்கவும்.)
* ஒரு கனமான கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* எண்ணெய் சூடானதும், முதலில் சோம்பு சேர்த்து பொரிய விடவும். சோம்பு நல்ல மணம் வந்ததும், கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
* பிறகு, குண்டு வரமிளகாயை சேர்த்து வறுக்கவும்.
* அடுத்ததாக, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். செட்டிநாடு உணவுக்கு சின்ன வெங்காயம் தனிச்சுவை தரும். வெங்காயம் நல்ல பொன்னிறமாக வரும்வரை வதக்க வேண்டும்.
* வெங்காயம் வதங்கியதும், நசுக்கி வைத்த பூண்டை போட்டு, அதன் பச்சை வாசனை போகும்வரை நன்றாக வறுக்கவும். இந்த டிஷ்ஷுக்கு பூண்டின் சுவை மிக முக்கியம். நல்ல பிரவுன் கலராகும்வரை பூண்டை வறுக்க வேண்டும்.
* வதக்கிய பூண்டு மற்றும் வெங்காய கலவையில், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
* அடுப்பை குறைத்து வைத்து, மிளகாய் தூள், சீரகத் தூள், தனியா தூள், சோம்புத் தூள், சுவைக்காக செட்டிநாடு மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
* இந்த மசாலாக்கள் எண்ணெயிலேயே ஸ்லோ குக் (மெதுவாக வறுக்கப்படுவது) ஆகி, நல்ல மணம் வரும் வரை கிளறவும்.
* சிறிது உப்பு சேர்த்து கிளறவும்.
* மசாலா வேக, சிறிதளவு தண்ணீர் மட்டும் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். மசாலா பச்சை வாசனை நீங்கி, நன்கு குக் ஆனதும் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* மசாலா தயாரானதும், முன்னரே பொரித்து, மசித்து வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து, மசாலா, மீன் துண்டுகளுடன் நன்றாகக் கலக்கும்படி மெதுவாக புரட்டவும்.
* இறுதியில், தேங்காய்த் தூளைச் சிறிதளவு தூவி, மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் மீன் பூண்டு வறுவல் தயார்.
* கொத்தமல்லித் தழை, வறுத்த சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் குண்டு மிளகாய் ஆகியவற்றால் அலங்கரித்துப் பரிமாறவும்.

ப்ளேட்டிங் செய்யப்பட்டுள்ள மீன் பூண்டு வறுவல்
ஆரோக்கிய நன்மைகள்
1. மீனில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகின்றன.
2. மீனில் உள்ள வைட்டமின் D மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
3. இந்த உணவில் பூண்டு அதிக அளவில் சேர்க்கப்படுவதால், செரிமானத்தை மேம்படுத்துவதுடன், பூண்டில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.
4. செட்டிநாடு சமையலில் பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியம் தருவதுடன், உணவுக்கு நல்ல சுவையையும் தரும்.
- மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது.
- சர்க்கரை பாகும், கடலை மாவும் சேர்ந்து நல்ல பதத்திற்கு வந்தவுடன் நெய் சேர்த்தால் மைசூர் பாக் ரெடி!
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடை வரிசையில் பலகாரத்திற்கும் முக்கிய இடம் உண்டு. தீபாவளி நோம்பு இருப்பவர்கள், அதிரசம், முறுக்கு போன்றவற்றை செய்து சாமிக்கு படைத்து கொண்டாடுவார்கள். நோம்பு இல்லாதவர்கள், பெரும்பாலும் குலாப் ஜாமுன் செய்வார்கள். சிலர் கடைகளில் இனிப்புகளை வாங்கி நண்பர்களுக்கு கொடுப்பார்கள். கடை இனிப்புகளில் முக்கியமானது மைசூர் பாக். அதிலும் வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக்குக்கு நிறைய பேர் அடிமை என்றே சொல்லலாம். அந்த மைசூர் பாக்கை வீட்டில் எப்படி செய்வது என பலருக்கும் தெரியாது. ஆனால் மைசூர் பாக்கை வீட்டிலேயே ஈசியாக செய்யலாம். வாங்க...

மைசூர் பாக் செய்முறை
* மைசூர் பாக் செய்வதற்கு முதலில் கடலை மாவை நன்கு சலித்துக்கொள்ள வேண்டும்.
* நெய் மற்றும் எண்ணெய்யை ஒன்றாக சேர்த்து லேசாக காய்ச்சி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவை கொட்டி, அதில் காய்ச்சிய நெய் கலவையை பாதி அளவு ஊற்றி, கெட்டி ஆகாமல் மாவை பிசைந்துக்கொள்ள வேண்டும். (மீதி நெய் கலவையை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்)
* அடுப்பை பற்றவைத்து, கனமான கடாயில் சர்க்கரையை போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கம்பி பதத்திற்கு பாகு எடுக்க வேண்டும். பாகு எடுக்க தெரியாது என்பவர்கள், தண்ணீர் நன்கு கொதித்து வெள்ளை நுரைபோல பொங்கும் பதத்தை, பாகு பதமாக எடுத்துக்கொள்ளலாம்.
* சர்க்கரை பாகில், கடலை மாவு கலவையைக் கொட்டி, கெட்டி இல்லாமல் கலக்கிவிட வேண்டும்.
* ஸ்டவ்வை, மீடியம் அல்லது லோ ஃப்ளேமில் மாறி மாறி வைத்துக்கொள்ளலாம். ஹை ஃப்ளேமில் வைக்கக்கூடாது.
* சர்க்கரை பாகுடன் கடலை மாவு கலவை நன்கு சேர்ந்தவுடன், மீதி உள்ள நெய் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக அதில் சேர்த்து கிளற வேண்டும்.
* கடாயில், மைசூர் பாக் கலவை நன்கு திரண்டு உருண்டு வரும்போது அடுப்பை ஆஃப் செய்துவிடலாம்.
* ட்ரே ஒன்றில் சுடான மைசூர் பாக் கலவையை ஊற்றி, 5 முதல் 6 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
* மேலும் ட்ரேவில் ஊற்றிய மைசூர் பாக் கலவையை அதிகமாக அழுத்திவிடக் கூடாது.
* 6 மணி நேரங்களுக்கு பிறகு, கத்தி ஒன்றை எடுத்து, நமக்கு பிடித்த ஷேப்பில் மைசூர் பாக்கை வெட்டிக்கொள்ளலாம்.
* அந்த மைசூர் பாக்கை எடுத்து வாயில் வைத்தால் நிச்சயம் அப்படியே கரைந்து தொண்டைக் குழிக்குள் இறங்கும்.
- வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- உணவு பொருள் தயாரிக்கும் வளாகத்தில் எலி, பூச்சிகள் நடமாட்டம் இருக்க கூடாது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையை இனிப்பு காரம் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பொருள் தயாரிப்பு அளவை பொறுத்து பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பதிவு சான்றிதழ் பெறாமல் உணவு தயாரிப்பதோ, விற்பதோ உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய சட்டம் 2006 பிரிவு 31-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும்.
எலி, பூச்சிகள் இருக்க கூடாது
தயாரிப்பு பகுதி சமையலறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். தயாரிப்பு பகுதி இருட்டாகவும் சுவர்களில் கரி படிந்திருக்கக்கூடாது. தரைத்தளம் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும், தரைத்தளம் உடைந்த நிலையில் பூச்சிகள். எலிகள், நடமாட்டம் இருக்கம் வகையில் இருக்க கூடாது.
உணவு பொருள் தயாரிப்பு வளாகத்தினுள் ஈக்கள், பூச்சிகள், புகாத வகையில் தடையமைப்பு மற்றும் பூச்சி சுட்டுப்பாடு முறைகள் செயல்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்புக்கு பொட்டலமிடப்பட்ட எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவு தயாரிப்பின் போது சமையல் எண்ணெய் அதிகபட்சமாக ஒரு முறை மட்டுமே சூடாக்கப்பட வேண்டும். சூடேற்றப்பட்ட எண்ணெயில் மேலும் புதிய எண்ணெயை சேர்த்து மீண்டும் மீண்டும் சூடேற்றி சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது.
நகைகள் அணிய கூடாது
இனிப்பு/காரவகைகள் தயாரிப்பில் இயற்கை வண்ணங்கள் சேர்க்கப்படலாம். அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவில் சேர்க்கலாம். அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்க கூடாது மேலும் அணுமதிக்கப்பட்ட வண்ணங்கள் அளவை மீறக்கூடாது.
உணவு தயாரிப்பிற்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நீர் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
உணவு பொருள் தயாரிப்பு விற்பனைக்கான பாத்திரங்கள், இருப்பு உபயோகப்படுத்தும் தூய்மையாக கழுவி நன்றாக உலர்த்தப்பட்டிருக்க வேண்டும். கலன்கள் உணவு சமைக்கும் கையாளும் பணியாளர்கள் தன்சுத்தம் பராமரிக்க வேண்டும். பணியாளர்கள் கைகளில் நகங்களுடன், முழுச்சீருடையற்ற வகையில் எளிதில் கழன்று விழக்கூடிய நகைகள் மோதிரங்களுடன் பணியாற்றக் கூடாது.
புகை பிடிப்பவர்கள் அனுமதிக்க கூடாது
பணியின்போது பணியாளர்கள் கையுறை தலையுறை மேலங்கி அணிந்திருக்க வேண்டும். வெற்றிலை, புகையிலை மெல்லுதல், புகைபிடித்தல், எச்சில் துப்பதல் போன்ற செயல்பாடுகள் உணவு தயாரிப்பு வளாகத்தின் எப்பகுதியிலும் அனுமதிக்கக் கூடாது. உணவு கையாளுபவர்கள் அனைவரும் மருத்துவ தகுதி சான்று பெற்றிருக்க வேண்டும். தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் எவரையும் உணவு தயாரிப்பு வளாகத்தினுள் அனுமதிக்கக் கூடாது.
பேக்கிங் உணவுப் பொட்டலங்கள் மீது உணவு பொருளின் விபரங்கள் அச்சிடப்பட வேண்டும். விபரச்சீட்டு எளிதில் அழிய கூடிய வகையிலோ, கிழியக்கூடிய வகையிலோ, மேலும் ஸ்டிக்கர் வடிவிலோ வீபரச்சீட்டு அமைக்க கூடாது. சில்லரை வகையில் வீற்பனை செய்யப்படும் இனிப்பு/காரம் போன்ற உணவு பொருட்களின் தயாரிப்பு /காலாவதி விபரங்கள் காட்சி படுத்த வேண்டும்.
உணவு பொருட்களை அச்சிடப்பட்ட தாள்கள்/செய்தித் தாள்கள் வைத்து பறிமாறலோ,
தடைசெய்யப்பட்ட நெழி (Carry Bag) பைகளிலோ விற்பனை செய்யக் கூடாது.
உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட இடுபொருட்கள்/நுணை பொருட்களை வாங்கியதற்கான ரசிதுகள்/பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம்/பதிவு சான்று பெறாத உணவு வணிகர்கள் மற்றும் முகவரி தெரியாத உணவு வணிகர்களிடம் உணவு பொருட்களை வாங்கவோ விற்கவோ கூடாது. நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும். இனிப்பு கார வகைகளில் தரம் அளவுக்கு அதிகமான நிறமிகள் பயன்பாடு, லேபிள் விபரம் இல்லாமல் இருந்தால், உணவு பாதுகாப்பு துறையின் வாட் எஸ் அப்பில்.9444042322 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






