search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாலுகா"

    • சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் வஞ்சிப்பாளையம் கிராமம், தாராபுரம் தாலுகாவில் கொக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் வடக்கு தாலுகாவில் கணக்கம்பாளையம் கிராமம், திருப்பூர் தெற்கு தாலுகாவில் இடுவாய் கிராமம், உடுமலை தாலுகாவில் ஆமந்தக்கடவு கிராமம், ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி கிராமம் ஆகியவற்றுக்கு அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் முகாம் நடைபெற உள்ளது.

    காங்கயம் தாலுகாவில் மங்கலப்பட்டி கிராமத்துக்கு முத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், மடத்துக்குளம் தாலுகாவில் மைவாடி கிராமத்துக்கு நரசிங்காபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், பல்லடம் தாலுகாவில் கோடங்கிப்பாளையம் கிராமத்துக்கு காரணம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும் முகாம் நடக்கிறது.

    அனைத்து குடிமைப்பொருள் தனிதாசில்தார்கள், வட்ட வழங்கல் அதிகாரிகள், தனி வருவாய் ஆய்வாளர்கள் முகாமில் கலந்து கொண்டு மனுக்களுக்கு உடனடியாக தீர்வு செய்ய உள்ளனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், நகல் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மேலூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வெங்கடேசன் எம்.பி. பங்கேற்றார்.
    • 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    மேலூர்

    மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் மேலூர் தாலுகாவில் உள்ள கீழையூர், சாத்தமங்கலம், தனியாமங்கலம் சருகு வலையப்பட்டி, வடக்கு வலையபட்டி, வெள்ளலூர் உறங்கான்பட்டி, குறிச்சிபட்டி உட்பட பல்வேறு கிராம மக்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.

    அப்போது பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என மக்களிடம் எம்.பி., உறுதியளித்தார்.

    இந்நிகழ்ச்சிகளில் மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்தர், ஜெயபாலன், வேளாண்மை அலு வலர் செல்வகுமார், உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    வடக்கு வலைய பட்டி, வெள்ளலூர் கிரா மங்களில் விவசாயிகளுக்கு மானிய விலையில் தார்ப்பாய், மரக் கன்றுகள், மருந்து அடிக்கும் ஸ்பிரே ஆகியவற்றை எம்.பி. வழங்கினார். 100 நாள் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களுக்கு அதற்கான அடையாள அடையாள அட்டைகளை வழங்கினார்.

    தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் கட்டப்பட்டு வரும் கீழையூர் பேருந்து நிறுத்தம், தனியாமங்கலம் ரேஷன் கடை ஆகியவற்றையும் வெங்கடேசன் பார்வையிட்டார்.

    • காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 1 மணி வரை அனைத்து தாலுகாக்களில் நடைபெற உள்ளது. அதன்படி அவினாசி தாலுகாவில் ஈட்டிவீரம்பாளையம் கிராமத்துக்கு முட்டியங்கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலும், தாராபுரம் தாலுகாவில் கிளாங்குண்டல் கிராமத்துக்கும், காங்கயம் தாலுகாவில் கீரனூர் கிராமத்துக்கும், மடத்துக்குளம் தாலுகாவில் ராமேகவுண்டன்புதூர் கிராமத்துக்கும், பல்லடம் தாலுகாவில் கே.அய்யம்பாளையம் கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

    இதுபோல் திருப்பூர் வடக்கு தாலுகாவில் செட்டிப்பாளையம் கிராமத்துக்கும், திருப்பூர் தெற்கு தாலுகாவில் மங்கலம் கிராமத்துக்கும், உடுமலை தாலுகாவில் தும்பலப்பட்டி கிராமத்துக்கும், ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி கிராமத்துக்கும் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து குடிமைப்பொருள் தனி தாசில்தார்கள், வட்ட வருவாய் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் பங்கேற்று மனுக்களுக்கு தீர்வு காண்பார்கள். பொதுமக்கள் ரேஷன் கார்டு பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை பெற மனுக்களை பதிவு செய்யலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.
    • திருமருகலை தனி தாலுகாவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு இளைஞர் மன்ற ஒன்றிய பொருளாளர் விமல்ராஜ் தலைமை தாங்கினார்.இளைஞர் மன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், ஒன்றிய தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் மாரிகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் திருமருகலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை கொண்டு வர வேண்டும், பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களின் நலன் கருதி திருமருகலிருந்து திருப்பயத்தங்குடி வரை கூடுதலாக பஸ் இயக்க வேண்டும், ஒன்றிய பகுதிகளில் மழைக்காலங்களில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும், திருமருகலை தனி தாலுக்காவாக உருவாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சட்டத்துறை அமைச்சரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.

    கன்னியகுமரி:

    குமரி மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 19-02-2019 -ல் புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். மேலும், கன்னியாகுமரி மேற்கு கடற்கரையோரம் குறும்பனை முதல் நீரோடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.

    புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டதால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். ஆனால், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குள் நீதிமன்றம் இல்லாததால் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.

    மேற்படி நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக நீதி கிடைக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதி யிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திறந்து வைக்க தே.மு.தி.க. வலியுறுத்தல்
    • மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது தக்கலை தாலுகா அலுவலகம்.

    இந்த தாலுகா அலுவலகத்தை சுற்றி வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், கிராம அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஓய்வெடுக்க போதுமான அறைகள் எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு 2002 வருடத்தில் உள்ள அப்போைதய கலெக்டர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது வரைக்கும் திறக்கபடவில்லை.

    வருவாய் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ள வில்லை. இக்கட்டிடத்தை உடனே பொதுமக்கள் நலன் கருதி திறக்க வேண்டும் என தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் தக்கலை தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் ஓய்வறையை திறக்காவிடில் தே.மு.தி.க. சார்பில் திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

    • மழை சேதங்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
    • முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா பேச்சு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று குமரி மாவட்டம் வந்தார்.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் வருவாய் துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், பொதுப் பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோதி நிர்மலா பேசியதாவது-

    குமரி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் மழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்.

    தற்பொழுது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது‌. இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பந்த ப்பட்ட மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பியுள்ளார்களா? என்பது குறித்த தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.

    மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இரவு பகலாக அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் கண்கா ணிப்பு அதிகா ரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது.
    • இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன.

    பட்டுக்கோட்டை:

    புதிதாக துவங்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல்கிராமத்தை இணைப்பதை எதிர்த்து நம்பிவயல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிவயல் கிராமத்தின் மொத்த பரப்பளவு 881 ஹெக்டர், கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2500 பேர், விவசாய பரப்பளவு 650 ஹெக்டர், நம்பிவயலின் இரண்டு பக்கத்திலும் சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் எதிரெதிர் திசையில் இருக்கிறது. நம்பிவயல் பிரசிடெண்ட் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் என்பவர் இருக்கிறார்.

    இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோ ணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் திருவோணத்துடன் சேர்த்தால் தங்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர். இந்த நம்பிவயல் கிராமத்தின் எம்எல்ஏ பேராவூரணி தொகுதியை சேர்ந்தவர்.

    ஊராட்சி ஒன்றியமோ பட்டுக்கோட்டையை சேர்ந்தது, வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும்காவல் நிலையமோ, திருவோணத்தி லும், இருக்கிறது. அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை பட்டுக்கோட்டையிலும், மின்வாரிய அலுவலகம், கலியராயன் விடுதியிலும், வேளாண்மைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும் இருக்கிறது.

    இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன. இந்நிலையில் புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுக்காவில் நம்பிவயல் கிராமத்தை சேர்ப்பதை எதிர்த்து பட்டுக்கோட்டை - திருச்சி சாலையில் இன்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரவீன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • ரிஷிவந்தியத்தை: தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கவும், அரசு கல்லுாரி அமைக்கக் கோரியும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செய லாளர் பாலசக்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டுதனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    • பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    கபிஸ்தலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவருமான வழக்கறிஞர் மோகன் கலந்து கொண்டு பள்ளியில் படித்த 10 மற்றும்

    12-ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி பேசியதாவது:-

    வருகின்ற 2022-ம் ஆண்டு நம் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்படும்.

    12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை தாலுகாவில் ஜமாபந்தி நடைபெற்றது.
    கீழக்கரை

    கீழக்கரை தாலுகா தாசில்தார் சரவணன் கூறியதாவது:-

    கீழக்கரை வட்டத்திலுள்ள 26 வருவாய் கிராமங்களுக்கு 1431 ஆண்டு வருவாய் தீர்வாய கணக்குகள் ராமநாதபுரம் (ஆய்வு) உதவி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற உள்ளது.   

    பட்டா மாறுதல், பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமான குறைபாடுகளை  மக்கள் நேரடியாக குறைகளை தெரிவிக்கலாம்.  நாளை (1-ந்தேதி) திருஉத்தர கோசமங்கை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 2-ந்தேதி கீழக்கரை உள்வட்டத்தை சேர்ந்தவர்களும். 3-ந்தேதி திருப்புல்லாணி உள்வட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
    ×