search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்முறை தேர்வு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் செய்முறை தேர்வு நடந்தது.
    • செய்முறை தேர்வினை கண்காணிக்க மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மார்ச் 1-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கி 22-ந்தேதி முடிகிறது. பிளஸ்-1 வகுப்பிற்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் நடக்கிறது.

    10-ம் வகுப்பிற்கு மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் செய்முறை தேர்வு நடந்தது. முதல் கட்டமாக இன்று தொடங்கி 17-ந்தேதி வரையிலும் 2-வது கட்டமாக பிப்ரவரி 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர்.

    அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். செய்முறை தேர்வினை கண்காணிக்க மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது.
    • வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உடுமலை:

    பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் அறிவியல் செய்முறை தேர்வுக்கு பதிவு செய்ய, ஆக., 10 முதல், 21 வரை வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் கடந்த 6-ந்தேதி முதல் வரும் 10-ந்தேதி வரை மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்ப படிவம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவோர் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்து, இரண்டு நகல்கள் எடுத்து, வருகிற, 10-ந்தேதிக்குள் (நாளை) திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு கட்டணம், 125 ரூபாய் செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவுச்சீட்டு சமர்ப்பித்து, முன்னதாகவே 'ஹால் டிக்கெட்' பெற்று வருவோர் மட்டுமே, செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாத வர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    • பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது.
    • கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது.

    சென்னை:

    பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

    பொதுத்தேர்வுக்கு முன்னதாக, செய்முறை தேர்வு நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 20-ந் தேதி முதல் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வரை முதலில் அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அதனை நீட்டித்து அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு 31-ந் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. எனவே செய்முறை தேர்வுக்கு வருகை புரியாத அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலநீட்டிப்பு செய்ததற்கான அவசியம் ஏன்? என்பது குறித்து விசாரித்தபோது, செய்முறை தேர்வில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே பிளஸ்-2 மொழிப்பாடங்கள் தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆன சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வில் மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆனது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    செய்முறை தேர்வில் இவ்வளவு பேர் பங்கேற்கவில்லை என்றால், அடுத்ததாக பொதுத்தேர்வு தொடங்கும்போது மொழிப்பாடங்களிலும் மாணவர்கள் 'ஆப்சென்ட்' விவகாரம் கண்டிப்பாக இருக்கும்.

    கால நீட்டிப்பு செய்யப்பட்ட நாட்களில் பங்கேற்காத மாணவர்களை எவ்வாறு செய்முறை தேர்வில் கல்வித்துறை பங்கேற்க வைப்பார்கள்? அதேபோல், பொதுத்தேர்விலும் அவர்களை எப்படி கலந்து கொள்ள செய்வார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

    • 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.
    • வரும் 31ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இதனிடையே ,10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.
    • அகமதிப்பீடு மதிப்பெண்ணை மார்ச் 1 ந் தேதிக்குள் பதி வேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    தாராபுரம் :

    பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ந் தேதி தொடங்கப்பட உள்ளது. தேர்வுக்கு இன்னமும், 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்வுத்துறை இயக்குனரகம் பல்வேறு வழிகாட்டுதல்களை திருப்பூர் மாவட்ட கல்வித்துறைக்கு வழங்கி வருகிறது.

    மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின் போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.

    உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறை தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறைத் தேர்வு செய்து கொள்ள செய்யலாம்.

    செய்முறைத் தேர்வுகளை நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத்தேர்வுக்கு கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கலாம்.செய்முறைத் தேர்வுக்கு அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட படிவத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தேர்வு முடிந்த மதிப்பெண்களை அந்தந்த மாவட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அகமதிப்பீடு மதிப்பெண்தேர்வுத்துறை,பிளஸ் 1 மாணவருக்கான அகமதிப்பீடு மதிப்பெண்ணை மார்ச் 1க்குள் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    பள்ளி தலைமை ஆசிரியர்கள், அகமதிப்பீடு மதிப்பெண்ணை பதிவு செய்வதற்கான வெற்று பட்டியலை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். செய்முறைத்தேர்வு, வருகைப்பதிவு, இணை செயல்பாடு தொடர்பான அகமதிப்பீடு மதிப்பெண்ணை மார்ச் 1 ந் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    • செய்முறை பொதுத்தேர்வு மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது.
    • புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன.

    திருப்பூர் :

    தமிழகம் முழுக்க 10-ம்வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை பொதுத்தேர்வு, மார்ச் 1-ந் தேதி துவங்கி, 9-ந் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வு நடத்த ஆய்வக வசதி கொண்ட பள்ளிகள், புதிதாக மையம் கோரி விண்ணப்பித்த பள்ளிகள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.

    கடந்த ஆண்டுகளில் எழுத்துத்தேர்வுக்கு இரு வாரங்களுக்கு முன்பே, செய்முறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது மூன்று பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளுக்கும் ஒரே சமயத்தில் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதோடு, படிக்க போதிய கால அவகாசமும் வழங்கப்படவில்லை. இதன்மூலம் செய்முறை தேர்வுக்குப் பின் மாணவர்கள் பள்ளிக்கு முழுக்கு போட முடியாது என்பது தலைமையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.

    மேலும் அடுத்த வாரத்திற்குள் செய்முறை தேர்வு நடக்கவுள்ள பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படும். அப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் முழுமையாக இருப்பதை உறுதி செய்ய பிரத்யேக குழு சார்பில் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிளஸ் 2 மாணவர்களின் அகமதிப்பீட்டு மதிப்பெண்களில், பிழை நேர்ந்தால் உரிய பள்ளி தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், எழுத்துத்தேர்வு நடத்தப்படும். செய்முறை பொதுத்தேர்வு 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே நடத்தப்படும். மீதமுள்ள 10 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டு தேர்வுக்காக அந்தந்த பாட ஆசிரியர்களே வழங்குவர்.

    பொதுவாக இம்மதிப்பெண்கள் ஒருமுறை பதிவேற்றினால் மாற்ற முடியாது. பள்ளி எமிஸ் இணையதள பட்டியலில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. இடைநிற்றல் மாணவர்களின் பட்டியலும் இதில் இருப்பதால் வகுப்பு செயல்பாடுகளுக்கான அகமதிப்பீட்டு தேர்வு மதிப்பெண்களை முறையாக பதிவேற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இப்பட்டியலை இணையதளத்தில் பதிவேற்ற இம்மாத இறுதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் உரிய தலைமையாசிரியரே பொறுப்பேற்க நேரிடும் என அரசு தேர்வுகள் துறை எச்சரித்துள்ளது. திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் அகமதிப்பீட்டு மதிப்பெண்களை பதிவேற்ற துவங்குமாறு ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது
    • 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளை நடத்துவதற் கான முன்னேற்பாடு பணி களை கல்வித்துறை அதிகா ரிகள் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் களை வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து உள்ளனர். மேலும் விடைத்தாள்கள் வைக்கும் தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    10-ம் வகுப்பை பொறுத்த மட்டில் வினாத்தாள்களை 8 இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 112 மையங்களில் 23 ஆயிரத்து 346 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொறுத்தமட்டில் 7 இடங் களில் வினாத்தாள்களை வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    86 மையங்களில் 22454 மாணவ-மாணவி கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 வை பொறுத்தமட்டில் 7 இடங்களில் வினாத்தாள்கள் வைக்கப்படுகிறது. 86 மையங் களில் 22,235 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கிறார்கள். 10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள்களை 3 மையங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அந்த தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுத மாணவ- மாணவிகள் தயாராகி உள்ள நிலையில் செய்முறை தேர்வுகள் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை குமரி மாவட் டத்தில் நடக்கிறது. 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் பொது தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • 2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.
    • எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

    குமாரபாளையம்:

    2 ஆண்டுகள் என்.சி.சி. பயிற்சி முடித்த மாணவ, மாணவியர்களுக்கு எழுத்து மற்றும் செய்முறை தேர்வு ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் எஸ்.எஸ்.எம்.லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. எழுத்து தேர்வுக்கு 350 மதிப்பெண்கள், செய்முறை தேர்வுக்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வில் துப்பாக்கியை பிரித்து பூட்டுதல், பாகங்கள் கண்டறிதல், தூரத்தை கணக்கிடுதல், வரைபட பயிற்சி, அணி வகுப்பு பயிற்சி உள்ளிட்டவைகள் செயல்படுத்தி காட்டுவார்கள். ஈரோடு 15-வது பட்டாலியன் சார்பில் கமாண்டிங் அலுவலர் ஜெய்தீப், நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உத்தரவின்படி சுபேதார் அன்பழகன் தலைமை வகிக்க, ஹவில்தார் விக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தேர்வினை நடத்தினர். இந்த தேர்வில் எஸ்.எஸ்.எம். லட்சுமியம்மாள் மெட்ரிக் பள்ளி, ஜே.கே.கே. ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு அரசு மேனிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி, பர்கூர் பழங்குடியினர் அரசு உண்டு உறைவிடப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த 146 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள்

    அந்தோணிசாமி, சிவகுமார், நீலாம்பாள், முருகேசன், ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×