search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 22,235 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள் - செய்முறை தேர்வு அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது
    X

    குமரி மாவட்டத்தில் 22,235 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள் - செய்முறை தேர்வு அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்குகிறது

    • 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது
    • 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ந்தேதி தொடங்கி 20-ந் தேதி முடிவடைகிறது.

    11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 14-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 5-ந்தேதியும், 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதியும் முடிவடைகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளை நடத்துவதற் கான முன்னேற்பாடு பணி களை கல்வித்துறை அதிகா ரிகள் மேற்கொண்டு வரு கிறார்கள்.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் களை வைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து உள்ளனர். மேலும் விடைத்தாள்கள் வைக்கும் தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    10-ம் வகுப்பை பொறுத்த மட்டில் வினாத்தாள்களை 8 இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது. மாவட்டம் முழுவதும் 112 மையங்களில் 23 ஆயிரத்து 346 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு பொறுத்தமட்டில் 7 இடங் களில் வினாத்தாள்களை வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    86 மையங்களில் 22454 மாணவ-மாணவி கள் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ்-2 வை பொறுத்தமட்டில் 7 இடங்களில் வினாத்தாள்கள் வைக்கப்படுகிறது. 86 மையங் களில் 22,235 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கிறார்கள். 10, 11, 12-ம் வகுப்பு விடைத்தாள்களை 3 மையங்களில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அந்த தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு எழுத மாணவ- மாணவிகள் தயாராகி உள்ள நிலையில் செய்முறை தேர்வுகள் அடுத்த மாதம் 1-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை குமரி மாவட் டத்தில் நடக்கிறது. 11, 12 மாணவ-மாணவிகளுக்கு செய்முறை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் பொது தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் பறக்கும் படை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×