search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிளஸ்-2 செய்முறை தேர்வு இன்று தொடங்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    பிளஸ்-2 செய்முறை தேர்வு இன்று தொடங்கியது

    • சென்னை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் செய்முறை தேர்வு நடந்தது.
    • செய்முறை தேர்வினை கண்காணிக்க மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களுக்கு மார்ச் 1-ந்தேதி பொதுத்தேர்வு தொடங்கி 22-ந்தேதி முடிகிறது. பிளஸ்-1 வகுப்பிற்கு மார்ச் 4-ந்தேதி முதல் 25-ந்தேதி வரையில் நடக்கிறது.

    10-ம் வகுப்பிற்கு மார்ச் 26-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் 249 பள்ளிகளில் செய்முறை தேர்வு நடந்தது. முதல் கட்டமாக இன்று தொடங்கி 17-ந்தேதி வரையிலும் 2-வது கட்டமாக பிப்ரவரி 19-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் நடக்கிறது.

    அறிவியல் பாடப்பிரிவு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர்.

    அரசு, மாநகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் செய்முறை தேர்வுக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்திருந்தனர். செய்முறை தேர்வினை கண்காணிக்க மற்ற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    அரசு தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின் படி எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வை நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×