10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு - 31ம் தேதி வரை நீட்டிப்பு

10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. வரும் 31ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு  - 31ம் தேதி வரை நீட்டிப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாக உள்ளது.

இதனிடையே ,10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com