search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.ஜெய்சங்கர்"

    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது.
    • லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு வெளியுறவுத்துறை மந்திரி இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    லிபியா நாட்டை டேனியல் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. மத்திய தரை கடலில் உருவான அந்த புயல், லிபியாவின் கிழக்கு பகுதியை பந்தாடியது. புயல் காரணமாக கனமழை பெய்ததால் அணைகள் நிரம்பின.

    டெர்னா நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணை உள்பட இரண்டு அணைகள் உடைந்தன. இதனால் டெர்னா நகரங்களுக்குள் திடீரென்று வெள்ளம் புகுந்தது. இதில் வீடுகள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

    இதற்கிடையே, லிபியாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 5300-ஐ தாண்டி உள்ளது. மேலும், 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லிபியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களது அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் லிபியா மக்களுக்கு துணை நின்று எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம் என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எகிப்துக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • அதிபர் அப்துலை சந்தித்த அவர் பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியை அவரிடம் வழங்கினார்.

    கெய்ரோ:

    எகிப்து நாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கெய்ரோ சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல்-சிசியை மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்து பேசினார்.

    இதுதொடர்பாக, மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், எகிப்து அதிபர் சிசியை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரிடம், பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தியையும் ஒப்படைத்துள்ளேன். இந்தியா மற்றும் எகிப்து ஆகிய சுதந்திர எண்ணம் கொண்ட இரு நாடுகளும், அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் சமூக கொள்கைகளில் சர்வதேச பங்காற்றி வருகின்றன. அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கான முகாந்திரங்களை இரு நாடுகளும் ஊக்குவித்து வருகின்றன என பதிவிட்டுள்ளார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றார்.
    • கெய்ரோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வெளியுறவுத்துறை மந்திரி மரியாதை செலுத்தினார்.

    கெய்ரோ:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக எகிப்து நாட்டிற்குச் சென்றுள்ளார்.

    எகிப்து தலைநகர் கெய்ரோவிற்குச் சென்ற அவர் அல்-ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கெய்ரோவின், அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் இன்றைய நாள் தொடங்கி உள்ளது. இது சுதந்திரத்திற்கான காரணத்துடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடையது. அனைவருக்குமான நீதி மற்றும் சமத்துவத்திற்காக பாடுபட அவரது செய்தி உலகை ஊக்குவிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

    மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 2019-ல் அல்-ஹொரேயா பூங்காவில் காந்திக்கு மார்பளவு சிலை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

    ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

    • குமரி மாவட்ட மூன்று மீனவர்கள், இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
    • கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் அரசு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.

    டெல்லி:

    கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீட்பு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

    வெளிநாட்டு சிறைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் துயரங்கள் குறித்து தெரிவித்த அவர், கடலில் மீன் பிடிக்க செல்லும்போது வழி தவறி அந்நிய நாட்டு கடல் எல்லைக்குள் செல்லும் மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் கைது செய்வதை அவர் எடுத்துரைத்தார்.

    குறிப்பாக இந்தோனேசிய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று மீனவர்களை அரசு தலையிட்டு விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். சிறையில் இருந்த போது ஒரு மீனவர் உயிரிழந்ததையும் மற்றும் மீனவர்களின் படகுகள் மற்றும் பொருட்கள் அந்த அரசின் வசம் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

    இத்தகைய கைது நடவடிக்கைகளை தவிர்க்க கடல் சார்ந்த நாடுகளுடன் தூதரக ரீதியான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், அத்தகைய பேச்சு வார்த்தைகளின் போது கடலோர பாராளுமன்ற தொகுதிகளின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழு அமைத்து கருத்து கேட்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

    மேலும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் மீனவர்கள் வேலைக்கு சேர்ந்தவுடன் அவர்களது பாஸ்போர்ட்களை வேலை செய்யும் நிறுவனங்கள் பிணையாக எடுத்துக் கொள்வதை சுட்டிக்காட்டிய விஜய்வசந்த் எம்.பி., மீனவர்கள் நாடு திரும்ப விரும்பும் போது பாஸ்போர்ட் கிடைக்காமல் தவிப்பதாக கூறினார்.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த எட்டு மீனவர்கள் ஓமன் நாட்டில் இத்தகைய சந்தர்ப்பத்தில் சிக்கி அலை கழிக்கப்படுவதையும் அப்போது அவர் தெரிவித்தார்.  இந்திய தூதரகங்கள் இந்த விஷயங்களில் தலையிட்டு மீனவர்களை உடனடியாக இந்தியாவிற்கு பத்திரமாக திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ×