தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on

சென்னை:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ஏற்கனவே 95 மீன்பிடி படகுகளும், 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இன்று மேலும் 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

எனவே இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அண்மையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com