search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரீசியன் பலி"

    • வேலை செய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, விருதம்பட்டு அடுத்த மோட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 56). இவர் நேற்று தனது வீட்டு குளியல் வேலை அறையில் ஒயரிங் செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கிருஷ்ணன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார்.

    உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சை க்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது.
    • பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி கிராம த்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவர் எலக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவும் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ள னர்.

    இந்த நிலையில் கவியரசு கொமார கவுண்டன் பாளை யம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதை கண்ட உடன் இருந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவியரசு உடல் பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எலக்ட்ரீசியன் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகில் உள்ள ஒட்டுப்பட்டியை சேர்ந்த முருகன் மகன் பாண்டியராஜன் (வயது23). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார்.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது45), எலக்ட்ரீசியன். இவர், மோட்டார் சைக்கிளில் ஆயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.
    • அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புளிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது45). எலக்ட்ரீசியன். இவர் தனது உறவினரான பென்னாகரம் எம்.கே.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் வீட்டிற்கு எலக்ட்ரீசியன் வேலை செய்ய வந்துள்ளார்.

    புதிய வீட்டிற்கு மின் இணைப்புகள் வழங்குவதற்காக அருகில் உள்ள வீட்டில் இருந்து மின்சாரம் எடுக்கும் போது மின்சாரம் பாய்ந்ததில் முருகன் தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது.

    இது குறித்து பென்னாகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஜம்பை அருகே உள்ள சின்ன வடமலை பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி (23). எலக்ட்ரீசியன்.

    சம்பவத்தன்று மயில்சாமி ஒரு வீட்டில் எலக்ட்ரிக்கல் சம்பந்தமான வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது யு.பி.எஸ்-ஐ ஒரு அறையில் இருந்து மற்றொரு அறையில் மாற்றி அதற்கான மின்சார வயர்களை இணைத்து கொண்டிருந்தார்.

    அப்போது மெயின் பாக்ஸ் ஸ்விட்சை அணைக்கவில்லை என கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மயில்சாமியை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மயில்சாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள வள்ளிபுரம் கருக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ்குமார் (40). எலக்ட்ரீசியன். இவர் சிவகிரி பகுதியில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

    சதிஷ்குமார் நேற்று இரவு வேலை முடிந்து சிவகிரியில் இருந்து இரவு 10 மணி அளவில் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது சிவகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது.

    சதிஷ்குமார் மாராங்காட்டூரில் இருந்து வள்ளிபுரம் கருக்கம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிலுவம்பாளையம் என்ற பகுதியில் வந்த போது வளைவில் திரும்பினார். மழை பெய்து கொண்டு இருந்ததால் ரோடு ஈரப்பதத்துடன் காணப்பட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விபத்தானது.

    இதில் காருக்குள் இருந்த சதிஷ்குமார் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரம் என்பதால் இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை அந்த பகுதிக்கு வந்த விவசாயிகள் பார்த்த போது தான் கார் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் சிவகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காருக்குள் பிணமாக கிடந்த சதிஷ்குமார் உடலை மீட்டனர். தொடர்ந்து கிரேன் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் வாய்க்காலில் கவிழ்ந்து கிடந்த காரை மீட்டனர்.

    தொடர்ந்து சதிஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான சதிஷ்குமாருக்கு அபிநயா என்ற மனைவியும், ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    • அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. படுகாயமடைந்தவர்களை பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
    • சிகிச்சையில் இருந்த எலக்ட்ரீசியன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    பழனி:

    பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர் அம்மாபட்டி (வயது 35). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான அழகாபுரியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சண்முகா நதி பகுதிக்கு வந்தார்.

    அப்போது நவீன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    சிகிச்சையில் இருந்த அம்மாபட்டி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா மற்றும் நவீன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    வேலூர் கலாஸ்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 40) எலக்ட்ரீசியன். இவர் நேற்று உமராபாத் அருகே மாச்சம்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அவரது பைக்கில் வேலூருக்கு புறப்பட்டு வந்தார். அவரது நண்பர் ஒருவரும் உடன் வந்தார்.

    ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் பாலாற்றில் குளிப்பதற்காக பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினர். சரவணன் தனது உடைகளை கழட்டி பைக் மீது வைத்து விட்டு பாலாற்றில் குளிக்க இறங்கிய போது அதிக அளவில் தண்ணீர் வரும் பாலாற்றின் தரைப்பாலம் அருகே உள்ள சுழலில் சிக்கி மூழ்கினார். இதைப் பார்த்த நண்பர் கூச்சலிட்டார்.

    உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் சரவணன பிணமாக மீட்டனர்.

    சரவணனுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஜெயந்தி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    ஆம்பூர் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது.
    • இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.

    விபத்தில் இறந்த முத்துக்குமாருக்கு ஜோதி புஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×