

பழனி:
பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூரைச் சேர்ந்தவர் அம்மாபட்டி (வயது 35). இவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு தனது நண்பரான அழகாபுரியைச் சேர்ந்த புரோட்டா மாஸ்டர் ராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சண்முகா நதி பகுதிக்கு வந்தார்.
அப்போது நவீன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். பழனி அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சையில் இருந்த அம்மாபட்டி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். ராஜா மற்றும் நவீன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.