கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
Published on

மாமல்லபுரம்:

கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது45), எலக்ட்ரீசியன். இவர், மோட்டார் சைக்கிளில் ஆயப்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த ஏகாம்பரம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சதுரங்கபட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com