மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது.பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி
Published on

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த காரப்பாடி கிராம த்தை சேர்ந்தவர் கவியரசு (வயது 45). இவர் எலக்ட்ரீசி யனாக வேலை செய்து வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவும் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ள னர்.

இந்த நிலையில் கவியரசு கொமார கவுண்டன் பாளை யம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பழுது அடைந்த மின் மோட்டாரை சரி செய்து கொண்டிருந்தார்.

அப்போது கவியரசன் மீது திடீரென எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்தது. இதில் அவர் கீழே விழுந்தார். இதை கண்ட உடன் இருந்த பிரகாஷ் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மரு த்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கவியரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவியரசு உடல் பிரேதபரி சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com