பாலாற்றில் மூழ்கி வேலூர் எலக்ட்ரீசியன் பலி

6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர் போலீசார் விசாரணை
பாலாற்றில் மூழ்கி வேலூர் எலக்ட்ரீசியன் பலி
Published on

ஆம்பூர்:

வேலூர் கலாஸ்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணன் (வயது 40) எலக்ட்ரீசியன். இவர் நேற்று உமராபாத் அருகே மாச்சம்பட்டு பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவரது பைக்கில் வேலூருக்கு புறப்பட்டு வந்தார். அவரது நண்பர் ஒருவரும் உடன் வந்தார்.

ஆம்பூர் அருகே உள்ள பச்சகுப்பம் பாலாற்றில் குளிப்பதற்காக பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினர். சரவணன் தனது உடைகளை கழட்டி பைக் மீது வைத்து விட்டு பாலாற்றில் குளிக்க இறங்கிய போது அதிக அளவில் தண்ணீர் வரும் பாலாற்றின் தரைப்பாலம் அருகே உள்ள சுழலில் சிக்கி மூழ்கினார். இதைப் பார்த்த நண்பர் கூச்சலிட்டார்.

உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கும் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் சரவணன பிணமாக மீட்டனர்.

சரவணனுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஜெயந்தி என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஆம்பூர் தாலுகா போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com