search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமராவதி"

    • ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம்.
    • முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    தாராபுரம்:

    ஆடி அமாவாசையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை அமராவதி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    வாழை இலையில் அரிசி மாவால் பிண்டம் பிடித்து, வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி ஆகியவற்றை படைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் அந்த பிண்டத்தை ஆற்றில் கரைத்து வழிபாடு செய்தனர். ஆடி மாதம் முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சிணாயனம். அதாவது சூரியன் தெற்கு நோக்கி நகரத் தொடங்கும் காலம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது.

    தட்சிணாயனம் தேவர்களுக்கு இரவுப் பொழுது. எனவே, இந்த காலத்தில் நம்மை பாதுகாக்கவும், நமக்கு அனைத்து நன்மைகளையும் தந்து ஆசீர்வதிக்கவும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் முதல் தேதியன்று பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வரத் தொடங்குகின்றனர்.

    கருட புராணத்தில் இந்த பித்ருலோகம் சூரிய மண்டலத்தில் இருந்து பல லட்சம் மைல்கள் தொலைவில் இருப்பதாக சொல்லப்பட்டு இருக்கிறது. பித்ருலோகத்தில் இருந்து புறப்படும் அவர்களை வரவேற்கும் விதமாக, ஆடி மாத அமாவாசை தினத்தில் அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க வேண்டும் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருந்ததால் சில இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதேப்போல் உடுமலை அமராவதி ஆற்றங்கரை மற்றும் திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில் பக்தர்கள் புனிதநீராடினர். 

    • நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
    • அணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.

    மடத்துக்குளம் : 

    பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திட்டத்தில் நான்கு வழிச்சாலையுடன் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இணைவதற்கான அணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் மடத்துக்குளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, நான்கு வழிச்சாலைக்கு செல்லும் அணுகுசாலையில் அமராவதி பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. அந்த இடத்தில் கால்வாயை கடக்கும் வகையில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக கால்வாயின் ஒரு பகுதி மூடப்பட்டு பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

    • பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலையை அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்பட்டு வருகிறது. வனப்பகுதியில் பெய்யும் மழை மற்றும் அதன் வழி உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்தி அணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பி.ஏ.பி பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் செய்யப் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது. அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பா ளையம், குடிமங்கலம், மடத்து க்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதே போன்று அமராவதி அணை மூலமாக பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப் பகுதியில் உள்ள நீராதாரங்கள் நீர்வரத்து இல்லாமல் வறண்டு விட்டது. அணைகளுக்கு வரும் வரும் சுனைகளின் தண்ணீரும் முற்றிலுமாக நின்று விட்டது. இதனால் நீர்வரத்து இல்லாமல் அணைகள் வறண்டு காணப்படுகின்றன. நீர் நிரம்பி நின்ற இடங்கள் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில்:- வெப்பம் அதிகரித்து இருக்கும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்வதற்கு உண்டான சூழல் நிலவி வருகிறது. அங்கேங்கே அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யவில்லை. இதனால் கவலையாக உள்ளது. மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணைகளில் தூர்வாரும் பணியை தொடங்கி நீர் நிற்கும் தேங்கி பரப்பை அதிகப்படுத்த வேண்டும். நவீன இயந்திரங்கள் மூலம் ஆழப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்றனர்.

    நேற்று காலை நிலவரப்படி 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில் 30.71 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 129 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 116 கனஅடி தண்ணீரும் நல்லாற்றில் இருந்து 45 கனஅடி தண்ணீரும் வெளியேற்ற ப்படுகிறது. அணைப்பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், நல்லாறு பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 55.06 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த தகவலை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாவர் அஜித்.
    • 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படம் வெளியாகவுள்ளது.

    1993 ஆம் ஆண்டு செல்வா இயக்கத்தில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் திரையுகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித். சோழா கிரியேஷன்ஸ் சார்பில் சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்த இப்படத்தில் சங்கவி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவிதா, நாசர், தலைவாசல் விஜய், சார்லி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    அமராவதி
    அமராவதி


    இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமராவதி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதன்படி இப்படம் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மே மாதம் டிஜிட்டலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மீண்டும் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    • 55,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது.
    • நெல் மக்காச்சோளம், காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 55,000 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்ந அணை மூலம் புதிய ஆயக்கட்டு மற்றும் அமராவதி ஆற்றின் பழைய ஆயக்கட்டின் 8 ராஜ வாய்க்கால் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு, பழைய ஆயக்கட்டு பகுதிகளில் நெல் மக்காச்சோளம், காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. புதிய ஆயக்கட்டில் கரும்பு, பீட்ரூட் போன்றவை அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    இந்நிலையில் தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கி தீவிரமடைந்ததை அடுத்து அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து கடந்த மாதம் 15ந்தேதி அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து புதிய ஆயக்கட்டு மற்றும் அமராவதி ஆற்றின் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதனால் கல்லாபுரம், ராமகுளம், காரதொழுவு, கணியூர், சோழமாதேவி, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவு பணிகளுக்காக வயலை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்‌. இப்பகுதிகளில் சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு செய்யப்படும் என்பதால் அதற்கு தேவையான உரங்களை வேளாண் துறை போதிய அளவு கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    தற்போது விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு காரணமாக டிராக்டர் உள்ளிட்ட எந்திரங்களின் தேவை இப்பகுதிகளில் அதிகரித்துள்ளது. தற்போது அமராவதி பாசனப் பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்ததை விட அதிக அளவில் பெய்துள்ளதாலும், முன்கூட்டியே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அதிக பரப்பளவில் நெல் நடவு செய்யப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    அமராவதி அணையிலிருந்து கடந்த ஜுலை 23-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு மேலாக உபரியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட குழு தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் வறண்ட பிரதேசமாக தாராபுரம் வட்டம் உள்ளது. இந்த வட்டத்தின் ஒருபகுதி பாசன வசதி பெற உப்பாறு அணை பி.ஏ.பி. திட்டத்தில் ஊட்டு நீர் பெறும் அணையாக ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்டது. பி.ஏ.பி. திட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நான்கே கால்  லட்சமாக பாசன பரப்பு விரிவடைந்த பின்னர் பி.ஏ.பி. பாசன பகுதிக்கே பற்றாக்குறையாக போனது.

    ஆகவே உப்பாறு அணைக்கு தண்ணீர் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனால் கடந்த 50 அண்டுகளில் 42 ஆண்டுகள் அமராவதி அணை பருவமழை காலங்களில் அணை நிரம்பி உபரிநீராக ஆற்றில் செல்கிறது.

    உபரியாக செல்லும் நீரை பயன்படுத்தி உப்பாறு அணைக்குக் கொண்டுசென்று அங்கிருந்து வட்டமலைக் கரை அணைக்கு கொண்டு செல்லலாம் என கடந்த தி.மு.க. ஆட்சியில் ரூ.18 கோடிக்கு போடப்பட்ட திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

    தற்போது அமராவதி அணையிலிருந்து கடந்த ஜுலை 23-ம் தேதி முதல் 3 மாதத்துக்கு மேலாக உபரியாக நீர் வெளியேற் றப்பட்டு வருகிறது. நவம்பர் 1-ம் தேதி முதல் வினாடிக்கு 2000 கனஅடி நீர் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

    இதில் ஒரு டிஎம்சி நீர் இருந்தால் கூட உப்பாறு அணையும், வட்டமலைகரை அணையும் நிரப்ப முடியும் என்பதால் அமராவதிஆறு-உப்பாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற  வேண்டும்.  அணை இருந்தும் வறண்ட பகுதியாக தவித்து வரும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம், காங்கயம் வட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பாசன வசதி பெற்று விவசாய பணிகளில் ஈடுபட இயலும்.

    ஆகவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அமராவதி ஆற்றின் வெள்ள உபரிநீரைக் கொண்டு உப்பாறு அணை மற்றும் வட்டமலைக்கரை ஓடை அணைகளை நிரப்ப அமராவதி-உப்பாறு கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
    ×