அமராவதி பிரதான கால்வாய் மீது பாலம் கட்டும் பணி தீவிரம்

நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதுஅணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on: 

மடத்துக்குளம் : 

பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.திட்டத்தில் நான்கு வழிச்சாலையுடன் பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் இணைவதற்கான அணுகுசாலைகள், குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் மடத்துக்குளம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடந்து, நான்கு வழிச்சாலைக்கு செல்லும் அணுகுசாலையில் அமராவதி பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது. அந்த இடத்தில் கால்வாயை கடக்கும் வகையில், உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக கால்வாயின் ஒரு பகுதி மூடப்பட்டு பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com