search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaigaichelvan"

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி என்று வைகைசெல்வன் கூறியுள்ளார். #Vaigaichelvan #Thirumavalavan

    சென்னை:

    சென்னையில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் அளித்த பேட்டி வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கூட்டணிக்காக அ.தி.மு.க. கதவு திறந்திருக்கிறது. வருகிற 8-ந்தேதி அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

    தி.மு.க. அணியில் இடம் பெறாத கட்சிகள் எங்களுடன் கூட்டணி பற்றி பேசி வருகின்றனர். பா.ஜனதா மற்றும் பா.ம.க. ஆகிய கட்சிகள் எங்களுடன் கூட்டணி வைக்க விரும்புகிறது. அது தொடர்பான ஆலோசனையும் நடந்து வருகிறது.

    கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்பதாக வெளியில் தகவல் பரப்பப்படுகிறது. அது உண்மையல்ல. ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சக்தி என்ன என்பது தெரியும். அதிக தொகுதிகளை கேட்டு வாங்கினால் அது தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிடும்.


     

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் தி.மு.க. கூட்டணி உடையும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தால் சிதம்பரம் தொகுதியில் ஜெயிப்பது உறுதி. அவர் ஒரு தொகுதி அல்லது 2 தொகுதி எதிர் பார்ப்பதாக தெரிகிறது.

    கடந்த காலங்களில் அவர் அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தபோதுதான் மகத்தான வெற்றியை பெற முடிந்தது. எனவே வெற்றி முக்கியமா? தொகுதி முக்கியமா? என்பதை திருமாவளவன் முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Vaigaichelvan #Thirumavalavan

    தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி என கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் கூறியுள்ளார். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran

    சேலம்:

    அ.தி.மு.க. 47-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் சேலம், அஸ்தம்பட்டி மணக்காட்டில் நடந்தது.

    இந்த பொதுகூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகை செல்வன் பேசும்போது, தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

    தமிழகத்தில் கடன் தாரர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். இவர்களால் கட்சியை நடத்த முடியுமா? அதே போல் தினகரனும் ஓட்டு போட்டவர்களுக்கு கடன் வைத்துள்ளார். ரூ.20 ரூபாய் கொடுத்து ரூ.10 ஆயிரம் தருவதாக உறுதி கூறி ஓட்டையும் பெற்று கொண்டு ஏமாற்றி வருகிறார். இவர்களா தமிழகத்தை ஆள போகிறார்கள்?

     


    தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்.கள் கட்சிக்கு துரோகம் செய்தவர்கள். பதவி தருவதாக கூறி தினகரன் அவர்களை ஏமாற்றிவிட்டார்.

    தினகரன் அணி ஒரு பிராய்லர் கோழி. முட்டை போடாது, குஞ்சு பொறிக்காது, கறிக்கு மட்டும் தான் உதவும். தினகரனுக்கு அரசியல் தெரியவில்லை. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்காக முள்கிரீடத்தை சுமக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினர். #Vaigaichelvan #ADMK #TTVDhinakaran

    ×