எப்போதும் அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்- வைகை செல்வன்

தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை. சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
எப்போதும் அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தான்- வைகை செல்வன்
Published on

சேலம்:

அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பிறந்த வாழ்த்து தெரிவித்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொது செயலாளராக எப்போதுமே எடப்பாடி பழனிசாமி தான். இன்றும், என்றும் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அதில் எந்த மாற்றமும் இல்லை தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com