என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைகை செல்வன்"

    • அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை.
    • அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

    திருமாவளவனை சந்தித்தது தொடர்பாக கேட்ட கேள்விக்கு "திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது. தற்போது இதை மட்டும்தான் தெரிவிக்க முடியும்" என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேட்ட கேள்விக்கு, அவர் அளித்த பதில் பின்வருமாறு:-

    நட்பின் அடிப்படையிலேயே சந்தித்தேன். வி.ஐ.டி. வேந்தர் ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அப்போதுதான் வைகைச் செல்வனுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் மதச்சார்பின்மை பேரணி நடத்தினோம். அதற்காக திருச்சி சென்று தனியார் விடுதியில் தங்கியிருந்தோம்.

    நான் தங்கிய அறையின் அருகில் அவர் தங்கியிருந்தார். எனக்கு ஒரு புத்தகத்தை பரிசு அளித்தார். விடுதலை போரில் சீர்காழி என்ற புத்தகத்தை வழங்கினார். பலரின் முன்னிலையில் நடந்த சந்திப்பு. அரசியல் ஏதும் பேசாமல் நடந்த சந்திப்பு. அவர் இலக்கிய தளத்தில் என்ன செய்து வருகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த கொண்ட ஒரு தருணம். அவ்வளவுதான்.

    அவரும் அரசியல் பேசவில்லை. நானும் அரசியல் பேசவில்லை. அவர் ஏன் அப்படி கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு அவர்தான் விளக்கம் சொல்ல வேண்டும். 2026-ல் ஆட்சியில் பங்கு என்ற கேள்விக்கான சூழ்நிலை எழவில்லை இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

    • திருச்சியில் திருமாவளவனை வைகைச் செல்வன் சந்தித்து பேசியுள்ளார்.
    • சந்திப்பு குறித்து கேள்விக்கு திமுக கூட்டணியில் ஓட்டை விழுந்துள்ளது என பதில் அளித்தார்.

    காஞ்சிபுரம் மாநகராட்சியின் குடிநீர், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து இன்று காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாலாஜாபாத் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகைச் செல்வனிடம், திருமாவளவன் சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வைகைச் செல்வன், "திமுக கூட்டணியில் தற்போது ஓட்டை விழுந்துள்ளதாகவும் இதற்கான பதில் விரைவில் கிடைக்கும்" எனத் தெரிவித்தார்.

    அந்த ஓட்டைக்காகத்தான் திருமாவளவனை சந்தித்தீர்களா? என்ற கேள்விக்கு, "இப்போது என்னால் இவ்வளவுதான் கூற முடியும். உங்களுக்கு நான் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறேன்" என பதில் அளித்தார்.

    மதச்சார்பின்மை காப்போம் என்ற பேரணி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. அப்போது வைகைச் செல்வன் திருமாவளவனை சந்தித்து பேசியுள்ளார்.

    • தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை.
    • சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.

    சேலம்:

    அ.தி.மு.க பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பிறந்த வாழ்த்து தெரிவித்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பொது செயலாளராக எப்போதுமே எடப்பாடி பழனிசாமி தான். இன்றும், என்றும் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அதில் எந்த மாற்றமும் இல்லை தி.மு.கவின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல, சோதனை மின் தட்டுப்பாட்டினை சீர் செய்யாமல் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×