என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு: இ.பி.எஸ்.க்கு Z+ பிரிவு பாதுகாப்பு வேண்டும் - வைகைச்செல்வன்
- செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு வந்தார்.
- செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய பரபரப்பு அடங்குவதற்குள், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனும் ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசி விட்டு சென்னை திரும்பி இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனிடம் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கஉள்ளதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.






