search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana assembly elections"

    • இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
    • தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானாவை சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் வாக்களிப்பில் சாதனை நிகழ்த்தி ஜனநாயகத்தை வலுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஓட்டுரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, "தெலுங்கானா சகோதர, சகோதரிகள் திரளாக வாக்களிப்பில் கலந்து கொள்ள வேண்டும். தெலுங்கானா சிறந்த கட்டமைப்புக்கு வாக்களியுங்கள். காங்கிரசை வெற்றி பெற செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தெலுங்கானா மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    • ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு.
    • காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை.

    தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது, டிசம்பர் 3ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

    ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும ஆட்சி அமைப்பதை தடுக்கவும், ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டமிட்டுள்ளார்.

    மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஷர்மிளா அறிவித்துள்ளார்.

    • ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது.
    • மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டி நிலவுகிறது.

    ஆளும் கட்சியான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே யார் ஆட்சியை பிடிப்பது எனும் போட்டி கடுமையாக உள்ளது.

    தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சி தற்போது, பாரத் ராஷ்டிர சமிதி கட்சியாக தேசிய அவதாரம் எடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகரராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்கி, அக்கூட்டணி மத்தியில் ஆட்சி செய்ய வேண்டும் என தேசிய அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

    தெலுங்கானாவில் இவர் மீதும், இவரது ஆட்சி மீதும் சற்று அதிருப்தி நிலவி வருகிறது. என்றாலும், இவருக்கு எம்.ஐ.எம். கட்சி மறைமுகமாக ஆதரவு தருவதாலும், தெலுங்கானாவில் முஸ்லிம்களின் வாக்கு அதிகம் இருப்பதாலும், சந்திரசேகர ராவே 3-வது முறையாக முதல்வராக ஆட்சி அமைப்பார் என கூறப்படுகிறது.

    ஆனால், தெலுங்கானாவில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்து, இதுவரை நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், 46 இடங்களில் வெற்றி பெற்று ஐதராபாத்தில் 2-வது செல்வாக்கு மிக்க கட்சியாக பா.ஜ.க. தன்னை வெளிப்படுத்தி கொண்டது.

    காங்கிரஸ் தான் தனது எதிரி என்பதை இதன் மூலம் சந்திரசேகர ராவ் மாற்றி கொண்டு, பா.ஜ.க.வை குறிவைக்க தொடங்கினார்.

    ராகுல்காந்தி பாத யாத்திரை மேற்கொண்டதும் அங்கு மீண்டும் காங்கிரசாருக்கு புத்துயிர் பிறந்தது போல் ஆனது. இதனை தொடர்ந்து அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பா.ஜ.க. வை வீழ்ச்சி அடைய செய்து, காங்கிரஸ் வெற்றி பெற்றதால், தெலுங்கானா காங்கிரஸாருக்கு புதிய உற்சாகம் பிறந்துள்ளது.

    இம்முறை கண்டிப்பாக தெலுங்கானாவையும் நாம் தான் கைப்பற்றுவோம் என காங்கிரஸ் கட்சியினர் மார்தட்டி கூறும் அளவிற்கு சென்று விட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. , தெலுங்கானா தலைமையை மாற்றியது. மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில், மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டியை தெலுங்கானா மாநில தலைவராக அறிவித்தது.

    இதனை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக ஆகர்ஷ் தெலுங்கானா எனும் திட்டத்தின் கீழ் முக்கிய பிரபலங்களை பா.ஜ.க.வில் இழுக்கும் படலம் தொடங்கி விட்டது. இந்நிலையில்தான் நடிகை ஜெயசுதா பா.ஜ.க.வில் இணைந்தார்.

    இதனை தொடர்ந்து, வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. இதில், மூத்த நடிகை விஜயசாந்தி மேதக் தொகுதியிலும், நடிகை ஜெயசுதா செகந்திராபாத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை மந்திரி கிஷண் ரெட்டி அம்பர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இது தவிர வேணு கோபால் ரெட்டி, முரளிதர ராவ், இந்திர சேனா ரெட்டி, விவேக், இந்திர லட்சுமி நாராயணா, ராமச்சந்திர ராவ், பிரபாகர், ஆச்சாரி, மகேஸ்வர ரெட்டி, ராத்தூர் ரமேஷ், பாபு மோகன், ஸ்ரீகாந்த், விஸ்வேஸ்வர ராவ், மகேஸ்வர் ரெட்டி, நரசைய்யா கவுட், பிரதீப் ராய், ராகேஷ் ரெட்டி, ஹரிஷ் பாபு, சத்திய நாராயணா, கிஷன் ரெட்டி, லட்சுமண், பண்டி சஞ்சய், ஷோயம் பாபுராவ், ஈட்ல ராஜேந்தர், ரகுவந்தன் ராவ், டி.கே. அருணா, ஜிதேந்திரா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    வரும் தேர்தலில் "டார்கெட் 75" என்ற இலக்கு நிர்ணயித்து பா.ஜ.க.வினர் 75 இடங்களில் வெற்றி பெற வேண்டுமென பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வலியுறுத்தி உள்ளார். 2-ம் கட்டமாக 45 பேர் பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பெறுகொலு கிராம மக்கள் வாக்குசாவடிக்கு 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஓட்டு போட்டுள்ளனர். #TelanganaAssemblyElections
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது.

    2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களை கொண்ட தெலுங்கானா தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவானது.

    இங்கு ஓட்டுப்போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்ற 16 கிலோ மீட்டர் தூரம் கிராம மக்கள் நடந்து வந்துள்ளனர். ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டம் பெறுகொலு என்ற மலை கிராமம் தெலுங்கானா- சத்தீஸ்கர் மாநில எல்லையில் உள்ளது.

    மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜனகலபள்ளி கிராமத்தில் வாக்குசாவடி மையம் அமைக்கப்பட்டது.

    வாகன வசதி இல்லாத பெறுகொலு கிராம மக்கள் ஓட்டு போடுவதற்காக 16 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டு போட்டனர்.

    காலை 8 மணிக்கு தங்களது பயணத்தை தொடங்கிய அவர்கள் மதியம் 12.30 மணிக்கு வாக்குசாவடி மையத்தை வந்தடைந்தனர். அக்கிராமத்தில் 56 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 பேர் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்தனர்.



    6 பேர் குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும் என்பதால் ஓட்டு போட வர முடியவில்லை. வயதான வாக்காளர்கள் 10 பேர் 6-ந்தேதி இரவு தங்களது பயணத்தை தொடங்கினர். அவர்கள் இரவு ஜனகலபள்ளி கிராமத்தில் தங்கி காலை தங்களது ஓட்டுக்களை போட்டனர்.

    பெனுகொலு கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் கூறுகையில், “எங்களிடம் வயதானவர்கள் கூறும் போது ஓட்டு போடவில்லை என்றால் அரசு ஆவணங்களில் தாங்கள் இறந்து விட்டதாக பரிசீலித்து விடுவார்கள் என்று கூறினார்கள். #TelanganaAssemblyElections
    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சல்லா வம்சி மீது மர்ம நபர்கள் இன்று காலை திடீரென தாக்குதல் நடத்தினர். #TelanganaAssemblyElections #AttackCongressCandidate #ChallaVamshiChandReddy
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

    அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்கள் குடும்பத்தினருடன் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

    மகபூப் நகரில் உள்ள கல்வாகுர்தி தொகுதியில் சல்லா வம்சி சந்த் ரெட்டி என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.  

    இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சல்லா வம்சி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.



    இதில் மயக்கம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TelanganaAssemblyElections #AttackCongressCandidate #ChallaVamshiChandReddy
    தெலுங்கானா தேர்தலில் வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார். #TelanganaAssemblyElection #BJP #Manifesto
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் லட்சுமண் நேற்று வெளியிட்டார்.

    அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * விழாக்காலங்களில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக பசுமாடுகள் வினியோகிக்கப்படும்.

    * பணம் கொடுத்து மதமாறுவதை தடுக்க மதமாற்று தடை சட்டம் கொண்டு வரப்படும்.

    * 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்.

    * பட்டம் மற்றும் முதுநிலை படிப்பு மாணவிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டிகள்.

    * பட்டதாரி மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வினியோகம்.

    * மாநிலத்தில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளை பேசுவதற்கு வசதியாக ரூ.100 கோடியில் மொழியியல் போர்டு.

    இவை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பாரதீய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது.  #TelanganaAssemblyElection #BJP #Manifesto
    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விஜயசாந்தி பிரசாரம் செய்துவரும் நிலையில், விரைவில் நக்மா பிரசாரம் செய்ய உள்ளார். #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான ராஷ்டீரிய சமிதி கட்சி ஆட்சி நடந்தது.

    முதல்வர் சந்திரசேகரராவ் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முடிவு செய்து ஆட்சியை கலைத்தார்.

    இதையடுத்து தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

    சந்திரசேகரராவ் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளார். அவர்கள் தொகுதிகளில் தேர்தல் பணியில் மும்முரமாக உள்ளனர்.



    தெலுங்கானா தேர்தலில் காங்கிரசும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடிகையும், நிர்வாகியுமான நக்மா பிரசாரம் செய்கிறார். இதே போல் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதிக்கிறார்.

    நடிகை விஜயசாந்தி ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மெகபூபா நகர் மாவட்டத்தில் வாக்காளர்களை சந்தித்து காங்கிரசுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியை வீழ்த்த காங்கிரஸ் திவிரமாக உள்ளது. இதனால் பிரசாரத்தில் நட்சத்திர பட்டாளங்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது. #TelanganaAssemblyElections #Vijayashanti #Nagma

    தெலுங்கானா சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக இருக்கிறார். இங்கு அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடைபெற வேண்டும்.

    ஆனால் சட்டசபையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் ஐதராபாத்தில் கவர்னர் இ.எஸ்.எல். நரசிம்மனை திடீரென நேரில் சந்தித்து பேசினார்.

    அவரது மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியுமான கே.டி.ராமாராவ் டெல்லியில் சில முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். தெலுங்கானா அரசின் தலைமை ஆலோசகரும், முன்னாள் தலைமை செயலாளருமான ராஜிவ்சர்மா டெல்லி சென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவை சந்தித்து பேசினார்.



    இந்த ஆண்டு இறுதியில் சத்திஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மாநிலம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. அத்துடன் சேர்த்து தெலுங்கானாவுக்கும் சட்ட சபை தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

    இவர்களின் இந்த திடீர் சந்திப்பு தேர்தல் குறித்து பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியை டெல்லி சென்று சந்திக்க இருப்பதாக முதல்-மந்திரி சந்திர சேகரராவ் தெரிவித்துள்ளார். #ChandrasekharRao
    ×