என் மலர்
இந்தியா

தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்- காங்கிரசுக்கு ஒய்.எஸ்.சர்மிளா ஆதரவு
- ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு.
- காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை.
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது, டிசம்பர் 3ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
இந்நிலையில், தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியும், ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சியின் தலைவருமான ஷர்மிளா அறிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அரசு மீண்டும ஆட்சி அமைப்பதை தடுக்கவும், ஓட்டுகள் பிளவு படாமல் காங்கிரஸ் வெற்றி பெறும் வகையில் ஆதரவு அளிக்க ஒய்.எஸ்.ஷர்மிளா திட்டமிட்டுள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தாலும் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஷர்மிளா அறிவித்துள்ளார்.
Next Story






