என் மலர்

  நீங்கள் தேடியது "mahbubnagar"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சல்லா வம்சி மீது மர்ம நபர்கள் இன்று காலை திடீரென தாக்குதல் நடத்தினர். #TelanganaAssemblyElections #AttackCongressCandidate #ChallaVamshiChandReddy
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

  அரசியல் கட்சி தலைவர்கள், எம்பி-எம்எல்ஏக்கள் மற்றும் பிரபலங்கள் குடும்பத்தினருடன் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

  மகபூப் நகரில் உள்ள கல்வாகுர்தி தொகுதியில் சல்லா வம்சி சந்த் ரெட்டி என்பவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.  

  இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் சல்லா வம்சி மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இன்று தாக்குதல் நடத்தினர்.  இதில் மயக்கம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர்.

  சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வேட்பாளர் தாக்கப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #TelanganaAssemblyElections #AttackCongressCandidate #ChallaVamshiChandReddy
  ×