என் மலர்
நீங்கள் தேடியது "tag 223295"
- வேதாரண்யம் ஆர்.டி.ஓ பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்பளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று கொண்டு பெற்றுக்கொண்டார்.
- ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில்கடந்த 7ஆம் தேதி முதல்வேதாரண்யம் ஆர்.டி.ஓ. பெளலின் தலைமையில்ஜமாபந்தி துவங்கி நடைபெற்று வருகிறது.
ஜமாபந்தியில் நேற்று வரை 244மனுக்கள் பெறப்பட்டு அதற்கான உடனடி திர்வும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தகட்டூர் தாணிக்கோட்டகம் ,வாய்மேடு, தென்னடார் பஞ்சநதிக்குளம் மேற்கு ஆகிய வருவாய் கிராமங்களில் ஜமாபந்தி நடைபெற்றது இதில் 55 மனுக்கள் பெறப்பட்டு 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுமுதியோர் உதவித்தொகை வழங்க ப்பட்டது.வழக்கமாக கோட்டாட்சி யர்கள் பொதுமக்களிடம் மனுக்களை நாற்காலியில் அமர்ந்தபடி தான் வாங்கி வருவது வழக்கம் ஆனால் வேதாரணியம் கோட்டாட்சியர் பெளலின் நாற்காலியில் அமராமல் பொதுமக்களுக்கு மதிப்ப ளித்து அவர்களிடம் இருந்து மனுக்களை நின்று
கொண்டு பெற்றுக் கொண்டு இருக்கும் போது தென்னடார் ஊராட்சி மனுக்கள் பெறும் நேரம் வந்தது அப்போது அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல்நிலை சரி இல்லாமல் நடந்து வந்தார்இதை பார்த்த கோட்டாட்சியர் பெளலின் உடனடியாக அவரை நாற்காலியில் அமரச் செய்தார்.அதற்கு கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் அமர மறுத்து விட்டார் பிறகுகோட்டாட்சியர் பெளலின் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் உடல் நிலையை கருத்தில் கொண்டுவற்புறுத்தி அவரை தனது அருகே நாற்காலியில் அமரச் செய்தார்.
பிறகுதான் தான் நின்று கொண்டே பொது மக்களிடம் மனுக்களை வாங்கினார் ஊழியர்களிடம் ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சக ஊழியர்களுக்கு தகுந்த மரியாதை அளித்து அவரின்உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனடியாக மனுக்களை பெற்றுகிராம நிர்வாக அலுவலரைவீட்டுக்கு செல்ல அறிவுறுத்தினார் இந்த மனிதாபிமான செயலை வருவாய்த்துறை ஊழியர்கள் வெகுவாக பாராட்டினர்ஜமாபந்தி முகாமில் தாசில்தார் ரவிச்ச ந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வேதையன் மண்டலதுணை வட்டாட்சியர் ரமேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா வேதாரண்யம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட வருவாய்துறையினர் கலந்து கொண்டனர்.
- செஞ்சியில் ஜமாபந்தி நிறைவு: 302 பயனாளிகளுக்கு ரூ.1. 31 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
- மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம்:
செஞ்சி வட்டத்தில் 1431-ம் பசலி ஜமாபந்தி கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வந்தார்.
மேற்படி ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டிவனம் உதவி கலெக்டர் அமீத் தலைமை தாங்கினார். தாசில்தார் பழனி வரவேற்றார்.
இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் 71 பயனாளிகளுக்கு பட்டா மாற்ற ஆணை, 14 பேருக்கு உட்பிரிவு பட்டா மாற்றம், 100 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை, 43 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை, 20 பேருக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டை, 45 நபர்களுக்கு பிரதம மந்திரி தொகுப்பு வீடுகள் கட்ட ஆணை மற்றும் 9 பயனாளிகளுக்கு விவசாயத் துறை தோட்டக்கலை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 302 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார், வல்லம் ஒன்றிய குழு தலைவர் அமுதா ரவிக்குமார், வல்லம் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பொருளாளர் தமிழரசன், தனி தாசில்தார் நெகருன்னிசா, துணை தாசில்தார் வெங்கடேசன், வருவாய் ஆய்வாளர்கள் கண்ணன், பரமசிவம், கீதா, கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
- பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.
அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
- பண்ருட்டியில் ஜமாபந்தி நிறைவுவிழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
கடலூர்:
பண்ருட்டியில்ஜமாபந்தி நிறைவுவிழா நடந்தது.தாசில்தார்சிவா.கார்த்திகேயன் வரவேற்றார்.இதில்ஜமாபந்திஅலுவலரும், மாவட்ட வழங்கல்அலுவலருமான உதயகுமார் கலந்து கொண்டு 9 பேருக்கு மனை பட்டா, 69 பேருக்கு உதவிதொகைக்கான ஆணை, 21 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 64 பேருக்கு சமூக பாதுகாப்புதிட்ட உதவிகள், இ -பட்டா,ஆகியவை மொத்தம் 16.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை வழங்கினார். இதில்சிறப்புதிட்ட தாசில்தார் பலராமன், மண்டலதுணைதாசில்தார் சிவக்குமார்,தலைமைஇடத்துதுணைதாசில்தார்கிருஷ்ணா, மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
- திண்டிவனத்தில் ஜமாபந்தி நிறைவு நாளில் 454 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
- ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
திண்டிவனம்:
திண்டிவனம்வட்ட த்துக்கு உள்பட்ட வருவாய் கிராமங்களுக்கான கணக்கு சரிபார்த்தல் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் மொத்தமாக 1034 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இவற்றில் 79மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 501 மனுக்கள் பரிசீலனையில் (நிலுவையில்) உள்ளது. 454 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ஜமா பந்தி நிறைவு நாள் நிகழ்விற்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விதவை உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகைகோரி மனு அளித்து ஏற்றுக்கொள்ள ப்பட்ட தகுதியுடைய 454 பயனாளிகளுக்கு அவற்றிக்கான சான்றிதழ் ஆணையினை வழங்கினார்.
மேலும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தன் சொந்த செலவில் பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்.இதில் சப்-கலெக்டர் அமித்,வருவாய் தீர்வாயம் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரவிக்குமார், சிவகுமார்எம்.எல்.ஏ. ,மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஷிலா தேவி சேரன், யூனியன் தலைவர்கள் சொக்க லிங்கம், யோகேஸ்வரி ,மணி மாறன்,துணைத் தலைவர் பழனி,திண்டிவனம் நகர மன்றத் தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், திண்டிவனம் தாசில்தார் வசந்த கிருஷ்ண ன்,வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.
- ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
- பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி வட்டம், தூனேரி, சோலூா், ஊட்டி நகரம் ஆகிய வருவாய் கிராமங்களுக்கு வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்களுக்கு ஜமாபந்தி நடத்தப்பட உள்ளது.
இது தொடா்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியிருப்பதாவது:-
ஜமா பந்தி நடைபெறவுள்ள 3 நாள்களில் பொதுமக்கள் தங்களது மனுக்களை தாங்கள் குடியிருந்து வரும் வருவாய் கிராமத்துக்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் சம்பந்தப்பட்ட வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரடியாக அளிக்கலாம்.தூனேரி குறு வட்டத்திற்குள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 28, 29-ந் தேதியும், ஊட்டி நகரத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு ஜூன் 30-ந் தேதியும் வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வருவாய் கிராமத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெறும் நாளில் ஊட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், முதியோர் உதவி தொகையும் வழங்க ஆணை வழங்கினார்.
- வருகிற 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
பேராவூரணி:
பேராவூரணி வட்டாட்சி யர் அலுவலகத்தில் 1431 பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் நிகழ்ச்சி (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கியது. நேற்று பெருமகளூர் உள்வட்டம் கிராம கணக்கு வழக்குகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
ஜமாபந்தியில் 71 மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக பெருமகளூர் புனிதகுமார் உள்பட 4 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும் 2 முதியோர் உதவி தொகை வழங்க ஆணையை வழங்கினார்.அப்போது, தாசில்தார் சுகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர், வேளாண் துறையினர், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்ற துறையினர் கலந்து கொண்டனர்.இன்று குருவிக்கரம்பை உள்வட்டத்திற்கு ஜமாபந்தி நடைபெற்றது. வருகிற, 28-ந் தேதி ஆவணம் உள் வட்டத்திற்கும், 29-ந் தேதி பேராவூரணி உள்வட்டத்திற்கும் வருவாய் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.
- ஜமாபந்தி நிறைவு நாள் விழா நடைபெற்றது.
- 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய பகுதிகளில் ஜமாபந்தி நடைபெற்றது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நிறைவு நாள் விழா அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் 4,160 மனுக்கள் பெறப்பட்டது, 215 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2,721 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறையில் விசாரணையில் உள்ளது. 1,224 மனுக்கள் தீர்வு காணப்பட்டது, என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியர் குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கலெக்டர் அலுவலக மேலாளர் முத்துலட்சுமி, தாசில்தார் குமரய்யா, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், மண்டல துணை தாசில்தார் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சாமிதுரை, சர்வே பிரிவு அலுவலர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் நந்தகுமார்,
உமாசங்கர், சீனிவாசன், முருகேசன், கோவிந்தராஜ், பிரசன்னா, உட்பட வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் விவசாயிகள் குடிகள் மாநாடு நடைபெற்றது, இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
- பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமம்.
- பொன்னேரி வட்டாட்சியர், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
பொன்னேரி திருப்பாலைவனம் வட்டத்தில் அடங்கிய கிராமங்களைச் சேர்ந்த பட்டாதாரர்கள் ஜமாபந்தியில் உரிய ஆவணங்களுடன் மனு அளித்து பட்டா பெற்றுக் கொண்டனர். பொது மக்களின் இதர மனுக்களான வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட மனுக்களும் பெறப்பட்டது.
பொன்னேரி, தடப் பெரும்பாக்கம், பழவேற்காடு, கணவன் துறை, மெதூர் திருப்பாலைவனம் அடங்கிய அப்பகுதி பொது மக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடியாகவும், விசாரணைக்கு பின் தீர்வு காணக்கூடிய மனுக்களை அதிகாரிகளுக்கும் பரிந்துரை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த், சிறப்பு தனி வட்டாட்சியர்கள் கார்த்திகேயன், சுமதி, கிராம நிர்வாக அலுவலர் சாந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7-ந் தேதி தொடங்கியது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, தலைமையில் தாசில்தார் ரமேஷ் முன்னிலையில் தொடர்ந்து நடைபெற்ற ஜமாபந்தி நேற்று மாலை முடி வடைந்தது.
வீட்டுமனை பட்டா, பட்டா மேல்முறையீடு, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம், முதியோர் உதவித்தொகை கேட்டு மொத்தம் 730 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 109 மனுக்கள் ஏற்கப்பட்டு உடனடி தீர்வு காணப்பட்டது. 621 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
ஜமாபந்தி நிறைவை முன்னிட்டு விவசாயிகள் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே. கோவிந்தராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா உட்பட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் தீ விபத்தில் வீடு இழந்த பெண்ணுக்கு நிதி உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் ரமேஷ், சிறப்பு தாசில்தார் லதா, வட்ட வழங்கல் அலுவலர் ரவி, துணை தாசில்தார் நடராஜன், கிராம நிர்வாக அலுவலர் யுகேந்திரன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் வட்ட தலைவர் கிருஷ்ணகுமார், வட்ட செயலாளர் பிரகாசம் பொருளாளர் ராஜூ, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஊத்துக்கோட்டை பேரூராட்சி தலைவர் அப்துல்ரஷீத், துணைத் தலைவர் குமரவேல்.
வார்டு கவுன்சிலர்கள் அபிராமி, கல்பனா, பார்த்திபன், சமீமாரஹிம், ஒன்றிய கவுன்சிலர்கள் ஞானமுத்து, சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் செல்வ சேகரன், பெரிஞ்சேரி ரவி, சக்திவேல், மாவட்ட பிரதி நிதி ரவிக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தில்லை குமார், சித்ரா பாபு, பொறுப்புக் குழு உறுப்பி னர்கள் சிவய்யா, சீனி வாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






