என் மலர்
உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் முதிேயார் உதவித்தொகை பெற
ராமநாதபுரத்தில் ஜமாபந்தி தொடங்கியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வட்டாசியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 46 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
அதனைத்தொடர்ந்து சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 4 பயனாளி களுக்கு மாதாந்திர முதியோர் உதவித் தொகை பெறு வதற்கான ஆணையையும், 3 பயனாளிகளுக்கு மாதாந்திர விதவை உதவித் தொகை பெறுவதற்கான ஆணையையும், 7 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையையும், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்களையும் கலெக்டர் சங்கர்லால் குமாவத் வழங்கினார்.
Next Story






