search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SM Krishna"

    • 90 வயதில் நான் 50 வயதை போல செயல்பட முடியாது அதனால் பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்
    • இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும்; பழைய மைசூரு பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன்.

    பெங்களூரு:

    முன்னாள் மத்திய மந்திரியும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது தீவிர அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்திற்கு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:

    எனக்கு இப்போது 90 வயதாகிறது. என் வயது குறித்து எனக்கு தெரிகிறது. இந்த வயதில் நான் 50 வயதை போல செயல்பட முடியாது. அதனால், பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் முழுமையாக சன்யாசம் பெறவில்லை. கட்சி தலைவர்களுக்கு தேவைப்பட்டால் ஆலோசனை கொடுப்பேன். இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும்; பழைய மைசூரு பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன்.

    பா.ஜ.க., என்னை புறக்கணிக்கவில்லை. நான் ஓய்வு பெற்றிருக்கும்போது என்னை புறக்கணிக்கின்றனர் என்ற கேள்வியே எழாது. அரசியலில் யாரும் பென்ஷன் தரமாட்டார்கள். அதனால் என் ஓய்வு குறித்து நான் மேலிடத்துக்கு தகவல் தரும் அவசியம் ஏற்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகும் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கும் அவர் அனுப்பி உள்ளார்.

    கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி நதியின் முக்கியப் பகுதியாக விளங்கும் சோமனஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், அப்போது பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி சட்ட பிரிவில் பட்டம் பெற்றார்.

    இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் சதர்ன் மெத்தாலசிஸ்ட் பல்கலைகழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது கல்வி சாதனைக்காக அவர் கர்நாடகா மற்றும் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளி-யில் அவரை "ஆக்ஸ்போர்டு கிருஷ்ணா" என்று அழைத்தனர்.

    எஸ்.எம்.கிருஷ்ணா புதிய தொழில்நுட்பங்களை பெங்களூரில் செயல்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்தார், மேலும் பெங்களூர் நகரம் உலக நாடுகளைக் கவரும் வண்ணம் வளர முக்கியக் காரணமாக இருந்த காரணத்தால் எஸ்.எம்.கிருஷ்ணா-வை விஷனரி சி.எம். எனவும் அழைத்தனர்.

    இந்தியாவின் டெக் ஐகான் ஆகக் கருதப்படும் அளவிற்கு, பெங்களூர் முழுவதும் சப்வே, மேம்பாலங்கள், கேபிள் பிரிட்ஜ் என அதிநவீன கட்டுமானங்களைக் கட்டமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர். பெங்களூரில் இன்று ஐடி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்க முக்கியக் காரணமாகப் பெங்களூரில் உள் கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் உருவாக அடித்தளமிடப்பட்டது. பயோடெக்னாலஜி துறையில் பிரமாண்ட நிறுவனமான பயோகான், பல அரசு அமைப்புகள், கல்லூரிகள் இவருடைய காலகட்டத்தில் அதிகமாகப் பெங்களூருக்கு வந்தது.

    தொடக்கத்தில் சட்டக் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய எஸ்.எம். கிருஷ்ணா, 1962-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தீவிர அரசியலில் இறங்கினார். 1968-ம் ஆண்டே லோக்சபா எம்.பி.யானார். 1970-களின் தொடக்கத்தில் மீண்டும் கர்நாடகா அரசியலுக்கு திரும்பி அமைச்சரானார்.

    பின்னர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு சென்று இந்திரா காந்தி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு கர்நாடகா மாநில துணை முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா. பின்னர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பிரஜா சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. என அரசியல் கட்சிகளில் பயணித்த எஸ்.எம். கிருஷ்ணா எம்.எல்.ஏ, எம்பி, முதல்வர், மத்திய மந்திரி, ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காவிரி நதிநீர் பிரச்சனைகளின் போதும் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட காலங்களிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்தின் விவாத களங்களில் முக்கியமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஆத்துக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஜெயப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

    • 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா பதவி வகித்தார்.
    • அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சுவாசக்குழாய் தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது.

    அவர் குறைந்தபட்ச சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எஸ்.எம்.கிருஷ்ணா, 1999ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் 2004 மே 28ம் தேதி வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். மேலும், மகாராஷ்டிர ஆளுநராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    மோடி மீண்டும் பிரதமர் ஆவதை தவிா்க்க முடியாது என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
    பெங்களூரு:

    முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மோடி மீண்டும் பிரதமராவது தவிர்க்க முடியாது. ஏனென்றால் நான் கொள்கையில் நம்பிக்கை கொண்டவன். இதன் காரணமாக நான் அதிக தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் செய்வேன். பா.ஜனதா வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வேன்.



    மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக நாங்கள் அனைவரும் முடிந்தவரை எங்களின் முயற்சிகளை மேற்கொள்வோம். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது பெங்களூருவின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை செய்தேன். இதை நகர மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

    தேவேகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடுவதால் பா.ஜனதாவின் வெற்றியை பாதிக்காது. தனிப்பட்ட நபரை விட, கொள்கையே முக்கியமானது. ஆனால் அதற்கு பிரதமர் மோடி அப்பாற்பட்டவர். பா.ஜனதாவின் கொள்கையை அடிப்படையாக வைத்து நாங்கள் பிரசாரம் செய்வோம்.

    யார் நல்ல முறையில் பணியாற்றுகிறார்கள் என்பது பெங்களூரு மக்களின் மனதில் இருக்கிறது. பெங்களூருவில் உள்ள மூன்று தொகுதிகளிலும் பா.ஜனதா பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.

    இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார். #SMKrishna #PMModi
    46 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்த நான், ராகுல் காந்தியின் தலையீட்டால்தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டேன் என்று எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi
    புதுடெல்லி:

    கர்நாடக முதல்-மந்திரியாக இருந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மத்தியில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பலம் வாய்ந்த வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றினார். ஆனால் ஆட்சி காலம் முடியும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட மத்திய மந்திரி பதவியை காங்கிரஸ் பறித்தது. அதற்கு அக்கட்சி மேலிடம் எந்த காரணத்தையும் கூறவில்லை. 

    இதனால் டெல்லியில் வீட்டை காலி செய்துவிட்டு எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூரு திரும்பினார். கர்நாடகத்திற்கு வந்த பிறகு அவர் வீட்டில் ஓய்வு எடுத்தார். கர்நாடக காங்கிரசில் தனக்கு ஏதாவது நல்ல பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தார். ஆனால் அவரை காங்கிரஸ் கண்டுகொள்ளவே இல்லை. இதனால் காங்கிரஸ் மீது எஸ்.எம்.கிருஷ்ணா கடும் அதிருப்தியில் இருந்தார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் மீதான தனது கோபத்தை அவர் கடந்த 2017-ம் ஆண்டு பகிரங்கமாக வெளிப்படுத்தினார். அக்கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். காங்கிரசில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களுக்கு உரிய மதிப்பு இல்லை என்று கூறி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை விமர்சனம் செய்தார். காங்கிரசின் குடும்ப அரசியலையும் அவர் குறை கூறினார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் அவரை விமர்சிக்கவில்லை.

    இந்த நிலையில் சுமார் 85 வயதாகும் எஸ்.எம்.கிருஷ்ணா கடந்த (2017) மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் சேர்ந்தார். 

    இந்தநிலையில், மடூர் கிருஷ்ணா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் எஸ்எம். கிருஷ்ணா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    ''நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தும், மன்மோகன் சிங் அரசில் இருந்து வெளியேறியதற்கும் ராகுல் காந்தியின் தலையீடுதான் முக்கியக் காரணம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ஆனாலும், கட்சியிலும், ஆட்சியிலும் ஏராளமான விஷயங்களில் தலையிட்டார். 

    நான் கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டுவரை காங்கிரஸ் கட்சியில் வகித்த பல்வேறு பதவிகளிலும் எனது பணியை ராகுல் காந்தி உத்தரவின் பெயரில் திறமையாகவே செய்தேன். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆட்சிப் பதவியில் இருக்கக் கூடாது என்று ரகசியமாக ராகுல் காந்தி உத்தரவிட்டதால், நான் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன்.

    ஆனால், தற்போது பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது''.

    இவ்வாறு எஸ்.எம்.கிருஷ்ணா பேசினார். #smkrishna #RahulGandhi #congress #pmmodi
    வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டது பற்றி எஸ்.எம்.கிருஷ்ணா எழுதிய புத்தகத்தில் பல்வேறு ரகசியங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    பெங்களூரு:

    மேற்குதொடர்ச்சி மலைக் காடுகளில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த சந்தன கடத்தல் வீரப்பன் 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்தி சென்றான்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராஜ்குமார் இருந்தபோது வீரப்பன் அவரை கடத்தினான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    108 நாட்கள் வீரப்பனின் பிடியில் இருந்த ராஜ்குமார் பின்னர் பேச்சுவார்த்தை மூலம் மீட்கப்பட்டார்.

    நக்கீரன் கோபால் இடைத் தரகராக இருந்த பேச்சு வார்தைகள் மேற்கொள்ள இறுதியாக பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை ராஜ்குமாரை பத்திரமாக மீட்டு வந்தனர்.

    அப்போது கர்காடகாவில் எஸ்.எம். கிருஷ்ணாவும், தமிழ்நாட்டில் கருணாநிதியும் முதல்-அமைச்சராக இருந்து வந்தனர். ராஜ்குமார் கடத்தப்பட்டதற்கு பிறகு நடந்த சம்பவங்கள் அவர் மீட்கப்பட்டபோது நடந்த பேச்சுவார்தைகள் அதில் எடுக்கப்பட்ட உடன்பாடுகள் போன்றவை பற்றி இன்னும் முழுமையான விவரங்கள் வெளியே வரவில்லை.பணம் கைமாறியதா? என்ற விவரமும் தெரியவில்லை.

    ஒருசில தகவல்கள் மட்டும் தான் வெளிவந்துள்ளன. இன்னும் பல ரகசியங்கள் அம்பலமாக வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் எஸ்.எம். கிருஷ்ணா தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அடுத்த மாதம் இந்த புத்தகம் வெளிவர உள்ளது.

    அதில், ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக விரிவான விவரங்களை குறிப்பிட்டிருக்கிறார். அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியுடன் இது சம்பந்தமாக பேசியது, நக்கீரன் கோபாலை தூதுவராக அனுப்பியது, வீரப்பனுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், வீரப்பனுடன் எஸ்.எம். கிருஷ்ணாவே நேரடியாக பேசியது, பின்னர் மீட்பு குழுவினர் சென்று மீட்டு வந்தது போன்றவற்றில் நடந்த பல்வேறு ரகசியங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.


    இந்த புத்தகம் வெளிவந்தால் ராஜ்குமார் கடத்தலின் பின்னணி அப்போது நடந்த பேச்சு வார்த்தைகள் உள்ளிட்ட பல்வேறு ரகசியங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், எஸ்.எம். கிருஷ்ணா தனது அரசியல் வாழ்க்கை பற்றியும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரசில் அவரது பணிகள், பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டது, பாரதீய ஜனதாவில் சேர்ந்தது போன்ற விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

    எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடக அரசியலில் 50 ஆண்டு காலம் கோலோச்சியவர் ஆவார். அவர் எம்.எல்.ஏ., மாநில மேல்சபை உறுப்பினர், அமைச்சர், சபாநாயகர், துணை முதல்-மந்திரி, முதல்-மந்திரி, மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

    இவர் பல்வேறு அரசியல் ரகசியங்களையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SMKrishnas #actorRajkumar #veerappan

    ×