கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி

1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக எஸ்.எம்.கிருஷ்ணா பதவி வகித்தார்.அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதி
Published on

பெங்களூரு:

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான சுவாசக்குழாய் தொற்று காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வருகிறது.

அவர் குறைந்தபட்ச சுவாசம் செலுத்தப்பட்டு வருவதாகவும், உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா, 1999ஆம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி முதல் 2004 மே 28ம் தேதி வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்தார். மேலும், மகாராஷ்டிர ஆளுநராகவும், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com