இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள ஆத்துக்குட்டி பள்ளத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 27). லாரி டிரைவர். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 11 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ஜெயப்பிரியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஜெயப்பிரியாவின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com