என் மலர்
நீங்கள் தேடியது "காயிதே மில்லத்"
- காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
- சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்தவர் காயிதே மில்லத்.
- காயிதே மில்லத் பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார்.
காயிதே மில்லத் பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்
தமிழ் மண்ணில் நல்லிணக்கத்திற்காகத் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட தலைவர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள். சமூக ஒற்றுமைக்காக நேர்மையான, தூய்மையான பாதையில் பயணித்த அன்னாரது பிறந்தநாளில் அவரது சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி மகிழ்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை.
- சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும்.
திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், " சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம். நானும், திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம்.
சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக மட்டுமின்றி, உரிமைகளை வழங்குவதிலும் முதலிடம் இஸ்லாமிய மக்களின் உரிமைகளை காப்போம் என தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக" என்றார்.
- காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
- காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்!
சென்னை:
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 129-வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, சாமிநாதன், சேகர்பாபு, சிவி கணேசன், மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தப்பட்டது.
இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்னைத் தமிழ்மொழிக்காகவும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மதநல்லிண்ணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்! என கூறியுள்ளார்.
அன்னைத் தமிழ்மொழிக்காகவும் - இஸ்லாமியச் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும் - மதநல்லிண்ணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களது பிறந்தநாளான இன்று, அவரது தொண்டினை நினைவுகூர்வோம்! pic.twitter.com/sW0w2EasO5
— M.K.Stalin (@mkstalin) June 5, 2024
- காயிதே மில்லத் கருத்தரங்கம் நடைபெற்றது.
- இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் பச்சைத் தமிழர் காயிதே மில்லத் என்ற தலைப்பில் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நடந்தது.
கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வருசை முகம்மது, கல்லூரி நிர்வாக இயக்குநர் ஹாமீது இப்ராகிம், நகர தலைவர் சேகு ஜமாலுதீன், செயலாளர் ஹபீப் தம்பி முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில துணைத்தலைவரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான நவாஸ்கனி வரவேற்றார். தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பேச்சாளர் நாஞ்சில் சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. முஹம்மது அபூபக்கர் ஆகியோர் பேசினர்.
மாநில பொருளாளர் ஷாஜகான், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நவாஸ் கனி எம்.பி. செய்தார்.
காயிதே மில்லத்தின் 127வது பிறந்தநாளையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலை பெரிய பள்ளிவாசலில் உள்ள காயிதே மில்லத்தின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இவர்களுடன் அமைச்சர் துரைமுருகன், கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஆவடி நாசர், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காயிதே மில்லத் 123-வது பிறந்த நாளான நாளை (5-ந்தேதி) காலை 10 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TTVdhinakaran






