என் மலர்
நீங்கள் தேடியது "போக்சோ சட்டத்தில் கைது"
- 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (26). எலக்ட்ரீசியன்.
இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அறிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு மோகன்ராஜ், 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதனால் காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது சிறுமிக்கு 17 வயது பூர்த்தி ஆவதற்குள் திருமணம் ஆனது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தை நல அலுவலர் சரஸ்வதி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், எலக்ட்ரீசியனான மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார்.பின்னர் மோகன்ராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 12-ம் வகுப்பு படித்து வந்தார்
- போலீசார் விசாரணை
போளூர்:
கலசப்பாக்கம் அருகே உள்ள லாடவரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை மகன் செல்வா (வயது 18) செல்வா பக்கத்து கிராமத்தில் உள்ள 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை 1 ½ வருடமாக காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள் கல்லாங்குத்து பாறைக்கு காதலியை வரவைத்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உடலில் மாற்றங்கள் தென்படவே, சிறுமியின் தாயார் உள்ளூர் நர்சு உதவியுடன் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்தனர்.
அங்கு டாக்டர் சிறுமியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது.
போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் கவிதா சப் -இன்ஸ்பெக்டர் மீனாட்சி அங்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
இதையெடுத்து வாலிபர் செல்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து செல்வா வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
- கோபி அனைத்து மகளிர் போலீசார் தருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோபி:
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அவிநாசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் தருண்குமார் (21).
இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததார். அவர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில் தருண்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானதாகவும், தன்னை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்தில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாகவும், தான் சத்தமிட்டு கொண்டு ஓடி வந்து விட்டதாகவும், தற்போது பழக மறுப்பதால் தன்னை பயப்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.
அதன் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தருண்குமார் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
- சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
- சிறுமி பெற்றோர் டவுண் மகளிர் போலீசில் புகார் செய்தனர்
சேலம்:
சேலம் அன்னதானப் பட்டி நரசிம்ம செட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). இவர் ஒரு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது குறித்து அந்த சிறுமி பெற்றோர் டவுண் மகளிர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர் கார்த்திக்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் 6 வயது சிறுமியை 50 வயதான கட்டிட தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தங்கராஜ் 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இந்த வழக்கை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
ஈரோடு மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கராஜ் திடீரென மாயமானார் அவரை போலீசார் தேடி வந்தனர், இந்நிலையில் ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் தங்கராஜ கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் துறைமங் கலம் அவ்வையார் தெருவை சேர்ந்த அருண் (14), பெரம்பலூர் ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்தை சேர்ந்தவர் அபிஷேக் (15), வெங்கடேச புரம் காலனியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (16), ஆலம்பாடி சாலை அன்புநகரை சேர்ந்தவர் தினேஷ் குமார் (15), துறைமங்கலம் கே.கே.நகரை சேர்ந்தவர் சஞ்சய் ரோஷன் (14). இந்த 5 பேரும் பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அபிஷேக், தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய் ரோசன் ஆகியே 4 பேரும் சேர்ந்து மிரட்டி அருண் என்ற மாணவரை பள்ளி விளையாட்டு மைதனாத்தில் வைத்து பாலியல் துன்புறுத்தியுள்ளனர்.
இதே போல் தினமும் துன்புறுத்தியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அருண் தனது தந்தையிடம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் விசாரணை செய்து பாலியல் வன்கொடுமை சட்டமான போஸ்கோ சட்டத்தின் கீழ் அபிஷேக், தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய்ரோசன் ஆகியே 4 பேரும் மீது வழக்கு பதிந்தனர்.
இதையடுத்து தமிழ்ச்செல்வன், தினேஷ்குமார், சஞ்சய்ரோசன் ஆகியே 3 பேரை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி திருச்சி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான அபிஷேக்கை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பள்ளியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வி(வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் அந்த பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னையா(56) என்பவரும் நண்பர்கள். இதனால் சின்னையா அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் சின்னையா உல்லாசம் அனுபவித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த செல்வி திடீரென மயக்கமடையவே, அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி விசாரிக்கும் போது, சின்னையா, செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.






