என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்துமீறிய வாலிபர்"

    • இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
    • கோபி அனைத்து மகளிர் போலீசார் தருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோபி:

    பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் அவிநாசிலிங்கபுரத்தை சேர்ந்தவர் தருண்குமார் (21).

    இவர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் இளம்பெண்ணை வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தும் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததார். அவர்கள் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணிடம் விசாரணை செய்ததில் தருண்குமார் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானதாகவும், தன்னை ஆசை வார்த்தை கூறி மறைவான இடத்தில் அழைத்து சென்று பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதாகவும், தான் சத்தமிட்டு கொண்டு ஓடி வந்து விட்டதாகவும், தற்போது பழக மறுப்பதால் தன்னை பயப்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தார்.

    அதன் பேரில் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மேனகா தருண்குமார் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    ×