என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
ஈரோடு:
ஈரோட்டில் சமீபகாலமாக குழந்தைக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் மட்டும் குழந்தைக்கு எதிராக பாலியல் தொந்தரவு சம்பந்தமாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும் 6 வயது சிறுமியை 50 வயதான கட்டிட தொழிலாளி பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
மொடக்குறிச்சி அடுத்த லக்காபுரம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 50). கட்டிட தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தங்கராஜ் 6 வயது சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இது குறித்து வெளியே கூறினால் உன்னை கொன்று விடுவதாக அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். எனினும் தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறினாள்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர்கள் இந்த வழக்கை ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
ஈரோடு மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தங்கராஜ் திடீரென மாயமானார் அவரை போலீசார் தேடி வந்தனர், இந்நிலையில் ஈரோடு காளைமாடு சிலை அருகே இன்று தங்கராஜ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் தங்கராஜ கைது செய்தனர்.






