என் மலர்
நீங்கள் தேடியது "சிறுமி கர்ப்பிணி"
பழனி:
பழனி அருகே உள்ள சின்னகலையம்புத்தூர் ஊராட்சியை சேர்ந்த 13 வயது சிறுமி 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்தனர். இதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து சிறுமியிடம் விசாரித்தபோது தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன்தான் காரணம் என கூறினார்.
ஆனால் பள்ளியில் சென்று விசாரித்த போது மாணவி தெரிவித்த பெயரில் எந்த மாணவனும் இல்லை என தெரிய வந்தது. இதனையடுத்து தாசில்தார் பழனிச்சாமி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாணவியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பழனி பகுதியைச் சேர்ந்த காமராஜ் (55) என்ற தொழிலாளிதான் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கற்பழித்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை:
திருச்சி மாவட்டம் தா. பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி செல்வி(வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தையும் அந்த பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சின்னையா(56) என்பவரும் நண்பர்கள். இதனால் சின்னையா அடிக்கடி செல்வி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.
இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது செல்வியை கட்டாயப்படுத்தி அவருடன் சின்னையா உல்லாசம் அனுபவித்துள்ளார். நேற்று வீட்டில் இருந்த செல்வி திடீரென மயக்கமடையவே, அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது செல்வி, கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இது பற்றி விசாரிக்கும் போது, சின்னையா, செல்வியிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து முசிறி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சின்னையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.






