search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor's house"

    • போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
    • புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து

    புதுச்சேரி:

    மத்திய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நாடு முழுவதும் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தது.

    இதன்படி நாடு முழுவதும் இன்று பல்வேறு போராட்டங்கள் நடந்தது. புதுவையில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் கூட்டாக அறிவித்திருந்தனர்.

    இந்த போராட்டத்தை விளக்க 2 நாட்களாக பல்வேறு இடங்களில் கோரிக்கை விளக்க பிரசாரமும் நடத்தினர்.தொழிலாளர்கள், மக்கள் விரோத மத்திய மோடி அரசு வெளியேற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள், எந்திரங் கள் மீதான ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட் கள், கியாஸ் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். புதுவையில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். அமைப்பு சாரா நலவாரியத்தை நிதிஒதுக்கி செயல்படுத்த வேண்டும்.

    உணவு பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளித்து, ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். தேசிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச சம்பளம் ரூ.26 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். மின்சார மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

    பிரீபெய்டு மீட்டர்களை பொருத்தக்கூடாது. 200 நாள் வேலை வழங்கி நாள்தோறும் ரூ.600 சம்பளம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இன்று போராட்டம் நடந்தது.

    காமராஜர் சாலை பாலாஜி திரையரங்கு அருகே அனைத்து தொழிற் சங்கத்தினர், விவசாயிகள் சங்கத்தினர் திரண்டனர். அங்கிருந்து கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.

    ஊர்வலத்துக்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.சி.சி.டி.யு. பொதுச் செயலாளர் புருஷோத்தமன், எல்.எல்.எப். செயலாளர் செந்தில், என்.டி.எல்.எப் செயலாளர் மகேந்திரன், எம்.எல்.எப். செயலாளர் வேதா வேணுகோபால், விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் கீதநாதன், தமிழ்ச்செல்வன், சங்கர், ரவி, விஜயபாலன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில், ஏ.ஐ.டி.யூ.சி. அபிஷேகம், அந்தோணி, தயாளன், சந்திரசேகரன், சி.ஐ.டி.யூ. பிரபுராஜ், முருகன், கொளஞ்சியப்பன், ரவிச் சந்திரன், ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி, சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யூ. சோ. பாலசுப்பிர மணியன், மோதிலால், விஜயா, எல்.எல்.எப். துரை ஜெயக்குமார், எம்.எப்.எல். மாசிலாமணி, என்.டி.எல்.எப். சரவணன் உட்பட நூற்றுக்கணக்கான தொழி லாளர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    ஊர்வலம் நேருவீதி, காந்திவீதி சந்திப்பில் வந்தபோது பேரிகார்டு களை வைத்து போலீசார் தடுத்தனர். இதனால் போலீ சாருக்கும், தொழிற்சங்கத் தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    தங்களை ஆம்பூர் சாலை வரை அனுமதிக்க வேண்டும் என போலீசாரு டன் தொழிற்சங்கத்தினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். பேரிகார்டுகளின் மீது ஏறி போலீசாரை தாண்டிச் செல்ல முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர். 300-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்ட னர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விவசாயிகள், தொழிலாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது ஆகியவை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ஆகவே, பாஜக., அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் சென்னைஆளுநா் மாளிகை முன்பாக வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடா் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க வேண்டும். மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா் குமரன் சிலை முன்பாக 28-ந் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதில் ஏஐடியூசி., சிஐடியூ., எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
    • விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்தது.

    சென்னை:

    சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

    முதல் கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்துள்ளது.

    வானிலை ஆராய்ச்சிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் செயலிழந்து ஆளுநர் மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது.

    கவர்னர் மாளிகையில் அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை துணைச் செயலாளர், கிண்டி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில், ‘2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவர்னர் மாளிகைக்கு நாற்காலி, மேஜை, அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவர்னர் மாளிகைக்கு நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ‘சப்ளை’ செய்த முகமது யூனூஸ், கவர்னர் மாளிகை கணக்காளரான சிவக்குமார், ஓய்வுபெற்ற உதவி கணக்காளரான குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

    இதில், சிவக்குமாரும், குப்புசாமியும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews
    ×