என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆளுநர் மாளிகை
ஆளுநர் மாளிகையில் விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு
- கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
- விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்தது.
சென்னை:
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல் தெரியவந்துள்ளது.
வானிலை ஆராய்ச்சிக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்கவிடப்படும் பலூன் செயலிழந்து ஆளுநர் மாளிகையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
Next Story






