என் மலர்
இந்தியா

பாசிச கல்வி முறை ஒழிக.. மணிப்பூர் ஆளுநர் மாளிகை அருகே கடிதத்துடன் இருந்த கையெறிகுண்டால் பரபரப்பு
- இந்த கல்லூரியானது ராஜ் பவனுக்கு 100 மீட்டர்கள் மட்டுமே தொலைவில் உள்ளது
- இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றன
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களால் பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் அருகே உள்ள ஜி.பி. மகளிர் கல்லூரியின் வாசலில் இன்று காலை கையெறிகுண்டு கிடந்துள்ளது.
முதலமைச்சர் அரசு இல்லத்திலிருந்தும், மணிப்பூர் காவல்துறை தலைமையகத்திலிருந்தும் 300 மீட்டர் தொலைவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியானது ராஜ் பவனுக்கு 100 மீட்டர்கள் மட்டுமே தொலைவில் உள்ளது. மற்ற அரசு கட்டடங்களான முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மணிப்பூர் காவல்துறை தலைமையகம் ஆகியவற்றில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது.
கையெறி குண்டு குறித்து தகவல் கிடைத்தவுடன் காலவத்துறையினர் சுற்றி வளைத்தனர், அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதை பாதிப்பு இல்லாமல் அகற்றினர். அந்த கையெறிகுண்டுடன் கடிதம் ஒன்றும் இருந்துள்ளது.
அதில் பாசிச கல்வி முறை அடியோடு ஒழியட்டும். ஏழை வர்க்க மாணவர்களின் இலவச கல்வி உரிமைகள் இயக்கம் ஓங்கட்டும் என்று எழுதப்பட்டுள்ளது. இம்பால் பகுதியில் உள்ள பல கல்வி நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதால் அவற்றுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்த சம்பவம் அமைத்துள்ளது.






