search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "boAt"

    • படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர்.
    • அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம், உப்பாடாவை சேர்ந்தவர் சுரதா ராமராவ். இவர் சொந்தமாக படகு வைத்து கொண்டு கடலில் மீன் பிடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை ஒப்படைவை சேர்ந்த சக மீனவர்கள் 11 பேருடன் கடலில் மீன் பிடிக்க சென்றார். பைரவ பாலம் என்ற இடத்தில் நடுக்கடலில் சுரதா ராமராவ் உள்ளிட்டவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது சுரதா ராமாராவின் படகில் திடீரென புகை வந்து தீப்பிடித்து எறிய தொடங்கியது.

    இதனைக் கண்ட படகில் இருந்த மீனவர்கள் உயிர் பயத்தில் அலறி கூச்சலிட்டனர். அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்கள் படகு தீப்பிடித்து எரிவதை கண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் படகில் சிக்கி இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டனர். தீப்பிடித்த படகில் இருந்து 11 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடலில் ENX தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் அதிவேக சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 91 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 45 மணி நேர பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் வசதி, 10mm டிரைவர், அதிகபட்சம் 50ms லோ லேடன்சி, ENX தொழில்நுட்பம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் ஆக்டிவ் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் ஸ்டாரி புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

     


    போட் ஏர்டோப்ஸ் 91 அம்சங்கள்:

    10mm ஆடியோ டிரைவர்கள்

    பீஸ்ட் மோட் மற்றும் லோ லேடன்சி வசதி

    டச் கண்ட்ரோல்

    டூயல் மைக் மற்றும் ENX தொழில்நுட்பம்

    ப்ளூடூத் 5.3

    அதிவேக கனெக்டிவிட்டிக்காக IWP (இன்ஸ்டா வேக் அன்ட் பேர்)

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    IPX4 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்

    அதிகபட்சம் 45 மணி நேர பிளேபேக்

    ASAP ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர்

    10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேபேக் கிடைக்கும்

    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் 2-வது நாளாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர்.

    வங்க கடலில் சூறை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுருத்திய நிலையில் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம். ராமேசுவரம், ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மீன்துறை அதிகாரிகளின் அறிவிப்பை தொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட கடல் பகுதி முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாமல் துறைமுக பகுதியில் படகுகளை நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டதால் 2-வது நாளாக பலத்தை சூறாவளி காற்று வீசுவதுடன் கடல் சீற்றமாகவே காணப்படுவது டன் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு ஆக்ரோஷ மாக சீறி எழுந்து வருகின்றது.

    இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 2-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பில் பொருளாதாரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    • சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
    • சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 30 பக்தர்கள் ஒரு பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக திருச்செந்தூர் வந்து விட்டு திரும்பும் வழியில் கருங்குளம் கோவிலுக்கு சென்றனர்.

    அந்த நேரத்தில் கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கருங்குளம் சத்திரம் பகுதியில் சிக்கி கொண்டனர்.

    இதனால் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பக்தர்களை மீட்பதற்காக அங்கு சென்றனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அனைவருமே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் அவர்களாலும் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களை மீட்க முடியவில்லை.

    நேற்று மதியம் வரை வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே 2-வது நாளாக வெள்ளத்தில் தவித்தனர். தகவல் அறிந்து உவரி, திசையன்விளை, கன்னியாகுமரி பகுதியில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் அங்கு படகுகளுடன் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவராக மீட்கும் பணி நேற்றிரவு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வெள்ளத்தில் சிக்கிய 70 பேரும், இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    • மீனவர்களின் ஒற்றைப் படகை விடுவிக்க ரூ.2.27 கோடி தண்டம் கட்ட வேண்டும் என்று மாலத்தீவு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது.
    • குற்றவாளிகளைப் போல கருதி அவர்களின் படகை மாலத்தீவு அரசு பறிமுதல் செய்திருக்கக் கூடாது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி மாலத்தீவு அரசால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதி மீனவர்கள் 12 பேரும் மத்திய அரசின் உதவியால் மீட்கப்பட்டிருக்கும் போதிலும், பறிமுதல் செய்யப்பட்ட அவர்களின் படகு இன்னும் மீட்கப்படவில்லை. மீனவர்களின் ஒற்றைப் படகை விடுவிக்க ரூ.2.27 கோடி தண்டம் கட்ட வேண்டும் என்று மாலத்தீவு அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

    இதனால், தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க முடியாமல் தருவைக்குளம் மீனவர்கள் தவித்து வருகின்றனர். தமிழக மீனவர்கள் திட்டமிட்டு மாலத்தீவு கடல் எல்லைக்குள் ஊடுருவவில்லை. மாறாக, மோசமான வானிலை காரணமாகவே அவர்களின் படகு மாலத்தீவு கடல் எல்லைக்குள் அடித்துச் செல்லப் பட்டது.

    காற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர்களை, குற்றவாளிகளைப் போல கருதி அவர்களின் படகை மாலத்தீவு அரசு பறிமுதல் செய்திருக்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகள் மாலத்தீவு அரசுடன் பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களின் படகை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டம் செலுத்தியே தீர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால், அதை மத்திய, மாநில அரசுகளே செலுத்தி தருவைக்குளம் மீனவர்களின் படகை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரியலூர் மாவட்டத்தில் வெள்ளக்கால மீட்பு பணிக்காக மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வழங்கப்பட்டு உள்ளது
    • தீயணைப்பு துறையினர், கலெக்டரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் பருவமழை கால மீட்பு பணிகளுக்காக  கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா,  நிதியிலிருந்து ரூ.4.65 லட்சம் மதிப்பிலான மோட்டாருடன் கூடிய ரப்பர் படகு வாங்கப்பட்டுள்ளது. இந்த படகை மாவட்ட தீயணைப்புத் துறை   அலுவலர் அம்பிகாவிடம், கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர்ஆனந்தவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்பகுதியில் பெருமளவில் உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது
    • பல நாடுகளுடன் சீனாவிற்கு கடல் எல்லை சச்சரவு நீடிக்கிறது

    மேற்கு பசிபிக் கடலில், கடல்வழி போக்குவரத்திற்கு மிக அத்தியாவசியமான இடமாக கருதப்படுவது வட சீன கடல் பகுதி.

    இந்த கடற்பகுதி வழியாக உலகின் 21 சதவீதத்திற்கும் அதிகமான உலக வர்த்தக கப்பல் போக்குவரத்து கையாளப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மீன் வளம் அதிகமுள்ள பகுதியாக கருதப்படுவதால் உலகின் 50 சதவீத மீன்பிடி கப்பல்கள் இங்கு நிலைநிறுத்தப்படுவது வழக்கம்.

    இந்த வட சீன கடல் பகுதியில் இரண்டாம் தாமஸ் ஷோல் (shoal) எனும் நீர்மட்டம் குறைவான கடல் பகுதி உள்ளது. இப்பகுதி மீது சீனாவும் பிலிப்பைன்ஸும் உரிமை கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக கருதப்படுகிறது.

    பிலிப்பைன்ஸ் இப்பகுதியில் தன் நாட்டு கப்பல்களை நிலைநிறுத்தும். இக்கப்பல்களுக்கு மாதாந்திர அத்தியாவசிய பொருட்கள், சிறிய படகுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்படுகிறது.

    இந்நிலையில், இரு வெவ்வேறு சம்பவங்களில் பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான ஒரு சரக்கு வினியோக படகின் மீதும், ஒரு கடலோர கப்பற்படை கப்பல் மீதும், சீனாவின் கடலோர கப்பற்படை கப்பல், வேண்டுமென்றே மோதியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால் இதனை மறுத்துள்ள சீனா, "பிலிப்பைன்ஸ் வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்குகிறது" என தெரிவித்துள்ளது.

    "எங்கள் நாட்டு கடல்வழி போக்குவரத்தை சீனா தடுக்க நினைக்கிறது. இதற்காக அந்நாடு ஆபத்தான வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதனால் கடல் பயணம் மேற்கொள்ளும் எங்கள் நாட்டினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது" என இது குறித்து பிலிப்பைன்ஸ் தெரிவித்தது.

    இக்கடல் பகுதியில் பிலிப்பைன்ஸை தவிர மேலும் பல நாடுகளின் பல பகுதிகளுக்கு, சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக வியட்னாம், தைவான், மலேசியா மற்றும் புரூனே ஆகிய நாடுகள் சீனாவுடன் சுமூக உறவில்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.

    மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.
    • போட் வேவ் எலிவேட் என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியும் கொண்டிருக்கிறது.

    போட் நிறுவனம் இந்திய சந்தையில் போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. இந்த வாட்ச் மெட்டாலிக் பாடி, கிரவுன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஓசன் பேண்ட் ஸ்டிராப் உடன் கிடைக்கிறது.

    இதில் 1.96 இன்ச் அளவில் பெரிய HD ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங் வசதி, அதிக தரமுள்ள இன்-பில்ட் மைக், டயல் பேட், காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய போட் வேவ் எலிவேட் மாடலில் உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் SpO2, ஸ்லீப் மற்றும் 50-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 6-ம் தேதி துவங்குகிறது. 

    • போட் நிறுவனத்தின் புதிய ஆக்டிவிட்டி டிராக்கர் ஸ்மார்ட் ரிங் பெயரில் அறிமுகம்.
    • போட் ஸ்மார்ட் ரிங் மாடலில் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    போட் நிறுவனம் கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த தனது, போட் ஸ்மார்ட் ரிங் மாடலின் விலையை தற்போது அறிவித்து இருக்கிறது. மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் மற்றும் எளிதில் அணியக்கூடிய வகையிலான டிசைன் கொண்டிருக்கிறது.

    பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற வகையில் ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்:

    அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி

    ஹார்ட் ரேட் மானிட்டரிங்

    பாடி ரிக்கவரி டிராக்கிங்

    டெம்பரேச்சர் மானிட்டரிங்

    SpO2 மானிட்டரிங்

    ஸ்லீப் மானிட்டரிங்

    மென்ஸ்டுரல் டிராக்கர்

    ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்

    போட் ரிங் ஆப் சப்போர்ட்

    புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் ஆகஸ்ட் 28-ம் தேதி மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது.
    • இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    போட் நிறுவனத்தின் புதிய வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் தான் போட் ஸ்டார்ம் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மாடல் அறிமுகமாகி இருக்கிறது. பட்ஜெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் 2.01 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, ப்ளூடூத் காலிங் மற்றும் IP67 என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இத்துடன் பில்ட்-இன் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் உள்ளது. இதில் கிரெஸ்ட் பிளஸ் ஒ.எஸ்., குயிக் டல் பேட் மற்றும் அதிகபட்சமாக பத்து கான்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 700-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நலத்தை டிராக் செய்யும் ஏராள சென்சார்கள் வழங்கப்படுகின்றன.

     

    இதில் உள்ள 230 எம்.ஏ.ஹெச். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கான பேக்கப் கிடைக்கிறது. ப்ளூடூத் காலிங் வசதியை பயன்படுத்தினால், இதனை அதிகபட்சம் இரண்டு நாட்கள் வரை பயன்படுத்த முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் கேமராவை இயக்கும் வசதி, மியூசிக் பிளேபேக் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் வானிலை விவரங்கள், அலாரம், ஸ்டாப்வாட்ச், டைமர், ஃபைன்ட் மை போன் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆக்டிவ் பிளாக், கூல் புளூ, ஜேட் பர்பில், செர்ரி பிளாசம் மற்றும் கூல் கிரே போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மெட்டல் பிளாக் நிற ஆப்ஷனில் மெட்டாலிக் ஸ்டிராப் வழங்கப்படுகிறது.

    போட் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் போட் வேவ் சிக்மா ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 7 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 1,299 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 

    • அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்துகிறது.
    • புதிய போட் அவான்ட் பார் 520 மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    போட் நிறுவனம் அவான்ட் 520 பெயரில் புதிய சவுன்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக போட் ஃபிளாஷ் பிளஸ் மற்றும் ஸ்டார்ம் பிளஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ. 2 ஆயிரத்திற்கும் குறைந்த விலையில் கிடைக்கும் புதிய சவன்ட்பார் பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.

    புதிய அவான்ட் பார் 520 சவுன்ட்பார் மாடல் தெளிவான மற்றும் சக்திவாய்ந்த சவுன்ட் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 16 வாட் பவர், டூயல் பேசிவ் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள 2.0 சேனல் ஸ்டீரியோ சவுன்ட் செட்டப் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன. இந்த சவுன்ட்பார் ப்ளூடூத் 5.0 மூலம் வயர்லெஸ் கனெக்ட் வசதி கொண்டிருக்கிறது.

     

    இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஆறு மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது. இது அதிநவீன டிசைன் அழகான தோற்றம் கொண்டிருக்கிறது. போட் அவான்ட் பார் 520 மாடலை ஸ்மார்ட்போன் மற்றும் கம்ப்யூட்டர்களுடன் ப்ளூடூத், AUX, யு.எஸ்.பி. மூலம் கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

    புதிய போட் அவான்ட் பார் 520 சவுன்ட்பார் விலை இந்திய சந்தையில் ரூ. 1,499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் போட் வலைதளங்களில் நடைபெறுகிறது.

    ×