search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Singer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார்.
    • மத சுதந்திரத்தை நிலைநிறுத்தியதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாஷிங்டன்:

    இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடியை அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் பாராட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, "இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று அறிவித்துள்ளதை நான் பாராட்டுகிறேன். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் இந்திய அரசாங்கத்தின் இரக்கமுள்ள தலைமைக்காகவும், மிக முக்கியமாக துன்புறுத்தப்பட்டவர்களை வரவேற்பதில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்தி யதற்காகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    • தற்போது ’கிரிஷ் லைவ் இன் துபாய்’ என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.
    • நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

    பின்னணி பாடகரான கிரிஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகர்களில் ஒருவர். நடிகை சங்கீதாவின் கணவன் ஆவார்.

    தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான படங்களான வேட்டையாடு விளையாடு, உன்னாலே உன்னாலே, வேட்டைகாரன், வாரணம் ஆயிரம், என்றென்றும் புன்னகை, அயன் போன்ற படங்களில் பல ஹிட்டான பாடல்களை பாடியுள்ளார்.

    தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.தற்போது 'கிரிஷ் லைவ் இன் துபாய்' என்ற இசை சுற்றுலாவில் பாடி வருகிறார்.இந்நிலையில் அவரது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய் கையெழுதிட்ட அவரின் ஃபோனின் புகைப்படத்தை வெளியிட்டு அத்துடன் 'லவ் யூ அண்ணா' #GOAT என பதிவிட்டுள்ளார்.

    • தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • தனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் முதல் முறையாக தேசிய படைப்பாளிகள் விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறந்த படைப்பாளிகளுக்கான விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    இதில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான பாடகியும், யூடியூபருமான மைதிலி தாக்கூர் என்ற பெண்ணுக்கு இந்த ஆண்டுக்கான கலாசார தூதுவர் என்ற விருது வழங்கப்பட்டது.

    எப்போதும் எனது பேச்சை தொடர்ந்து கேட்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளனர். நீங்கள் ஒரு பாடல் பாடுகிறீர்களா? என அவரிடம் பிரதமர் மோடி கேட்டார். அவரும், சரி பாடுகிறேன் என பதிலளித்தார்.

    இதையடுத்து, அப்படியானால் எனது பேச்சு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா? என கிண்டலாக கேட்டார். மைதிலி, "இல்லை, நான் அவ்வாறு கூறவில்லை. மக்களுக்காக பாடுகிறேன் என்றேன்" என தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் பாடிய பாடலை பிரதமர் மோடி ரசித்துக் கேட்டார். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
    • ஜெய் இசட்டுக்கு இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.

    இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப் பட்டது.


    இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.


    விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.


    • குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    சென்னை:

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி வாணிஜெயராம் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி, கலைவாணி என்ற வாணிஜெயராம் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்நாட்டின் வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தமது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவர். தமிழ் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அழியாப் புகழ்பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவர். அண்மையில் அவருக்கு 'பத்மபூஷண்' விருது அறிவிக்கப்பட்ட போது எனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தேன். அறிவிக்கப்பட்ட விருதைப் பெறும் முன்னரே அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து செல்ல நேர்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தியாகும்.

    பழம்பெரும் பின்னணிப் பாடகியான வாணிஜெயராம் மறைவு, இசையுலகைப் பொறுத்தவரை ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணிஜெயராமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக இருக்கும் பி.சுசீலா, சமீபத்தில் அளித்த பேட்டியில், இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை என்று கூறியிருக்கிறார். #PSusheela
    தமிழ் சினிமாவின் சாதனை பாடகியாக வலம் வந்தவர் பி.சுசீலா. 83 வயதாகும் சுசீலா இசை நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்துகொண்டு வருகிறார்.

    சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் அவரிடம் பேசியபோது ‘30000, 40000 என்று எண்ணிக்கை சொல்கிறார்கள். என்னிடம் சரியான கணக்கு இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென் இந்தியாவில் உள்ள மொழிகளில் எல்லாம் பாடிவிட்டேன்.

    பாடுவதை கடவுள் கொடுத்த வரம்னுதான் சொல்வேன். தமிழ்நாடு என்னை அள்ளி அணைத்துக் கொண்ட பூமி. என்னை பொறுத்த வரைக்கும், இன்னைக்கும் என்னோட தமிழ் உச்சரிப்பு சரியானது இல்லை என்றே சொல்வேன். தெலுங்கு வாடை அடிக்கிற தமிழ்தான் அது. மணக்குற தமிழ் என் வாயில இருந்து வரணும்னா நான் இந்த மண்ணுல பிறந்திருக்கணுமோன்னு நினைச்சுப் பார்ப்பேன். பாடினதெல்லாம் சவாலா எடுத்துக்கிட்டுப் பண்ணினதுதான்’ என்று கூறினார்.
    ‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. #VaikomVijayaLakshmi
    பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர் மலையாள பட உலகில் அதிகம் பாடல்களை பாடியுள்ளார். பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டேனியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 

    விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் அவரை மேலும் பிரபலப்படுத்தியது. என்னமோ ஏதோ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’ பாடல் உள்பட பல படங்களில் பாடி இருக்கிறார். வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. 

    இந்த படத்தை விஜயகுமார் டைரக்டு செய்கிறார். இதில் விஜயலட்சுமியாக கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார். விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் நின்று போனது.

    இந்த நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர். அனூப் வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் காண்டிராக்டராகவும் இருக்கிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நாளை மறுநாள் (10–ந்தேதி) விஜயலட்சுமியின் வீட்டில் நடக்கிறது. திருமணம் அக்டோபர் 22–ந்தேதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடக்கிறது.
    ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை பாடி அனைவரையும் கவர்ந்து டிரெண்டிங் ஆன கூலித்தொழிலாளி ராகேஷ் உன்னி கமல்ஹாசனை சந்தித்து அவர் முன்னிலையிலும் பாடி அசத்தியுள்ளார். #ShankarMahadevan #RakeshUnni #Kamalhaasan

    விஸ்வரூபம் படத்தில் ஜிப்ரான் இசையில் பாடகர் சங்கர் மகாதேவனுடன் இணைந்து கமல் பாடியிருந்த ‘உன்னைக் காணாது’ என்ற பாடலை தோட்டத்தில் அமர்ந்து கொண்டு சாதாரணமாக ஒருவர் பாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது. 

    வைரலான இந்த வீடியோ ‌ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றுள்ளது. அதனைத் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள ‌ஷங்கர் மகாதேவன் “இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாச்சாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இது குறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம்” என்று பதிவிட்டிருந்தார்.

    அந்த காந்தக்குரலோன் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது. ரப்பர் தோட்டத்தில் கூலித்தொழில் செய்யும் உன்னி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்த பாடலை பாடியதாக கூறியுள்ளார். இந்நிலையில், ராகேஷ் உன்னி மக்கள் நீதி மய்யம் தலௌவர் கமல்ஹாசனை இன்று சந்தித்துள்ளார்.

    அவர் முன்னிலையிலும் தனது குரல் வித்தையை ராகேஷ் உன்னி காட்ட, கமல்ஹாசன் நெகிழ்ந்து போனார். #Vishwaroopam #ShankarMahadevan  

    கமல்ஹாசன் முன்னிலையில் தனது திறமையை ராகேஷ் உன்னி வெளிப்படுத்திய காட்சியை காண..
    பிரபல பாடகி எஸ்.ஜானகி பற்றி வரும் வதந்திகள் பரப்பியவர்களை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். #SJanaki
    பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது 80 வயது ஆகிறது. மகன் முரளி கிருஷ்ணாவுடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். 

    3 வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல் நிலைகுறித்து அடிக்கடி வதந்திகள் பரவியது. கடந்த வாரம் 3–வது தடவையாக வதந்தி பரப்பப்பட்டது. ‘‘நான் நலமாக இருக்கிறேன். எனது உடல் நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம்’’ என்று எஸ்.ஜானகி வேண்டுகோள் விடுத்து வீடியோவில் பேசி வெளியிட்டார்.

    இந்த நிலையில் எஸ்.ஜானகி உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மலையாள சினிமா பின்னணி பாடகர்கள் சங்கத்தினர் கேரள போலீசில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து வதந்தி பரப்பிய வி‌ஷமிகளை கைது செய்யும்படி சைபர் கிரைம் போலீசுக்கு கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்னாத் பெஹரா உத்தரவிட்டு உள்ளார். 

    சைபர் கிரைம்போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.ஜானகி உடல்நிலை குறித்த வதந்தி தமிழ் நாட்டில் இருந்து பரவியதா? அல்லது ஆந்திரா, கேரளாவில் இருந்து பரப்பப்பட்டதா? என்று விசாரணை நடத்துகின்றனர்.
    குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் மீது மக்கள் சுமார் 50 லட்ச ரூபாயை பணமழையாக பொழிந்தனர். #GujaratSinger #moneyshower

    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் வால்சாத் பகுதியில் நடைபெற்ற ஒரு விழாவில் பாடகர் ஒருவர் கலந்துகொண்டார். பஜன் பாடகரான அவரது பாடலால் அங்கிருந்த மக்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டனர்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அந்த பாடகர் மீது 10 முதல் 2000 ரூபாய் மதிப்பிலான பணத்தை மழையாக பொழிந்தனர். பாடகர் மீது வீசப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. 

    கடந்த ஜனவரி மாதம் சூரத் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியிலும் பாடகர் ஒருவர் மீது பல லட்ச ரூபாய் பணத்தை பொதுமக்கள் மழையாக பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #GujaratSinger #moneyshower
    ×