என் மலர்
நீங்கள் தேடியது "Seizure"
- ரூ.1 லட்சம் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- அனுமதியின்றி தயாரித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்
சிவகாசி தெய்வானை நகர் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டுவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது அங்குள்ள பட்டாசு கடையின் பின்புறம் உள்ள இடத்தில் ஏராளமான அட்டை பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. போலீசார் அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் பட்டாசுகள் இருந்தன. மொத்தம் 60 பெட்டிகளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை அனுமதியின்றி தயாரித்து வைத்திருந்த விஜயகுமார் என்பவரை கைது செய்தனர்.
மேலும் அந்த பட்டாசுகளை தயாரிக்க ஆர்டர் கொடுத்த சித்துராஜபுரம் பால்பாண்டி, சாமிபுரம் காலனி விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கருந்திரிகள்-பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஜோதிபுரத்தை சேர்ந்த சதுரகிரி(வயது63), சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த பாண்டியராஜன்(59), நல்லையன்(59) ஆகியோர் அனுமதியின்றி கருந்திரிகளை பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 115 குரோஸ் கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி உசேன் காலனியை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர் அழகாபுரி ரோட்டில் அனுமதியின்றி தகர செட் அமைத்து பட்டாசு தயாரித்துள்ளார். இது தொடர்பாக எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
- மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட பாடகச்சேரியை அடுத்த சொரக்குடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 50) என்பவர் கள்ளத்தனமாக தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு காவலர் அறிவழகன், சிறப்பு தனிப்படை காவலர்கள் புகழேந்தி, முஜ்பூர் ரஹ்மான், ஐஸ்வர்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சுந்தரமூர்த்தியை கைது செய்தனர். மது பாட்டில்க ளை பறிமுதல் செய்தனர்.
- ஆட்டோவில் கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை
திருப்பரங்குன்றம் பெரியரத வீதியில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.
அங்கு ஆட்டோவில் கஞ்சா விற்பனை செய்த திருநகர் நெல்லையப்பபுரம் மலைச்சாமி மகன் அஜய்(21), தனக்கன்குளம் கார்த்திகா நகர் பாலகிருஷ்ணன் மகன் கண்ணன்(32), தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாரியப்பன் மகன் தீபக்குமார் (29) ஆகியோரை கைது செய்தனர். ஆட்டோவில் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும், வாள், கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
- வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் பலருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, சிதம்பரம் ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் போலீசார் கடந்த 14-ம் தேதி முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 7 தனிப்படை அமைத்து போலீசார் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்வது போன்றவற்றை தடுக்கும் விதமாக அதிரடியாக அனைத்து பகுதிகளிலும் சோதனைகளில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதியிலிருந்து நேற்று (17-ந்தேதி) வரை 199 சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தல், கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து 203 நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை 920 லிட்டர் சாராயம் மற்றும் 2,133 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
- புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அம்சாயால் (வயது 50), குரியமங்கலம் டாஸ்மாக் கடை அருகே புவனகிரி ஆதிபராநத்தம் பழனிவேல் (43) இவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மதுரையில் செல்போன்-செயின் பறிக்கப்பட்டது.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை திருமால்புரம் வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் லோகேஷ் குமார் (19). இவர் சம்பவத்தன்று மேலூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3பேர் முகவரி கேட்பது போல் நடித்து லோகேஷ் குமாரின் செல்போனை பறித்து சென்றனர்.
மதுரை நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (30). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் அவனியாபுரம் பகுதியில் ஒரு கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள தங்க செயினை பறித்து சென்றனர். 2 சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- ஆரோவில் நாவற்குளம் பகுதியில் ஒரு வாலிபர் அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.
- ஆரோவில் நாவற்குளம் பகுதியில் ஒரு வாலிபர் அந்த வழியே சென்ற வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்த சின்னபுளியங்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபு (வயது 31), ரங்கப்பனூரை சேர்ந்த கோவிந்தன் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.
ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.