என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அருகே வீட்டில் மது விற்ற வாலிபர் கைது
- விழுப்புரம் அருகே வீட்டில் மது விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- 680 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பருக்பாஷா (வயது 29) இவர் புதுவை மது பாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டி. எஸ். பி. பார்த்திபன் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் மருது தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டில் மது பாட்டில்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது உடனே பாரூக் பாஷாவை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 680 மது பாட்டில்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






