search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Border-Gavaskar Trophy"

    • மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
    • 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.

    மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.

    மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    • இந்திய அணி முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது
    • நிதானமாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 186 ரன்கள் சேர்த்தார்.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 480 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. நிதானமாக ஆடிய விராட் கோலி 186 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 128 ரன்னும், அக்ஷர் படேல் 79 ரன்னும், கே.எஸ்.பரத் 44 ரன்னும் எடுத்தனர்.

    91 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அணி நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 3 ரன்னுடனும் குனேமேன் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடியை டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் விளாசினார். லபுசங்கே 63 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று பிற்பகல் வரை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை அத்துடன் முடித்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

    ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், 2-1 என தொடரை வென்றது. இதன்மூலம் இந்தியா தொடர்ந்து நான்கு முறை பார்டர் கவாஸ்கர் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார்.
    • 61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது.

    அகமதாபாத்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. முகமது சிராஜுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த டெஸ்டில் ஆடிய வீரர்களே இடம் பெற்றனர்.

    ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித் 'டாஸ்' வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். டிரெவிஸ் ஹெட்டும், உஸ்மான் கவாஜாவும் தொடக்க வீரர்களாக களம் இறக்கினார்கள்.

    முகமது ஷமியும், உமேஷ் யாதவும் தொடக்கத்தில் பந்து வீசினார்கள். ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் நிதானமாக ஆடினார்கள். சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ் ஓவரில் ஹெட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கீப்பர் பரத் தவற விட்டார். தொடர்ந்து ஆடிய ஹெட் தமிழக வீரர் அஸ்வின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    61 ரன்களில் முதல் விக்கெட்டை பறிகொடுத்த ஆஸ்திரேலிய அணி 72 ரன்கள் எடுப்பதற்குள் 2-வது விக்கெட்டை இழந்தது. மார்னஸ் லாபுசேன் 3 எடுத்திருந்த நிலையில் முகமது சமி பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.

    இதனையடுத்து கவாஜா - ஸ்மித் ஜோடி நிதானமாக ஆடி வருகின்றனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அஸ்வின், சமி தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

    • பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 டெஸ்ட்கள் ஏற்கனவே நடைபெற்றுவிட்டன. இதில், 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதும் 3-வது டெஸ்ட் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொரில் கடந்த 2 டெஸ்ட்டிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட்டு வந்தார். ஆனால், குடும்ப விவகாரம் தொடர்பாக பேட் கம்மின்ஸ் திடீரென ஆஸ்திரேலியா சென்றார். 3-வது டெஸ்ட் தொடங்குவதற்குள் கம்மின்ஸ் இந்தியா திரும்பிவிடுவார் என்று முதலில் தகவல் வெளியானது.

    இந்நிலையில் பேட் கம்மின்ஸ் இந்தியா திரும்புவதில் கால தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 3-வது டெஸ்ட்டில் கம்மின்ஸ் களமிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வரும் 1-ம் தேதி நடைபெறும் 3-வது டெஸ்ட்டில் களமிறங்க உள்ளது.

    • முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
    • 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இந்த மாதம் 17-ம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடவில்லை.

    இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் அய்யர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

    பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்ற அவருக்கு காயம் குணமடையாததால் முதல் டெஸ்ட்டில் விளையாடவில்லை.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஷ்ரேயஸ் அய்யர் இடம் பிடித்துள்ளார். உடற்தகுதிக்கு தேர்வானதை அடுத்து அவருக்கு பட்டியலில் இடம் கிடைத்துள்ளது.

    2வது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்ற வீரர்களின் விவரம் வருமாறு:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

    • இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய அணி தரப்பில் லபுஷேன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    நாக்பூர்:

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து செய்து வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் இன்று விளையாடி வருகின்றனர்.

    அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னின் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார்.

    ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். லபுஷேன் 47 ரன்களுடனும், ஸ்மித் 19 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. 

    உணவு இடைவேளை முடிந்து வந்த நிலையில் இந்திய அணியின் சுழலில் ஆஸ்திரேலியா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. லபுஷேன் 49, மாட் ரென்ஷா 0, ஸ்மித் 37, அலெக்ஸ் கேரி 36, கம்மின்ஸ் 6, டாட் மர்பி 0 என வெளியேறினர்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் 2 விக்கெட்டுகளும், சமி மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஆஸ்திரேலிய அணி 4 ஸ்பின்னர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது.
    • இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிஸ்ட்டை தீர்மானிக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

    கடைசியாக 2004-ம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி அதன்பின்னர் 19 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதற்கிடையே, இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

    இந்திய ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதாகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலிய அணி 4 சுழல் பந்து வீச்சாளர்களுடன் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்திய ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது மிகச்சவாலான காரியம்.

    இந்நிலையில் இந்தியாவில் சுழல் பந்து வீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஷேன் வாட்சன் கூறியதாவது:-

    இந்தியாவில் சுழல் பந்தை ஸ்டிரைட் பேட்டில் ஆடவேண்டும். இந்திய வீரர்கள் கிராஸ் பேட் ஷாட் ஆடவே மாட்டார்கள். ஸ்டிரைட் பேட்டில் மட்டுமே ஆடுவார்கள். எனக்கும் ஃப்ரண்ட் ஃபூட்டில் ஆடலாமா அல்லது பேக் ஃபூட்டில் ஆடலாமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் ஸ்டிரைட் பேட்டில் ஆடுவது தான் சரியான உத்தி.

    என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பார்டர் கவாஸ்கர் தொடரில் 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும்.
    • இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம்.

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகிறது.

    2014-க்குப்பின் அனைத்து பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் தொடர்ச்சியாக வென்று வரும் இந்தியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை வரலாற்றில் முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சரித்திர சாதனையுடன் கோப்பைகளை வென்றது.

    அது போக 2004-க்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2012-க்குப்பின் உலகின் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடைபோட்டு வரும் இந்தியா இம்முறையும் வென்று கோப்பை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

    இந்நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் தொடரை ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என இலங்கை முன்னாள் ஜாம்பவான் வீரர் மகிளா ஜெயவர்தனே கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    இத்தொடரின் முடிவை கணிப்பது கடினமாகும். இருப்பினும் ஆஸ்திரேலியா வெல்லும் என்று நம்புகிறேன். குறிப்பாக 2- 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். ஆனால் அது மிகவும் கடினமாக இருக்கப்போகிறது. எப்படி பார்த்தாலும் இது மிகச் சிறந்த தொடராக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    ஆஸ்திரேலியா நல்ல பந்து வீச்சு கூட்டணியை கொண்டிருப்பதால் இந்திய சூழ்நிலைகளில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை பொறுத்தே இத்தொடரின் வெற்றி அமையலாம். அத்துடன் இத்தொடரை இரு அணிகளும் எவ்வாறு ஆரம்பிக்கின்றன என்பதை பொறுத்தும் வெற்றியாளர் அமையலாம். மொத்தத்தில் இது மிகச் சிறந்த தொடராக அமையப் போகிறது

    என்று அவர் கூறினார்.

    • முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா, செட்டேஷ்வர் புஜாரா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ஷுப்மன் கில், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், கே.எல். ராகுல், கே.எஸ். பாரத், முகமது ஷமி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், இஷான் கிஷன், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ். ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்ட்டி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்கவில்லை. அதன் பிறகு இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம் பெற்றிருந்தார். அதன் பிறகு திடீரென்று தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதேபோன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் இடம் பெறவில்லை.

    முதுகு வலி காரணமாக இதுவரையில் உடற்பயிற்சிகள் செய்து வந்த பும்ரா தற்போது பந்து வீச தொடங்கியிருக்கிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் வலைபயிற்சியில் பும்ரா ஈடுப்பட்டிருந்த போது அவருக்கு எந்த வித கஷ்டமும் நேரவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பெறுவார் என்று தெரிகிறது.

    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை.
    • விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    பெங்களூர்:

    ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இன்று இந்தியா வரவுள்ளது. இந்த மாதம் 9-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் பிப்ரவரி 17-21 வரை டெல்லியிலும், 3-வது டெஸ்ட் மார்ச் 1 முதல் 5 வரை தர்மசாலாவிலும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 9 முதல் 13 வரை அகமதாபாத்திலும் நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மார்ச் 17, 19 மற்றும் 22-ந்தேதிகளில் மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் நடக்கிறது. இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூர் வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியின் வேகப்பந்து வீரர் ஸ்டார்க் முதல் டெஸ்டில் விளையாடவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இந்த அணியுடன் வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

    அவருக்கு விசா இன்னும் கிடைக்காததால் அவர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தனது இண்ஸ்டாகிராம் பதிவில், எனது இந்திய விசாவுக்காக நான் காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார். உஸ்மான் கவாஜாவுக்கு இந்தியா விசா இன்று கிடைத்துவிடும் எனவும், உஸ்மான் நாளை ஒரு விமானத்தில் முன்பதிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து அய்யர் விலகியிருந்தார்.
    • 2-வது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறும். இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்த மாதம் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்க உள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடமாட்டார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலக வேண்டியிருந்தது. மேலும் அவரது மறுவாழ்வுக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

    அவரது காயம் எதிர்பார்த்தபடி குணமடையவில்லை. மேலும் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும். அவர் நிச்சயமாக முதல் டெஸ்ட்டில் விளையாட முடியாது. இரண்டாவது டெஸ்டில் அவர் இடம் பெறுவது அவரது உடற்தகுதி அறிக்கைக்கு உட்பட்டது என்று இந்திய வாரியத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

    இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக டி20 கிரிக்கெட்டின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங்கை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    ×