search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aam Aadmi"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஊழலை எதிர்த்துப் போராட பிறந்த ஆம் ஆத்மி கட்சி இன்று ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
    • இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    டெல்லி சமூக மேம்பாட்டுத்துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். மேலும் அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

    இந்நிலையில், ராஜ்குமார் ஆனந்த் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட பிறந்தது. ஆனால் இன்று அந்தக் கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.

    அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. இந்த ஊழலுடன் பெயரை இணைக்கமுடியாது என்பதால் அமைச்சர் பதவி மற்றும் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    இன்று அரசியல் மாறவில்லை ஆனால் அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன்.

    தலித் பிரதிநிதித்துவம் பற்றி பேசப்படும்போது பின் இருக்கை எடுக்கும் கட்சியில் நான் அங்கம் வகிக்க விரும்பவில்லை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை என தெரிவித்தார்.

    • மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி அமலாக்கத்துறை கைதுசெய்தது.
    • அவரது கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சி நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

    இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த மாதம் 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை கடந்த 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    கெஜ்ரிவால் கைதை கண்டித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் கடந்த 31-ம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இந்நிலையில், கெஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நாடுதழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உண்ணாவிரதம் இருக்குமாறு ஆம் ஆத்மி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    டெல்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் திரண்டு காலை 10 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
    • செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர்.

    புதுச்சேரி:

    மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆத் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும், டெல்லி மாநில முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

    நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதேபோல் புதுச்சேரி மாநில ஆம் ஆத்மி கட்சி சார்பில் காமராஜர் சாலையில் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஆலடி கணேசன் தலைமையில் பிருந்தாவனத்தில் உள்ள தனியார் கட்டிடத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறி 3 பேர் நின்று கோஷம் எழுப்பினர். அதேநேரத்தில் செல்போன் டவரின் கீழே சாலையில் ஆம் ஆத்மி கட்சியினர் தரையில் படுத்து, கெஜ்ரிவாலை விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். செல்போன் டவரில் ஏறியிருந்தவர்களையும் கீழே இறங்க செய்தனர். இதனால் காமராஜர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது.
    • பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்

    மேயர் தேர்தல் முறைகேடு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ள நிலையில் சண்டிகர் மேயர் மனோஜ் திடீரென ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சண்டிகர் மேயரின் ராஜினாமா நமக்கு உறுதிப்படுத்துகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், எங்கள் கவுன்சிலர்களை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களின் தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரின் மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்றது.

    இதில் இந்தியா கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்த்துக் களமிறங்கின. ஆம் ஆத்மி மேயர் பதவிக்கும், காங்கிரஸ் மற்ற இரண்டு பதவிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்தியது.

    சண்டிகர் மேயர் தேர்தலில், பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார். ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.

    இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார்.இதற்கு, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டில் ஏதோ மாற்றம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சி தனியாக போட்டியிட தயார் என அறிவித்திருந்தது.
    • பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிட உள்ளதாக முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    சண்டிகர்:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை உருவாகியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தொடக்கத்தில் இருந்தே மோதல் இருந்து வருகிறது.

    இதற்கிடையே, மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசனை நடத்தவில்லை. இங்கு நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என ஏற்கனவே தெரிவித்துள்ளேன். நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்காளத்தில் தனித்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிப்போம். நான் இந்தியா கூட்டணியில் ஓர் அங்கமாக உள்ளேன் என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜியைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் 13 மக்களவை தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிட உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

    • ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே மிச்சமாகும்.

    நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சேதப்படுத்தும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

    அது தொங்கு சட்டமன்றத்தை சமாளிக்க முடியாது, மேலும் கட்சித் தாவல் எதிர்ப்பை தீவிரமாக ஊக்குவிக்கும் என்று ஆம் ஆத்மி கூறியது.

    இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பாராளுமன்ற ஜனநாயகம், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் நாட்டின் கூட்டாட்சி அரசியல் ஆகியவற்றின் கருத்தை சேதப்படுத்தும்.

    தொங்கு சட்டசபையை சமாளிக்க முடியாமல், கட்சித் தாவல் எதிர்ப்பு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை வெளிப்படையாக விலைக்கு வாங்கும் நிலைமை இருக்கும். அது தீவிரமாக ஊக்குவிக்கும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் மிச்சப்படுத்தப்படும் செலவு மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட்டில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே.

    "குறுகிய நிதி ஆதாயங்கள்" மற்றும் நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை தியாகம் செய்ய முடியாது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது.
    • 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது.

    டெல்லியில் தனிநபர் வருமானம் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து ரூ.4,44,768 ஆக உயர்ந்துள்ளது. இது, 2023ம் ஆண்டில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கிடையில் மிக அதிகமாகும் என டெல்லி அரசு வெளியிட்ட புள்ளி விவர கையேடில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, வளர்ச்சியின் பின்னணியில் உள்ள சில முக்கிய காரணிகள் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீர் வழங்குதல், கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத இடங்களை முறைப்படுத்துதல் போன்றவை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    டெல்லி அரசு, பொதுச் சேவைத் துறையை, குறிப்பாக போக்குவரத்து, மின்சாரம், நீர் மற்றும் சமூக நலன் போன்ற துறைகளில் மேம்படுத்தியுள்ளதாகக் கூறியதுடன், தினசரி 4.1 மில்லியன் பயணிகளுக்கு சேவை செய்யும் 1,300 மின்சார பேருந்துகளைக் கொண்ட இந்தியாவின் முதல் நகரமாக டெல்லி திகழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அனைத்து வீடுகளுக்கும் 24X7 மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்தது. 100,000 புதிய தண்ணீர் இணைப்புகளைச் வழங்கியது. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது.

    மாற்றுத்திறனாளிகள், சிறுமிகள், முதியவர்கள் மற்றும் கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு திட்டங்கள் மூலம் நிதி உதவி வழங்கி ஆதரவளிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பாராளுமன்றத்தில் சேவைகள் மசோதா மீது காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது.
    • காங்கிரஸ் கட்சியின் டெல்லி தேர்தல் குறித்த அதிரடி முடிவு இந்தியா கூட்டணி இடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் பாட்னா, பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். அடுத்த கட்டமாக இந்த மாத இறுதியில் மும்பையில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளனர்.

    இந்தியா கூட்டணியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் உள்ளது. இந்த கட்சி டெல்லியில் தற்போது ஆட்சி நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லியில் தங்களது கட்சிக்கு வலுசேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். பின்னர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டனர் என்று செய்தி தொடர்பாளர் அல்கா லம்பா தெரிவித்தார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு, டெல்லி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டெல்லி காங்கிரசை புத்துயிர் பெற செய்வதே எங்கள் முதல் பணி. டெல்லியை செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றியுள்ளோம், டெல்லி மக்களுக்கான எங்கள் போராட்டம் இன்னும் தொடர்கிறது" என்றார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு வேட்பாளரை மட்டுமே நிறுத்த வேண்டும் என்பது இந்தியா கூட்டணியின் முக்கிய வியூகமாக உள்ளது. குறிப்பாக, எந்த ஒரு தொகுதியிலும் வலுவாக உள்ள கட்சி வேட்பாளரை நிறுத்த பிற கட்சியினர் ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டெல்லியில் ஆம் ஆத்மி வலுவாக, ஆளும் கட்சியாக உள்ள நிலையில், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், "எங்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று காங்கிரஸ் ஏற்கனவே முடிவு செய்திருந்தால், அடுத்த 'இந்தியா' கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. எங்கள் தலைமை அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்வோமா இல்லையா என்பதை முடிவு செய்யவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம் என்றார்.

    ஆம் ஆத்மி மூத்த தலைவரும் மந்திரியுமான சவுரப் ரத்வாஜ் கூறும்போது, "இந்த விவகாரத்தில் கட்சியின் மத்திய தலைமை முடிவு எடுக்கும். எங்கள் தேர்தல் விவகாரக் குழுவும் இந்தியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன" என்றார்.

    ஏற்கனவே மத்திய அரசின் டெல்லி சேவைகள் திருத்த மசோதா தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே சமீப காலமாக மோதல் ஏற்பட்டது. இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கான நிபந்தனையாக, அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிடம் ஆம் ஆத்மி கோரியது. பின்னர், பாராளுமன்றத்தில் சேவைகள் மசோதா மீது காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தது. ஆனால் மசோதா நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியவில்லை.

    இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் டெல்லி தேர்தல் குறித்த அதிரடி முடிவு இந்தியா கூட்டணி இடையே திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகி தீபக் பபாரியா கூறுகையில், "அல்கா லம்பா ஒரு செய்தித் தொடர்பாளர், ஆனால் இதுபோன்ற முக்கியமான விஷயங்களைப் பேசுவதற்கு அவர் அங்கீகரிக்கப்பட்ட செய்தித் தொடர்பாளர் அல்ல. காங்கிரஸ் கூட்டத்தில் அவர் கூறுவது போன்ற விவாதங்கள் எதுவும் இல்லை என்று நான் ஒரு பொறுப்பாளராகக் கூறினேன்.

    அல்கா லம்பாவின் அறிக்கையை நான் மறுக்கிறேன். ஆம் ஆத்மி கட்சியில் முதிர்ச்சியடையாதவர்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். ஊடக அறிக்கையின் அடிப்படையில் அவர்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுக்க விரும்பினால், கடவுளால் கூட அவர்களை காப்பாற்ற முடியாது," என்று கூறினார்.

    • டெல்லியில் கடந்த இரண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி
    • பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது

    டெல்லியில் முதன்முதலாக ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி செய்து வருகிறது. எங்கெல்லாம் பா.ஜனதா- காங்கிரஸ் இடையில் நேரடி போட்டி இருந்து வருகிறதோ, அங்கெல்லாம் ஆம் ஆத்மி கட்சி தலை தூக்க தொடங்கியுள்ளது.

    டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாத அளவிற்கு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    ராஜஸ்தான் மறறும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜனதா- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவும். இங்கு ஆம் ஆத்மி சட்சி களத்தில் இறங்கும். அப்படி இறங்கும்போது வெற்றிபெற முடியவில்லை என்றாலும், காங்கிரசின் கணிசமான வாக்குகளை பிரிக்கும். அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்துவிடும்.

    இதனால் காங்கிரஸ் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க கடினமானதாகிவிடும். இந்த சூழ்நிலையை புரிந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை தங்களிடம் காங்கிரஸ் தந்துவிட வேண்டும் என நினைக்கிறது.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மி ஒரு ஆஃபர் வழங்கியுள்ளது. டெல்லி மாநில சுகாதாரததுறை மந்திரியான சவுரவ் பரத்வாத் இதுகுறித்து கூறியதாவது-

    டெல்லி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2015 மற்றும் 2020-ல் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் நாங்கள் போட்டியிடமாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி சொல்லும் என்றால், அதன்பிறகு நாங்கள் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிப்போம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ''காங்கிரஸ் கட்சி நாட்டின் பழமையான கட்சி. ஆனால் தற்போது அது Copy-Cut-Congress ஆகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து எல்லாவற்றையும் திருடி கொண்டிருக்கிறார்கள். அவரக்ளுக்கு சொந்த யோசனை கிடையாது. காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்ற குறைபாடு மட்டுமல்ல, யோசனை இல்லை என்ற குறைவாடும் உள்ளது'' என விமர்சனம் செய்துள்ளார்.

    தற்போது, ஆம் ஆத்மி டெல்லி மாநில அதிகாரத்திற்காக போராடி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியால் தனியாக போராட முடியாது. பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர இருக்கும் சட்டத்தை முறியடிக்க காங்கிரஸ் உதவி தேவை. மேலும், ராகுல் காந்தி நடைபயணத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு  உயர்ந்துள்ளது. பா.ஜனதாவை எதிர்கொள்ள தனிப்பெரும்பான்மையுடன் டெல்லியில் ஆட்சி அமைத்தால்தான் முடியும் என ஆம் ஆத்மி நினைக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் இந்த கருத்தை காங்கிரஸ் ஏற்பதற்கான வாய்ப்பு  குறைவுதான்.

    கெஜ்ரிவால் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பாராளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி இதுவரை டெல்லி மாநில அதிகாரம் விசயத்தில் வாய்திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டிரான்ஸ்பர், பதவி நியமனம் செய்ய டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது- உச்சநீதிமன்றம்.
    • உச்சநீதிமன்றம் உத்தரவை குறைக்கு வகையில் மத்திய அரசு புதிய உத்தரவு.

    இந்தியாவின் தலைநகர் மாநிலமான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்துவருகிறது. கெஜ்ரிவால் முதல் மந்திரியாக இருந்து வருகிறார். டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்- அமைச்சரை விட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகமாக இருந்து வந்தது.

    இதனால் கெஜ்ரிவாலால் முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் இருந்தது. அப்படி எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்தார். இதனால் கெஜ்ரிவால் அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.

    முதல்-அமைச்சர் டிரான்ஸ்பர் மற்றும் பதவி நியமனம் போன்றவற்றை செய்ய அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது மத்திய அரசுக்கு பெரிய சறுக்கலாக அமைந்தது.

    இதனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை குறைக்கும் வகையில் நிர்வாக உத்தரவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வர இருப்பதாக தெரிகிறது.

    இதனால், கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெற இருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய அளவில் எம்.பி.க்கள் கிடையாது. இதனால் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் மம்தாவின் உதவியை நாட இருக்கிறார்.

    இதன் முதற்கட்டமாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கிறார். அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களோடு துணை நிற்க வேண்டும் என கோரிக்கை விடுப்பார் என தெரிகிறது.

    கர்நாடக தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட தோல்விக்குப்பின் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே, நிதிஷ் குமார் காங்கிரஸ் தலைவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் மம்தா பானர்ஜியை கெஜ்ரிவால் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

    • ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.
    • நாட்டில், 1,300 அரசியல் கட்சிகள் உள்ளன.

    புதுடெல்லி :

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

    இதையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

    அவர் பேசியதாவது:-

    நாட்டில், 1,300 அரசியல் கட்சிகள் உள்ளன. அவற்றில் 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. அவற்றில், பா.ஜனதா, காங்கிரஸ், ஆம்ஆத்மி என 3 கட்சிகள் மட்டுமே ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சியில் இருக்கின்றன.

    10 ஆண்டுகள் என்னும் குறுகிய காலத்தில் கிடைத்திருப்பது, அற்புதமான, நம்ப முடியாத சாதனை. இத்துடன் நமக்கு பொறுப்பு கூடியிருக்கிறது. இதற்காக பாடுபட்ட கட்சியினர் அனைவருக்கும் நன்றி.

    நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க விரும்பும் அனைத்து தேசவிரோத சக்திகளும் ஆம்ஆத்மிக்கு எதிராக உள்ளனர். ஆனால் கடவுள் நம்முடன் இருக்கிறார். கடவுள், இந்த நாட்டுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.

    இந்தியாவை உலகத்தின் முதன்மை நாடாக ஆக்க பொதுமக்கள் ஆம்ஆத்மியில் சேர வேண்டும். நாட்டுக்காக எனது ரத்தம் சிந்தப்பட்டால், நான் அதிர்ஷ்டசாலி.

    கட்சியினர், தேவைப்பட்டால் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும். சிறைக்கு செல்வது பற்றி பயப்படுபவர்கள், கட்சியை விட்டு விலகி விடலாம்.

    தீவிர நேர்மை, தேசபக்தி, மனிதநேயம் என்ற 3 தூண்களின் மீது ஆம்ஆத்மியின் சித்தாந்தம் உருவாக்கப்பட்டது. ஆம்ஆத்மி மீதான கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பு, இப்போது நம்பிக்கையாக மாறிவிட்டது. கடவுள் ஆசியுடன் அதை நிறைவேற்றுவோம்.

    இந்திய அரசியலில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தை கொண்டு வருவதில் ஆம்ஆத்மி வெற்றி பெற்றுள்ளது. நம்மை பார்த்துத்தான், மற்ற கட்சிகளும் இலவச மின்சாரம் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கத் தொடங்கி உள்ளன.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்தது.
    • மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

    பஞ்சாபில் உள்ள பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கடுமையானது மற்றும் நேர்மையானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், முந்தைய ஆட்சிகளின் கீழ் பல்வேறு வகையான மாஃபியாக்கள், போக்குவரத்து மாஃபியாக்கள் வளர்ந்ததாகக் கூறினார்.

    ஜலந்தரில் இருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சொகுசு பேருந்து சேவையைத் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

    பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு. கடினமான முடிவுகளை எடுக்கத் தயங்குவதில்லை.

    ஊழலுக்கு எதிரான ஹெல்ப்லைனைத் தொடங்குவது உட்பட, ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் பஞ்சாபை துடிப்பானதாக்குவோம். முந்தையை அரசு பஞ்சாப் அரசை சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், முந்தைய ஆட்சிகள் மாநிலத்தில் ஆட்சி செய்தபோது குண்டர்கள் அரசியல் ஆதரவைப் பெற்றனர். மூன்று மாதங்களில் மட்டும் 130 குண்டர்கள் மாநிலத்தில் பிடிபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×