search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 way road"

    • தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது.
    • வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பல்வேறு புதிய சாலை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அகலப்படுத்த கோரிக்கை

    மாநகர பகுதியில் தாழையூத்தில் இருந்து தச்சநல்லூர் வரையிலான சாலை இருபுறமும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் பாளை மத்திய சிறையில் இருந்து ரெட்டியார்பட்டி விலக்கு வரையிலும் சாலை அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக 22 ஆண்டுகளுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் அகலப்படுத்த பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளாகவே வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    வட மாவட்டங்களுக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் முக்கிய பஸ்கள் இந்த சாலைகளை கடந்துதான் செல்கின்றன. இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரா வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் வண்ணார்பேட்டையில் இருந்து ரெயில்வே மேம்பாலத்தை கடந்து புதிய பஸ் நிலையம் செல்லும் வழியில் தெற்கு பைபாஸ் சாலையில் பாளையங்கால்வாய் கடக்கும் பகுதியில் குறுகிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. சாலைகள் அளவுக்கு ஏற்ப இந்த பாலம் இல்லாமல் ஒடுக்கமாக இருப்பதால் இருபுறத்தில் இருந்தும் பஸ்கள் வேகமாக வரும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்கள் நடந்து விடுகிறது. இதனால் இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என்றும், வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும், விபத்தை தடுக்க சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரூ.80 கோடியில் திட்ட மதிப்பீடு

    இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கத்திற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து பாளையங்கால்வாயை விரிவாக்கம் செய்வது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் மண் பரிசோதனை செய்யப்பட்டது. சாலையை விரிவாக்கம் செய்வதற்கு ஆகும் செலவு குறித்து புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் படி வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகளை இருபுறமும் விரிவாக்கம் செய்து நான்கு வழி சாலையாக மாற்றி நடுவில் தடுப்புச் சுவர் அமைக்க ரூ.80 கோடி திட்ட மதிப்பீடாக வழங்கப்பட்டது.

    பணிகள் தொடக்கம்

    அதற்கு அனுமதி கிடைத்த நிலையில் தற்போது சாலைகள் அகலப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தொடர்ந்து பாளையங்கல்வாயை இருபுறமும் அகலப்படுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இது தவிர ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறிய அளவிலான பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.

    பைபாஸ் சாலை சுமார் 20 மீட்டர் அகலத்திலும், நடுவில் சென்டர் மீடியன் அமைக்க கூடுதல் இடமும் ஒதுக்கீடு செய்து அமைக்கப்பட்டு வருகிறது.

    அதிகாரிகள் பேட்டி

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது :-

    வண்ணார்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலையில் விபத்தை குறைப்பதற்காக சாலையை விரிவாக்கம் செய்ய அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி இருந்தோம். அதன்படி முதல் கட்டமாக ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் தொடங்கியுள்ளன. இதில் சிறிய பாலங்கள் மற்றும் பாளையங்கால்வாயை அகலப்படுத்தும் பணிகளும் அடங்கும். முதல் கட்டமாக வடக்கு பைபாசில் ரெயில்வே மேம்பாலத்திற்கு அடுத்ததாக இந்த அகலமான நான்கு வழிச்சாலை ஆரம்பித்து புதிய பஸ் நிலையம் வரையிலும் நான்கு வழிச்சாலையாகவே அமைக்கப்படுகிறது.

    நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியன் அமைக்கப்படுகிறது. இருபுறமும் தலா 9 மீட்டர் அகலத்தில் சாலைகள் இருக்கும். மேலப்பாளையம் ரிலையன்ஸ் சிக்னல் பகுதியில் ரவுண்டானா ஏதும் அமைக்கப்படவில்லை. அங்கும் நான்கு வழிச்சாலை தான் அமைக்கப்படுகிறது. அங்கு நவீன தொழில்நுட்பத்தில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.

    ரெயில்வே மேம்பாலம் அகலப்படுத்தும் பணி

    இந்த பணிகள் முடிந்த பின்னரே தச்சநல்லூர் ரெயில்வே மேம்பாலம் மற்றும் வண்ணார்பேட்டை பாளையங்கால்வாய் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் ஆகியவை அகலப்படுத்தும் பணி தொடங்கும். இந்த 2 பாலங்களையும் அகலப்படுத்துவதற்காக ரெயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே சார்பில் ஒப்புதல் கிடைத்ததும் அந்த 2 பாலங்களையும் அகலப்படுத்தும் பணி தொடங்கும். தற்போது கணக்கீட்டின்படி 5.8 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த சாலையானது நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. செல்லப் பாண்டியன் மேம்பாலம் அதே நிலையிலேயே நான்கு வழி சாலை மேம்பாலமாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. இது தவிர சாலைகளின் நடுவில் அலங்கார விளக்குகளும் அமைக்கப்பட உள்ளது.

    அதேபோல் தச்சநல்லூர் ஆற்று பாலத்துக்கு அருகே வடபகுதியில் புதிதாக ஒரு ஆற்றுப் பாலம் கட்டப்பட உள்ளது. அவை இரண்டும் வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 மேம்பாலங்களை போலவே ஒரு வழிப்பாதைகளாக செயல்படும்.

    இதன் மூலம் போக்குவரத்து நெருக்கடி விபத்துகளும் குறையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது .
    • 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பி யாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

    சபாநாயகர் ஆய்வு

    கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது . தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணி கள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற மார்ச் 31- ந்தேதிக்குள் நதிநீர் இணைப்பு திட்டம் நிறை வேற்றப்படும் என்று சமீபத்தில் நெல்லைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தண்ணீர் செல்லும் வகையில் குழாய்க ளும் அமைக்கப்பட்டு வருகி றது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு மற்றும் கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    குழாய்கள்

    அமைக்கும் பணி

    பொன்னாக்குடி நான்கு வழிச்சாலையில் மாற்றுப்பாதை அமைக்கப் பட்டு 1,300 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் 420 குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் இந்த மாத இறுதியில் நிறைவு பெற்றுவிடும். இதனைத் தொடர்ந்து சோதனை ஓட்டமாக திட்டத்தின் இறுதிப்பகுதியான எம்.எல்.தேரி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படும். எம்.எல்.தேரி வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இன்னும் ஒருமாதத்தில் இந்த பகுதிக்கான பணி முடிவடைந்து விடும்.

    பொட்டல்விளை பகுதியில் ஒரு விவசாயி வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கும் விரைந்து முடிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும். மன்னார் புரம், கோட்டைகருங்குளம் ஆகிய பகுதிகளில் பணி கள் மெதுவாக நடந்து வருகிறது.

    கடந்த ஆட்சியில் இந்த பகுதியில் 6 முதல் 8 சதவீத பணிகள்தான் முடிவடைந்திருந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு 45 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளது.

    முதுமொத்தான் மொழியில் 65 சதவீதம் பணிகள் முடிவடைந்து உள்ளது. 3,500 கன அடி கொள்ளவு கொண்ட இந்த கால்வாயில் இந்த ஆண்டு முதல் கட்டமாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,300 கன அடி தண்ணீர் கொண்டு செல்லப்படும். இதன் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் முழு பலன் பெறாவிட்டாலும், 35 சதவீதத்திற்கு மேல் விவசாய நிலம் பயன்பெறும்்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கண்காணிப்பு பொறி யாளர்கள் செல்வ ராஜ், பத்மா, செயற்பொறி யாளர்கள் பழனிவேல், அண்ணாதுரை, திருமலை குமார், ஒப்பந்ததாரர் ஆர்.எஸ்.முருகன் மற்றும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கணேசன், நளன், சங்கரபாண்டியன் மற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால் மற்றும் பலர் உடன் சென்றனர்.

    புதுவாயல்-பழவேற்காடு 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Publicprotest

    பொன்னேரி:

    புதுவாயல் முதல் பழவேற்காடு வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை பொன்னேரி அருகே உள்ள சின்னக்காவனம் கிராமம் வழியே செல்கிறது.

    இந்த சாலையில் சின்னக் காவனம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், பழமையான 6 கோவில் இடிக்கப்படும் நிலை உள்ளது.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கிராம மக்களிடம் கருத்து கேட்காமல் சாலை விரிவாக்கப்பணி நடைபெறுவதாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் 4 வழிச் சாலை பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சின்னக்காவனம் பகுதியில் கிராம மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் வியாபாரிகள் அடைத்து உள்ளனர்.

    இதனால் சின்னக் காவனம் பகுதி வெறிச் சோடி காணப்படுகிறது. கடைகளிலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டு உள்ளது.

    4 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய, மாநில அரசுகள் தஞ்சாவூர்-மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்தை மக்கள் கருத்தை கேட்காமல் செயல்படுத்தக்கூடாது என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும்

    மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் அளவிடும் பணிகளை கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குறிப்பாக அரசு 4 வழிச்சாலை அமைக்க முடிவெடுத்தால் அந்த திட்டம் தொடர்பான பணிகளை ஆரம்பிக்கும் முன்பே 4 வழிச்சாலை அமைக்க இருக்கும் பகுதி வாழ் மக்கள் குறிப்பாக விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்டறிய வேண்டும். அதன் பிறகே அத்திட்டம் தொடர்பான பணிகளை செய்யலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

    ஆனால் 4 வழிச்சாலை தொடர்பாக அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் கருத்து ஏதும் கேட்காமல் கடந்த இரண்டு மாதங்களாக நிலம் அளவிடும் பணிகளை அரசு செய்து வருவது ஏற்புடையதல்ல.

    தற்போது சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலைத் திட்டத்தினால் விளைநிலங்களும், அதன் சார்ந்த நிலப்பகுதிகள், வனப்பகுதிகள் ஆகியவையும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் கேள்விக்குறியாகி உள்ளது.

    மத்திய அரசின் திட்டம் என்றாலும், மாநில அரசின் திட்டம் என்றாலும் அது விவசாயத்தை பாதிக்குமா, மக்களுக்கு பாதிப்பை தருமா என்ற சந்தேகத்திற்கு இடம் கொடுக்காத வகையில் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கலாம்.

    எனவே மத்திய மாநில அரசுகள் தஞ்சாவூர் மதுரை இடையே 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக செய்து வரும் நிலம் அளவிடும் பணிகளை கைவிட்டு, அப்பகுதி விவசாயிகள், பொது மக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TamilMaanilaCongress #GKVasan  
    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வரும் நிலையில் தக்கலை அருகே பணியை தடுத்து நிறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தக்கலை:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது. தற்போது தக்கலை அருகே சேவியர்புரத்தில் சாலை அமைக்கும்பணி தொடங்கி உள்ளது.

    இப்பகுதியைச் சுற்றி மாங்கரம், மடத்து விளை, நெடுவிளை, நெஞ்சந்தி விளை, அண்ணாநகர் காலனி, திருவள்ளுவர் காலனி, புதூர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் அனைத்தும் 4 வழிச்சாலை அமையும் பகுதியை ஒட்டியே உள்ளது.

    4 வழிச்சாலை பணிகள் தொடங்கினால் இக்கிராமங்களுக்கு செல்லும் இணைப்பு சாலைகள் துண்டிக்கப்படும். இதனால் கிராமங்களில் வாழும் மக்கள் நகர்ப்புறத்திற்கு வர பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்படும்.

    மேலும் இக்கிராமங்களுக்கு வந்து செல்லும் மினி பஸ்களும் நிறுத்தப்படும். இதனால் கிராம மக்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுவார்கள். எனவே இக்கிராமங்களில் 4 வழிச்சாலை அமையும் முன்பு இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

    இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பிற்பகல் சேவியர்புரம் பகுதியில் கிராமமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர். பிற்பகல் தொடங்கிய இப்போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.

    இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என கிராமமக்கள் அறிவித்தனர்.

    மேலும் போராட்டக்காரர்களுக்காக கஞ்சி காய்ச்சும் பணியும் தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மாற்றுபாதை ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பிறகே 4 வழிச்சாலை பணிகள் தொடரும் என்றும் கூறினர்.

    இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #tamilnews
    ×