என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்சங்"

    • இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.
    • சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முதல் trifold ஸ்மார்ட்போன் கேலக்ஸி Z trifold-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் ஒரு நிலையான ஸ்மார்ட்போனில் இருந்து 10 இன்ச் டேப்லெட் அளவிலான டிஸ்ப்ளே வரை விரிவடையும் பல-மடிப்பு டிசைன் கொண்டுள்ளது.

    கேலக்ஸி Z trifold அதன் இரண்டு தனித்துவமான டிஸ்ப்ளேக்களால் வரையறுக்கப்படுகிறது. கவர் ஸ்கிரீன் 6.5-இன்ச் FHD+ டைனமிக் AMOLED 2X பேனல் ஆகும், இது நிலையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் பரிமாணங்களை பிரதிபலிக்கிறது. இது 2600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

    விரிக்கும்போது, சாதனம் 2160 x 1584 தெளிவுத்திறன் கொண்ட 10.0-இன்ச் QXGA+ டைனமிக் AMOLED 2X பிரதான திரையை வெளிப்படுத்துகிறது. இரண்டு ஸ்கிரீன்களும் 1Hz முதல் 120Hz வரையிலான ரிப்ரெஷ் ரேட் பயன்படுத்துகின்றன.



    சாம்சங் நிறுவனம் Z TriFold மாடலை புகைப்படங்கள் எடுக்க தலைசிறந்த சாதனமாக நிலைநிறுத்துகிறது. இதில் OIS, F1.7 200MP வைடு-ஆங்கிள் கேமரா உள்ளது. இத்துடன் 12MP அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை 3x ஆப்டிகல் ஜூம் மற்றும் 30x வரை டிஜிட்டல் "ஸ்பேஸ் ஜூம்" வழங்கும். செல்ஃபி எடுக்க இரண்டு தனித்தனி 10MP சென்சார்களை கொண்டுள்ளது.

    இந்த சாதனம் கேலக்ஸிக்கான ஸ்னாப்டிராகன்® 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. இது 16 ஜிபி ரேம், 512 ஜிபி அல்லது 1 டிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த சாதனம் 5,600mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    விலை விவரங்கள்:

    புதிய கேலக்ஸி Z TriFold 512 ஜிபி மாடலின் விலை 2,445 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2,19,235 ஆகும். இது டிசம்பர் 12ஆம் தேதி முதல் கொரியாவில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சீனா, தைவான், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற சந்தைகளில் வெளியிடப்படும்.

    • ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.
    • புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தான் இந்தியாவில் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் மீடியாடெக் பிராசஸருக்கு பதிலாக எக்சைனோஸ் 1330 SoC பிராசஸரால் இயக்கப்படுகிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது. இத்துடன் ஜெமினி லைவ் ஆப்ஷன் உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. புதிய M சீரிஸ் ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    முந்தைய கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும்போது இந்த ஸ்மார்ட்போன் சற்று மெல்லியதாகவும் இலகுவாகவும் மாறியுள்ளது. மேலும் கேமரா வடிவமைப்பு புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி M17 5ஜி ஸ்மார்ட்போன் மூன்லைட் சில்வர் மற்றும் சஃபையர் பிளாக் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடலின் விலை ரூ.12,499 என்றும் 6GB + 128GB மாடலின் விலை ரூ.13,999 மற்றும் டாப்-எண்ட் 8GB + 128GB மாடலின் விலை ரூ.15,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய கேலக்ஸி M17 ஸ்மார்ட்போன் அக்டோபர் 13ஆம் தேதி அமேசான், சாம்சங் வலைதளங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும் .

    இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ரூ. 500 வங்கி சார்ந்த கேஷ்பேக் பெற முடியும். இத்துடன் அதிகபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் உள்ளது.

    • 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
    • டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய டேப்லெட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    S-சீரிஸ் டேப்லெட் மாடல்களை அப்டேட் செய்த நிலையில், சாம்சங் தற்போது பட்ஜெட் பிரிவு வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களை கவரும் வகையில், என்ட்ரி லெவல் டேப்லெட் கேலக்ஸி டேப் A11-ஐ அறிமுகம் செய்துள்ளது.

    இந்த மாடல் கேலக்ஸி A9 மாடலை போன்று அதே விலையில் தொடங்குகிறது. இந்த மாடல் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கேலக்ஸி டேப் A11 மாடலில் 2.2GHz ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 5,100mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட 8.7 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் கிரே மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பங்களில் வருகிறது.

    பட்ஜெட் பிரிவில் லெனோவா மற்றும் ரெட்மி என போட்டி நிறுவன பிரான்டுகளை விட கேலக்ஸி டேப் A11 விலையில் சலுகையை கொண்டுள்ளது. அதன்படி இந்த டேப்லெட் வைபை மாடலின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.12,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.17,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன், செல்லுலார் ஆப்ஷன்களின் விலை முறையே ரூ.15,999 மற்றும் ரூ.20,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மெமரியை கூடுதலாக நீட்டித்துக் கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

    • கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.
    • கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.

    பண்டிகை கால விற்பனையின் அங்கமாக சாம்சங் இந்தியா நிறுவனம் தனது கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சலுகைகளில் விலைக் குறைப்பு மற்றும் வங்கி சார்ந்த பலன்கள் வழங்கப்படுகிறது. இவை சாம்சங் நிறுவனத்தின் முதன்மை கேலக்ஸி S24 சீரிஸ் தொடங்கி பட்ஜெட் பிரிவில் கிடைக்கும் கேலக்ஸி F மற்றும் கேலக்ஸி M சீரிஸ் மாடல்கள் என பல்வேறு மாடல்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

    சலுகை விவரங்கள்:

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ்

    கேலக்ஸி S24 சீரிசில் கேலக்ஸி S24 அல்ட்ரா, கேலக்ஸி S24 மற்றும் புதிதாக கிடைக்கும் கேலக்ஸி S24 FE ஆகியவை குறைந்த விலையில் கிடைக்கின்றன.

    கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் விலை 1,34,999 ரூபாயில் இருந்து தற்போது 97,999 ரூபாய்க்கு கிடைக்கிறது

    கேலக்ஸி S24 மாடலின் விலை 74,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 39,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி S24 FE மாடலின் விலை 59,999 ரூபாயில் இருந்து ரூ. 29,999 ஆகக் குறைந்துள்ளது.

    பட்ஜெட் பிரிவு ஆப்ஷன்கள்:

    சாம்சங் அதன் மிட்-ரேஞ்ச் மற்றும் பட்ஜெட் பிரிவுக்கு ஏற்ற கேலக்ஸி A, கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது.

    கேலக்ஸி A சீரிஸ்

    கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் படி, 2024 ஆம் ஆண்டில் தங்கள் பிரிவுகளில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருந்த கேலக்ஸி A55 5ஜி மற்றும் கேலக்ஸி A35 5ஜி ஆகியவை தற்போது 42% வரை தள்ளுபடியுடன் கிடைக்கின்றன.

    கேலக்ஸி A55 5ஜி மாடலின் விலை ரூ. 39,999-இல் இருந்து தற்போது ரூ. 23,999 என குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி A35 5ஜி ஸ்மார்ட்போன் 30,999 ரூபாயில் இருந்து தற்போது ரூ. 17,999 என குறைந்துள்ளது.

    கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ்

    இளம் பயனர்களை இலக்காகக் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M மற்றும் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 30% வரை விலைக் குறைப்பு பெற்றுள்ளன.

    கேலக்ஸி M36 5ஜி மாடலின் விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைந்துள்ளது.

    கேலக்ஸி M16 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 13,499-இல் இருந்து தற்போது ரூ. 10,499ஆகக் குறைந்துள்ளது.

    கேலக்ஸி M06 5ஜி மாடல் ரூ. 9,999-இல் இருந்து தற்போது ரூ. 7,499 என குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி F36 5ஜி விலை ரூ. 19,999-இல் இருந்து தற்போது ரூ. 13,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி F06 5ஜி மாடலின் விலை ரூ. 9,999-இல் இருந்து ரூ. 7,499 என குறைந்துள்ளது.

    புதிய விலை மற்றும் சலுகைகள் சாம்சங் நிறுவனத்தின் AI-சார்ந்த அம்சங்கள் மற்றும் மேம்பட்ட வன்பொருளை அதிக வாடிக்கையாளர்கள் அனுபவிக்க வழி செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் வருகிற 22ஆம் தேதி முதல் கிடைக்கும்.

    • இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
    • சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு வெளியான F16 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் FHD+ 90Hz சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கொண்டுள்ளது.

    புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்கள் எடுக்க 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கேலக்ஸி ஒன் யுஐ 7 கொண்டிருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஓஎஸ் அப்டேட்கள், 6 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் 25W சார்ஜிங் வசதியுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் கேலக்ஸி F17 5ஜி அம்சங்கள்:

    6.7 இன்ச் 1080×2340 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    எக்சைனோஸ் 1330 பிராசஸர்

    மாலி-G68 MP2 GPU

    4 ஜிபி / 6 ஜிபி ரேம்

    128 ஜிபி மெமரி

    ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7.0

    50MP பிரைமரி கேமரா, F1.8, AF OIS

    5MP F2.2 அல்ட்ரா-வைடு லென்ஸ்

    2MP F2.2 மேக்ரோ கேமரா, LED ஃபிளாஷ்

    13MP F2.0 செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர்

    யுஎஸ்பி டைப்-சி ஆடியோ

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP54)

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 802.11 ac, ப்ளூடூத் 5.3, GPS + GLONASS

    5000mAh பேட்டரி

    25W வேகமான சார்ஜிங்

    விலை விவரங்கள்

    சாம்சங் கேலக்ஸி F17 5ஜி ஸ்மார்ட்போன் வைலட் பாப் மற்றும் நியோ பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB + 128GB மெமரி மாடலின் விலை ரூ.14,499 ஆகும். 6GB + 128GB மெமரி மாடல் விலை ரூ.15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு அறிமுக சலுகையாக ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் யுபிஐ (UPI) பரிவர்த்தனை செய்யும் போது ரூ. 500 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன.
    • முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. புதிய கேலக்ஸி S26 அல்ட்ரா மாடலில் பேட்டரி மேம்படுத்தப்பட்டு, அதிக திறன் கொண்ட புது யூனிட் இடம்பெறும் என்று பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தன.

    இந்த நிலையில், கேலக்ஸி S26 Ultra ஸ்மார்ட்போனில் பேட்டரி அப்கிரேடு வழங்கப்படுவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொடக்கத்தில் இருந்தே கேலக்ஸி S சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போதும் ஒரே திறன் கொண்ட பேட்டரியைக் கொண்டுள்ளன. இருப்பினும், மென்பொருள் மற்றும் யுஐ மூலம் சாம்சங் நிறுவனம் பயனர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கி வருகிறது.

    கேலக்ஸி S26 அல்ட்ரா பேட்டரி:

    டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (@UniverseIce) எக்ஸ் தள பதிவில் சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 5,000mAh பேட்டரியை பெறும் என்று கூறியிருந்தார். இது உண்மையாக இருந்தால், 2026 ஆம் ஆண்டு சாம்சங் அதன் கேலக்ஸி S அல்ட்ரா மாடலின் பேட்டரி அளவை அதிகரிக்காத ஆறாவது ஆண்டாக இருக்கும்.

    தற்போது சாம்சங் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் S சீரிஸ் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, அதன் முந்தைய மாடலான கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலை போலவே 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

    கடந்த பிப்ரவரி 2020-இல் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி S20 அல்ட்ரா ஸ்மார்ட்போனும் 5,000mAh பேட்டரியை கொண்டிருந்தது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, சாம்சங் கேலக்ஸி S26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது TSMC இன் 3 நானோமீட்டர் முறையில் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஸ்மார்ட்போன் மிகமெல்லிய பெசல்களுடன் 6.89 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம்.

    • ஸ்மார்ட்போன் சமீபத்தில் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்திலும் காணப்பட்டது.
    • கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமராவை வைக்க ஒரு ஐ-டிராப் நாட்ச் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    சாம்சங் நிறுவனம் சமீபத்தில் எக்சைனோஸ் 1380 பிராசஸர், 5,000mAh பேட்டரி கொண்ட கூடிய கேலக்ஸி M36 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து, தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தனது அடுத்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனினை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஒரு விளம்பர வலைப்பக்கம் இந்த ஸ்மார்ட்போனிற்காக உருவாக்கப்பட்டு இருப்பது, இதன் வெளியீட்டை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்திலும் காணப்பட்டது. இதில் அதன் வடிவமைப்பு மற்றும் சில ஹார்டுவேர் அம்சங்கள் வழங்கப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

    பிளிப்கார்ட் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பேனர் விளம்பரத்தில் சாம்சங் கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆர்வமுள்ள நுகர்வோர் இ-காமர்ஸ் தளத்தின் வலைத்தளம் வழியாக சாம்சங்கின் அடுத்த F-சீரிஸ் ஸ்மார்ட்போனைப் பெற முடியும்.

    தற்போது ஸ்மார்ட்போன் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், சரியான வெளியீட்டு தேதி, அதன் அசங்கள் மற்றும் இதர விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

    கேலக்ஸி F36 5ஜி எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    புதிய சாம்சங் கேலக்ஸி F-சீரிஸ் ஸ்மார்ட்போன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் வரக்கூடும். கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனிற்கான பேனர் விளம்பரத்தில் "Flex HI-FAI" என்ற டேக்லைன் இடம்பெற்றுள்ளது, அதில் AI எழுத்துக்கள் வேறு நிறத்தில் சிறப்பிக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் சிம் கார்டு ஸ்லாட் உடன் இந்த ஸ்மார்ட்போன் வரும் என்பதையும் பேனர் காட்டுகிறது. தோற்றத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீட்டளவில் மெல்லிய வடிவமைப்பு, செங்குத்தாக சீரமைக்கப்பட்ட பின்புற கேமரா பம்ப் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

    சமீபத்தில், சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் F-சீரிஸ் ஸ்மார்ட்போனும் கூகுள் பிளே கன்சோல் தரவுத்தளத்தில் காணப்பட்டது. இது ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களைக் காட்டியது. கேலக்ஸி F36 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்ஃபி கேமராவை வைக்க ஒரு ஐ-டிராப் நாட்ச் கொண்டிருக்கலாம் என்று தெரிகிறது.

    இந்தப் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி F36 ஸ்மார்ட்போனில் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேமுடன் இணைக்கப்பட்ட எக்சைனோஸ் 1380 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ரய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 உடன் இயங்கும் என்று கூறப்படுகிறது.

    • கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    • ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6.1 கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டது.

    சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உடன் பென்ச்மார்க்கிங் வலைதளத்தில் காணப்பட்டது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் விரைவில் ஒன் யுஐ 8 பீட்டா அப்டேட் பெறலாம் என்பதை பரிந்துரைக்கிறது. கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போன் மாடலில் சாம்சங்கின் சொந்த எக்சைனோஸ் 1480 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பிடத்தக்க வகையில், கேலக்ஸி A55 5ஜி சமீபத்தில் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன் யுஐ 7 அப்டேட்டை சமீபத்தில் பெற்றது. இந்த மாத தொடக்கத்தில், சாம்சங் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் கேலக்ஸி S25 சீரிசுக்கான ஒன் யுஐ 8 பீட்டா 2 வெர்ஷனை வெளியிட்டது.

    கேமராவை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி A55 5ஜி ஸ்மார்ட்போனில் 50MP பிரைமரி கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய 8MP சென்சார் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120Hz வரை ரிப்ரெஷ் ரேட் கொண்ட 6.6-இன்ச் Full-HD+ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 25W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.32,999, ரூ.42,999 மற்றும் ரூ.45,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

    • அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.
    • 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் ரூ. 59,999 ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Fan Edition ஸ்மார்ட்போன் இப்போது அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. கேலக்ஸி S24 FE இன் 128 ஜிபி மாடல் தற்போது ரூ. 40,000 க்கும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி எக்சேஞ்ச் ஆஃபர்கள், வட்டியில்லா மாத தவணை முறை வசதிகள் வழங்கப்படுகிறது. கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் எக்சைனோஸ் 2400e சிப்செட் மற்றும் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE சலுகை விவரங்கள்

    அமேசான் நிறுவனம் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.35,655-க்கு பட்டியலிட்டுள்ளது. இதே போன்று 256 ஜிபி மெமரி மாடல் ரூ.65,999க்கு பதிலாக ரூ.43,300க்கு கிடைக்கிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போதும், மாத தவணை முறை பரிவர்த்தனை மூலம் வாங்குவோருக்கு ரூ. 1,250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 34,405 ஆகக் குறைக்கும்.

    இத்துடன் மாதத்திற்கு ரூ. 1,729 இல் தொடங்கி ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. மேலும், அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்கள் ரூ. 1,069 வரை தள்ளுபடியைப் பெறலாம்.

    இதற்கிடையில், சாம்சங் இந்தியாவின் வலைத்தளம் தற்போது கேலக்ஸி S24 FE இன் பேஸ் வேரியண்ட்டை ரூ. 59,999க்கு விற்பனை செய்கிறது. பிளிப்கார்ட் தளத்தில், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 39,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

    சாம்சங் கேலக்ஸி S24 FE அம்சங்கள்

    சாம்சங் கேலக்ஸி S24 FE மாடலில் 6.7-இன்ச் Full-HD+ (1,080 x 2,340 பிக்சல்கள்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம், மற்றும் 512 ஜிபி வரை மெமரியுடன் எக்சைனோஸ் 2400e பிராசஸர் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி S24 FE மாடலில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP பிரைமரி கேமரா, OIS மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 8MP டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 12MP அல்ட்ரா-வைடு ஆங்கிள் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது. இத்துடன் 10MP செல்பி கேமரா கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68-சான்று பெற்றிருக்கிறது. இது 25W வயர்டு சார்ஜிங் வசதியுடன் 4,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    • அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார்.
    • அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்.

    அமெரிக்க அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

    அதன்படி அனைத்து நாடுகளுக்கும் எதிராக வரி விதிப்பை அறிவிப்பை வெளியிட்டார். சீனா மட்டும் பதிலடி கொடுக்கும் வகையில் பதில் வரி விதிப்பை வெளியிட்டது. மற்ற நாடுகள் ஆலோசனை நடத்தி வந்தன.

    அதனைத்தொடர்ந்து 90 நாட்களுக்கு வரி விதிப்பை டொனால்டு டிரம்ப் நிறுத்தி வைத்தார். ஒவ்வொரு நாடுகளடன் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா பேச்சுவார்தை நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும் என ஆப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டல் விடுத்திருந்தார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," இந்தியாவில் ஐபோன்களை தயாரிக்காதீர், அப்படி தயாரித்தால் 25% வரி விதிக்க நேரிடும். இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை குறைத்து, அமெரிக்காவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவதை விரும்பவில்லை.

    அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்கள் அமெரிக்காவிலேயே, தயாரிக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபோன் நிறுவனத்தை தொடர்ந்து அதன் முக்கிய தொழில் போட்டியாளரான சாம்சங் நிறுவனத்திற்கும் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து டிரம்ப், வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசுகையில், "வரி விதிப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல, சாம்சங் மற்றும் இதுபோன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் எந்த நிறுவனத்திற்கும் பொருந்தும். இல்லையெனில், அது நியாயமாக இருக்காது. அவர்கள் இங்கு தொழிற்சாலை அமைத்தால், வரி இருக்காது. இந்த நடவடிக்கை அமெரிக்காவில் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டது" என்று கூறினார்.

    சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களை முக்கியமாக வியட்நாம், இந்தியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உற்பத்தி செய்கிறது. இந்த வரி விதிப்பு, குறிப்பாக வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு 46% வரி விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

    • முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
    • சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த நிறுவன தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்தினர்.

    சாம்சங் நிர்வாகத்திற்கு, தொழிலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது.

    தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகள் தொடர்பாக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக, சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எட்டப்பட்டுள்ளது.

    மேற்கண்ட அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு நிர்வாகமும், தொழிலாளர்களும் சமரசமாகினர்.

    இந்நிலையில் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் சிவி. கணேசன் தலையில் சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்துறை மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் இடையே ஊதிய உயர்வு தொடர்பாக சுமார் 5 நேரம் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சாம்சங் நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    • இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும்.
    • செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.

    இந்தியாவில் தற்போது சாம்சங் கேலக்ஸி S25-ஐ ரூ.63,999 என்ற விலையில் வாங்கலாம். வழக்கமான விற்பனை விலையை விட குறைந்த விலையில் இந்த மொபைலை வாங்குபவர்கள் பயன்படுத்தக்கூடிய பல சலுகைகளை நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி HDFC வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் நேரடியாக வாங்கும்போது ரூ.10,000 வங்கி கேஷ்பேக்கைப் பெறலாம். அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி S25-க்கு தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களை பரிமாறிக்கொள்ள விரும்புவோருக்கு ரூ.10,000 அப்கிரேடு போனஸும் வழங்கப்படுகிறது.

    இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி S25 விலை 12 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் ரூ.74,999 இல் தொடங்குகிறது. இருப்பினும், சாம்சங் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ.11,000 அப்கிரேடு போனஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதன் விலை ரூ.63,999 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை 12 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இறுதி பரிமாற்றத் தொகை உங்கள் பழைய ஸ்மார்ட்போனின் தயாரிப்பு, மாடல் மற்றும் நிலை மற்றும் உங்கள் பகுதி உள்ளிட்டவைகளை பொறுத்து மாறுபடும்.

    வாடிக்கையாளர்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்ய விரும்பவில்லை என்றால் ரூ. 10,000 மதிப்புள்ள வங்கி கேஷ்பேக்கைப் பெறும் ஆப்ஷன் உள்ளது. கூடுதலாக, சாம்சங் சார்பில் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை மற்றும் ரூ. 8,000 வங்கி கேஷ்பேக் வழங்குகிறது. இந்த சலுகை HDFC வங்கி கார்டுகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு செல்லுபடியாகும். இதற்கிடையில், NBFC வாடிக்கையாளர்கள் 24 மாத வட்டியில்லா மாத தவணை திட்டத்துடன் சாம்சங் கேலக்ஸி S25 மாடலையும் வாங்கலாம்.



    இந்த சலுகைகள் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் தளங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக ஸ்மார்ட்போனை வாங்கினால் செல்லுபடியாகும் என்று சாம்சங் கூறுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் டூயல் சிம் (நானோ + நானோ), ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஒன்யுஐ 7 இல் இயங்குகிறது. இது 6.2-இன்ச் Full HD+ (1,080×2,340 பிக்சல்) டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே 120Hz ரிப்ரெஷ் ரேட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஃபார் கேலக்ஸி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி ஆப்ஷனில் கிடைக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க சாம்சங் கேலக்ஸி S25 மூன்று கேமரா சென்சார்களை பெறுகிறது. இதில் 2x இன்-சென்சார் ஜூம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50MP பிரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், OIS மற்றும் 10MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP கேமரா உள்ளது.

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்தவரை 5G, 4G LTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, GPS, NFC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது 25W (வயர்டு) இல் சார்ஜ் செய்யக்கூடிய 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் வேகமான வயர்லெஸ் சார்ஜிங் 2.0 (15W) மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுக்காக வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    ×