என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எத்தியோப்பியா"

    • இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.
    • எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.

    எத்தியோப்பியாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டு பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருக்கிறது. நான் இங்கு என் சொந்த ஊரில் இருப்பது போல் உணர்கிறேன். ஏனென்றால் இந்தியாவில் உள்ள எனது சொந்த மாநிலமான குஜராத்தும் சிங்கங்களின் இருப்பிடமாக உள்ளது.

    இந்தியாவின் தேசியப் பாடலான வந்தே மாதரம் மற்றும் எத்தியோப்பியாவின் தேசிய கீதம் ஆகிய இரண்டுமே நமது தேசத்தை அன்னை என்று குறிப்பிடுகின்றன. அவை நமது பாரம்பரியம், கலாச்சாரம், அழகு ஆகியவற்றில் பெருமை கொள்ளவும், தாய்நாட்டைப் பாதுகாக்கவும் நம்மை தூண்டுகின்றன.

    எத்தியோப்பியா ஆப்பிரிக்காவின் ஒரு முக்கிய சந்திப்பில் அமைந்துள்ளது. இந்தியா இந்தியப் பெருங்கடலின் மையத்தில் உள்ளது. இரு நாடுகளும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் இணைப்பு ஆகியவற்றில் இயல்பான கூட்டாளிகள்.

    இந்தியாவின் 140 கோடி மக்களின் சார்பில் நான் நட்பு, நல்லெண்ணம் மற்றும் சகோதரத்துவ வாழ்த்துக்களைக் கொண்டு வந்து உள்ளேன். எத்தியோப்பியாவின் உயரிய விருதை பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இந்த விருதை இந்திய மக்களின் சார்பாக பணிவுடனும் கைகூப்பியும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    இந்தியாவும் எத்தியோப்பியாவும் தட்பவெப்ப நிலையிலும் உணர்விலும் ஒருமித்த அன்பைப் பகிர்ந்து கொள்கின்றன. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது மூதாதையர்கள் பரந்த கடல்களுக்கு அப்பால் தொடர்புகளை உருவாக்கினார்கள்.

    1941-ம் ஆண்டில் எத்தியோப்பியாவின் விடுதலைக்காக இந்திய வீரர்கள் எத்தியோப்பியர்களுடன் இணைந்து போரிட்டனர்.

    இந்திய நிறுவனங்கள் எத்தியோப்பியாவில் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர்களில் ஒன்றாக உள்ளன. வளரும் நாடுகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் ஒரு வருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், வழங்கவும் நிறைய உள்ளன.

    உலகளாவிய தெற்குப் பகுதி யாருக்கும் எதிராக அல்லாமல், அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் எழுச்சி பெறும் ஒரு உலகமாகும்.

    பயங்கரவாதத்தை எதிர்க்கும் எத்தியோப்பியா நாட்டிற்கு நன்றி

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
    • இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே.

    பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்கு சென்றவர் அங்கிருந்து நேற்று எத்தியோப்பியா சென்றைடைந்தார். அங்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி அவரை வரவேற்றார்.

    பின்னர் ஒருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொருளாதாரம், தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை குறித்து நீண்டது பேச்சு. எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க இந்தியா முடிவு செய்ததாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    இதையடுத்து பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின், தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா என்ற உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. எத்தியோப்பிய பிரதமர் இந்த விருதை மோடிக்கு அளித்தார். இந்த விருது பெறும் முதல் உலக தலைவர் மோடியே ஆவார். 

    • அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.
    • இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.

    பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

    முதல் கட்டமாக பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் வரவேற்றார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

    அதன்பின், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைன் உடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் அருங்காட்சியகம் ஒன்றை பார்வையிட்டார். அவரை அமரவைத்து ஜோர்டான் மன்னர் கார் ஓட்டிய வீடியோ வைரலானது.

    இந்த நிலையில், ஜோர்டான் டிரிப்-ஐ முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார்.

    எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி வரவேற்றார்.

    இந்த பயணத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை, எதியோபியாவுக்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் சந்திப்பு நடந்தும் மோடி அடுத்ததாக ஓமன் செல்ல உள்ளார்.  

    • எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.
    • தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

    கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிமலை 12,000 ஆண்டுகளில் முதல் முறையாக வெடித்துள்ளது.

    தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து 500 மைல் தொலைவில் அமைந்துள்ள ஹைலே குப்பி எரிமலை இன்று வெடித்துள்ளது. இதனால் எரிமலையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்புகை வெளியேறி வருகிறது.

    எரிமலை வெடிப்பால் லாவா எரிமலை குழம்பும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

    எரிமலையிலிருந்து சாம்பல் மேகங்கள் இந்தியா, ஏமன், ஓமன் மற்றும் வடக்கு பாகிஸ்தான் நோக்கி நகர்ந்து வருகின்றன.  

    இந்த எரிமலை வெடிப்பில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தியாவில் விமானப் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    கண்ணூரில் இருந்து அபுதாபிக்கு சென்ற இண்டிகோ விமானம் அகமதாபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.  

    • மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்தது.
    • இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாக காவல்துறை தெரிவித்தது.

    எத்தியோப்பியாவில் தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்தில் 36 பேர் பலியாகினர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அம்ஹாரா பிராந்தியத்தின் மின்ஜார் ஷெங்கோரா வோரெடா, வடக்கு ஷேவா மண்டலத்தில் உள்ள அரெர்டி செயின்ட் மேரி தேவாலயத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

    புதன்கிழமை, மத விழாவுக்காகக் கூடி இருந்த பக்தர்களின் பாரம் தாங்காமல் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மரச் சாரம் இடிந்து விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.

    இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்கள் நசுங்கி இறந்ததாகவும், ஓரங்களில் இருந்தவர்கள் வெளியே ஓடி காயங்களுடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    காயமடைந்தவர்களில் சிலர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.   

    • எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் 240-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தகவல்.

    எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்ததால், விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

    போயிங் 777-8 ரக விமானம் இன்று அதிகாலை 3 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

    "விமானத்தில் புகை வந்தது.. விமானத்தில் இருந்த பயணிகளில் பலர் அச்சம் அடைந்தனர்," என்று அவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் 240-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

    • எத்தியோப்பியாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

    தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதுவரை 5க்கும் மேற்பட்டோரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது.
    • இதில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    அடிஸ் அபாபா:

    தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தின் கோபா மண்டலத்தில் கடந்த 21-ம் தேதி கனமழை பெய்தது. இதனால் அங்கு மண் சரிவு ஏற்பட்டது. இந்த மண் சரிவில் சிக்கி குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 55 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

    மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழு ஈடுபட்டு வருகிறது. காணாமல் போனவர்களை தேடி வருகிறோம் என்பதால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்கலாம் என ஐ.நா. அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

    • திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் கிராமப்பிற பகுதிகளில், திருமணங்கள் போன்ற சமூக நிகழ்வுகளுக்கு பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதற்குப் பதிலாக லாரிகளை வாடகைக்கு எடுப்பதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில் அவை மலிவு விலையில் கிடைப்பதாலும், பலரை ஏற்றிச் செல்ல முடிவதாலும், காலாச்சார ரீதியாக மக்கள் இவ்வாறு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில், தெற்கு எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 64 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும், சிலர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. மோசமான சாலையும் விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    எத்தியோப்பியாவில் பிரதமரை குறிவைத்த நிகழ்த்திய குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Ethiopianpminister #Ethiopiablast
    அடிஸ் அபாபா:

    எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் நேற்று முன்தினம் ஒரு பேரணியின் நிறைவில் நடந்த பொதுக்கூட்டத்தில் அந்த நாட்டின் பிரதமர் அபிய் அகமது (வயது 41) கலந்துகொண்டு பேசினார்.

    அவர் பேசி முடித்ததும், அங்கே ஒரு குண்டுவெடிப்பு நடந்தது. மேடையில் இருந்த பிரதமரை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில், அவர் காயமின்றி தப்பினார்.

    ஆனால் இந்த குண்டுவெடிப்பில் 153 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிறிது நேரத்தில் இறந்தார்.



    இந்த நிலையில், மேலும் ஒருவர் நேற்று இறந்தார். இதனால் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    இதுபற்றிய தகவலை வெளியிட்ட அந்த நாட்டின் சுகாதார மந்திரி அமிர் அமன், “குண்டுவெடிப்பில் மேலும் ஒரு எத்தியோப்பியர் இறந்துவிட்டார் என்று தகவல் வந்து உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.

    இந்த குண்டுவெடிப்பில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாகவும் 8 பேரை பிடித்து போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதாக அடிஸ் அபாபா நகர துணை போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

    ×