விமான காக்பிட்-இல் திடீர் புகை.. அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் 240-க்கும் அதிகமான பயணிகள் இருந்ததாக தகவல்.
விமான காக்பிட்-இல் திடீர் புகை.. அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கம்
Published on

எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு சென்று கொண்டிருந்த எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானத்தின் காக்பிட்-இல் திடீரென புகை வந்ததால், விமானம் அவசர அவசரமாக டெல்லியில் தரையிறக்கப்பட்டது.

போயிங் 777-8 ரக விமானம் இன்று அதிகாலை 3 மணி அளவில் டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறங்கியது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக, அதில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

"விமானத்தில் புகை வந்தது.. விமானத்தில் இருந்த பயணிகளில் பலர் அச்சம் அடைந்தனர்," என்று அவர் தெரிவித்தார். இந்த விமானத்தில் 240-க்கும் அதிகமானோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com