என் மலர்

  நீங்கள் தேடியது "ஊழியர் கைது"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

  விழுப்புரம்:

  திண்டிவனம் அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ். இவர் திண்டிவனம் தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது அங்கு இருந்த பதிவறை எழுத்தர் சிவஞான வேலு என்பவரிடம் தனது தாயார் கலைமணி என்பவருக்கு வழங்கப்பட்ட இலவச மனைப் பட்டாவில் தன் தாயின் பெயர் கிராம, வட்ட கணக்கில் திருத்தம் செய்வதற்காக 2007 பதிவேடுகளை எடுத்து தர கூறினார்.இதற்கு பதிவறை எழுத்தர் சிவஞானவேலு ரூ. 5 ஆயிரம் யுவராஜிடம் கேட்டார்.

  அதிர்ச்சி அடைந்த யுவராஜ்இதுபற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.அதனை தொடர்ந்து இன்று காலை ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை யுவராஜிடம் கொடுத்தனர்.இந்த ரூபாய் நோட்டுகளை அவர் பதிவறை எழுத்தர் ஞானவேலுவிடம் கொடுத்தார்.

  அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவஞான வேலுவை கையும் களவுமாக பிடித்தனர். மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர் லஞ்சமாக கேட்டது உண்மை என தெரிய வந்ததையடுத்து அவர் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.  ×