என் மலர்tooltip icon

    வழிபாடு

    • இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
    • பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது.

    பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விரதம் இருந்து பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமையும் கூட. அதனால்தான் இந்த விரதம் சுக்கிரவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வளர்பிறையில் வரும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.

    அதன்படி, இன்றைய பூஜையின் முழு மனதுடன் உங்களின் வேண்டுதலை சிவனுக்கு சில பொருட்களை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் நிறைவேறும். அதாவது உங்களுக்கு ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் இதனை செய்யலாம்.

    இன்றைய பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் இந்த நாளில் சிவ பெருமானுக்கு என்ன பிரசாதம் செய்வது பொருத்தமானது என்று பார்ப்போம்...

    இன்று சுக்கிரவார பிரதோஷ விரதத்தை வழிபடுவதற்கு உகந்த நேரம்:

    இன்றைய பிரதோஷ காலம் மாலை 5:01 மணிக்கு தொடங்கி 6:45 மணி வரை. வழிபாட்டிற்கான நல்ல நேரம் மாலை 5:59 மணி முதல் இரவு 8:37 மணி வரை. தோராயமாக இரண்டரை மணி நேரம் கொண்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மனதார சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால், உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.

    சிவ பெருமானுக்கு உகந்தவை:

    உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தாலோ அல்லது சில வேலைகள் பாதியில் நின்றாலோ இன்று இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சுக்கிர வார பிரதோஷ விரதத்தில், சிவபெருமான் சிவலிங்கத்தில் சில சிறப்புப் பொருட்களை படைத்தால் மகிழ்வார். அதாவது, சிவ பெருமானுக்கு பச்சைப் பால் மற்றும் குங்குமப்பூ படைத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன், காதல் வாழ்க்கையில் உள்ள தடைகளும் குறையும். இது தவிர, நீங்கள் மற்றொரு எளிய பரிகாரத்தையும் முயற்சி செய்யலாம். வில்வத்தில் சிறிது தேன் தடவி சிவ பெருமானுக்கு சமர்ப்பித்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும்.

    பிரதோஷத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:

    இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. இன்று, தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், இந்த நாளில் ஒருவர் தனது பேச்சின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். மேலும், பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது. மேலும், சிவபெருமானுககு உடைந்த எந்தப் பொருளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குங்குமப்பூவை படைத்தால், அதன் இழைகள் உடைக்கப்படக்கூடாது.

    • திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி.
    • இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-16 (வெள்ளிக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி காலை 10.03 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : திருவாதிரை பின்னிரவு 3.04 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம் : மேற்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை

    இன்று பிரதோஷம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை ரிஷப வாகனத்தில் பவனி, அரிவாட்ட நாயனார் குரு பூஜை, மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தங்கப் பல்லக்கு சுவாமி அம்பாள் விருஷப் சேவை, சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம், ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த் தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு, கீழ் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஐப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.

    திருவிடைமருதூர்ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு, லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஹிமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோயிலில் அபிஷேகம், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யான வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்ன சேவை, பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு, தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம், திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை, திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் சிறப்பு பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நற்செய்தி

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-தெளிவு

    கடகம்-தேர்ச்சி

    சிம்மம்-உதவி

    கன்னி-கடமை

    துலாம்- உண்மை

    விருச்சிகம்-உதவி

    தனுசு- முயற்சி

    மகரம்-போட்டி

    கும்பம்-சுகம்

    மீனம்-சுபம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும். தொழில் முன்னேற்றம் கருதி பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

    ரிஷபம்

    கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத்தரம் உயர வழிசெய்து கொள்வீர்கள்.

    மிதுனம்

    பிரச்சனைகள் தீரும் நாள். பிரபலஸ்தர்களின் ஆதரவு உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

    கடகம்

    நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வீடு கட்டும் பணியில் விருப்பம் காட்டுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    சிம்மம்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கோபத்தின் காரணமாக ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கன்னி

    பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். பாக்கிகள் வசூலாகும்.

    துலாம்

    பக்குவமாகப் பேசி பாராட்டுகளைப் பெறும் நாள். பயணங்களால் பலன் கிடைக்கும். உறவினர்களில் ஒரு சிலர் உதவி கேட்டு வருவர். வரவு திருப்தி தரும்.

    விருச்சிகம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். அடுத்தவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதால் விரயம் ஏற்படும்.

    தனுசு

    ஆதாயம் பார்க்காமல் அடுத்தவருக்கு உதவும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர். வாகன பராமரிப்பிற்காக செலவிடுவீர்கள்.

    மகரம்

    பொருளாதார நிலை உயரும் நாள். பூர்வீகச் சொத்து பிரச்சனைகள் அகலும். தொழில் கூட்டாளிகளால் லாபம் உண்டு. கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கும்பம்

    திறமைகள் பளிச்சிடும் நாள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

    மீனம்

    பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடு கட்டும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    • பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு ‘ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
    • மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சுரும்பார் குழலி சமேதி ரெத்தின கிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சோழநாட்டின் காவிரி தென்கரை தலங்களில் முதல் தலமாகவும், தேவாரத் திருத்தலங்களில் 64-வது தலமாகவும் இக்கோவில் திகழ்கிறது.

    தல வரலாறு

    காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வைராக்கிய பெருமாள் என்பவர், ஒரு முறை இத்தலம் வந்து, "தன் தங்கைக்கு குழந்தை பேறு கிடைத்தால், தன் சிரசை காணிக்கையாக தருவதாக" வேண்டிக்கொண்டார். வேண்டுதலின்படி, தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைத்ததால், தன்னுடைய சிரசை சுவாமிக்கு காணிக்கையாக கொடுத்தார். இந்த ஆலய அடிவாரத்தில் வைராக்கிய பெருமாள் பாதமும், மலை உச்சியில் அவரின் முழு உருவ திருமேனியும் உள்ளது. இவருக்கு தேங்காய் பால், தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்கு போடப்படும் மாலையும், பின்னர் இவருக்கே அணிவிக்கப்படுகிறது.

    ஒரு முறை ரெத்தின கிரீஸ்வரர், வட நாட்டின் மங்கலமா நகரில் ஆட்சி செய்த மன்னனின் நவரத்தின கிரீடத்தை காணாமல் போகும்படி செய்தார். இதனால் வருந்திய மன்னன் முன்பாக தோன்றிய வேதியன் ஒருவன், "உன்னுடைய கிரீடம் ரெத்தின -ரெத்தினகிரீஸ்வரர் கிரீஸ்வரர் வசம் உள்ளது" என்று கூறினான். உடனே மன்னன், ரெத்தினகிரீஸ்வரரிடம் வந்து மணிமுடி வேண்டி நின்றான்.

    அப்போது சிவாச்சாரியார் வடிவில் வந்த இறைவன், "காவிரி நீர் கொண்டு இங்குள்ள கொப்பரை முழுவதையும் நிரப்ப வேண்டும். அப்போதுதான் உன்னுடைய மணி முடி கிடைக்கும்" என்றார். ஆனால் மன்னன் எவ்வளவு முயன்றும் கொப்பரையை நிரப்ப முடியவில்லை. இதனால் கோபம் அடைந்த மன்னன், சிவாச்சாரியாரை நோக்கி வாளை வீசினான். அப்போது சிவாச்சாரியார் சிவலிங்கத்துக்கு பின்னால் சென்று மறைய, வாள் சிவலிங்கத்தின் மீது பட்டு ரத்தம் பீறிட்டது. பின்னர், தன் தவறை உணர்ந்த மன்னன், தான் செய்த தவறுக்காக தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். அப்போது மன்னனை தடுத்த இறைவன், மணிமுடியை வழங்கி அருளினார். இதற்கு சாட்சியாக இப்போதும் சிவலிங்கத்தின் மீது வெட்டு தழும்பு உள்ளதை காண முடியும்.

    இந்நிகழ்வுக்கு பின்னர் ரெத்தினகிரீஸ்வரரை வழிபட்ட மன்னன், தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் நடைமுறையை கொண்டுவந்தான். இன்றளவும், தினமும் இறைவனின் அபிஷேகத்திற்காக சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

    பஞ்சபாண்டவர்கள், வனவாசத்தின்போது இங்கு தங்கி இருந்ததாகவும், அதனால் தான் இந்த மலைக்கு 'ஐவர் மலை' எனப் பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். பின்பு, அதுவே மருவி 'அய்யர்மலை' என்றானது. பாண்டவர்கள் தங்கி இருந்ததற்கு சான்றாக, மலையின் நடுப்பகுதியில் சிறிய குகையில் ஐந்து படுக்கைகள் உள்ளன.

    கோவில் அமைப்பு

    1500 ஆண்டுகள் பழமைவாய்ந்ததாக கருதப்படும் இக்கோவில், 2-ம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டதாகும். நான்கு கிலோமீட்டர் சுற்றளவும், 1178 அடி உயரமும் கொண்ட மலையின் மீது இக்கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள சுவாமியை தரிசிக்க 1017 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலை ஏறும் வழியில் இரண்டு பாறைகளுக்கு இடையில் சப்த கன்னியர்கள் இருக்கிறார்கள். அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் சன்னிதிகள் உள்ளன.

    இங்குள்ள 'பொன்னிடும் பாறை'யில் இருந்து 103 படிகள் ஏறிச் சென்றால் பதினெட்டு படிகள் வரும். மிகவும் விசேஷமான இந்த பதினெட்டு படிகளின் நடுவில் ஒரு மலர் செதுக்கப்பட் டுள்ளது. வழக்கு, பிரச்சனை ஏற்படும்போது, இந்த படிகளில் தீபம் ஏற்றி 'நான் குற்றமற்றவன், என் பிரச்சனையை தீர்த்து வை இறைவா' என வேண்டிக்கொள்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் பிரச்சனைகளுக்கு உடனே தீர்வு கிடைப்பதாக நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

    மலையை சுற்றியுள்ள எட்டு பாறைகளுக்கு நடுவில் ஒன்பதாவது பாறையில் சுயம்பு மூர்த்தியாக ரெத்தின கிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இவர் வாட்போக்கிநாதர், ராஜலிங்கமூர்த்தி, மாணிக்கமலையான், மலை கொழுந்தீஸ்வரர் என்ற பெயரிலும், அம்பாள் சுரும்பார் குழலி, பொன்னும் சுரும்பாயி, ஆராளகேஸ்வரி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். குல தெய்வம் யார் என தெரியாதவர்கள், ரெத்தினகிரீஸ்வரரை வழிபடலாம்.

    மாசி மாதம் சில தினங்கள் சூரிய கதிர்கள் சுவாமியின் மீது விழுவது சிறப்பாகும். திருவண்ணாமலை கிரிவலம் போல, பவுர்ணமி தோறும் மலையை சுற்றி சுமார் 2.5 கி.மீ. தூரம் கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. கோவில், காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையும், பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை செல்லும் சாலையில் 8 கி.மீ. தொலைவில் அய்யர்மலை உள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உடனிருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உத்தியோக முயற்சி கைகூடும்.

    ரிஷபம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் கனவுகளை நனவாக்குவீர்கள்.

    மிதுனம்

    தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

    கடகம்

    கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    சிம்மம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    கன்னி

    பணவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு.

    துலாம்

    விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.

    விருச்சிகம்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். சகோதர வழியில் சச்சரவுகள் உண்டு.

    தனுசு

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை புதுப்பிக்க முயற்சிப்பீர்கள். அலைபேசி வாயிலாக சுபச்செய்திகள் உண்டு.

    மகரம்

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். வரன்கள் வந்து வாயிற்கதவை தட்டும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் நன்மை உண்டு.

    கும்பம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    மீனம்

    யோகமான நாள். கைமாற்றாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    • காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் ரதோற்சவம்.
    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-15 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : ஏகாதசி நண்பகல் 12.17 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம் : மிருகசீரிஷம் மறுநாள் விடியற்காலை காலை 4.28 மணி வரை பிறகு திருவாதிரை.

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சர்வ ஏகாதசி, காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ரதோற்சவம்

    இன்று சர்வ ஏகாதசி, காஞ்சிபுரம் ஸ்ரீ உலகளந்த பெருமாள் ரதோற்சவம், மருதமலை ஸ்ரீ முருகப் பெருமான் புறப்பாடு, திருச்சேறை ஸ்ரீ காரநாதர் திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம். கண்ணப்ப நாயனார் குரு பூஜை, சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம், திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம், ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று, திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்,

    குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கு அபிஷேகம், தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், திரு மெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு, திருக்கோஷம்பூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு கோவிலில் ஸ்ரீராமர்முலவருக்குத் திருமஞ்சனம், ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி, ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-கடமை

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-கண்ணியம்

    கடகம்-கீர்த்தி

    சிம்மம்-லாபம்

    கன்னி-பெருமை

    துலாம்- மேன்மை

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- பயணம்

    மகரம்-நலம்

    கும்பம்-நட்பு

    மீனம்-உவகை

    • இக்கோவில், தமிழகத்தின் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
    • அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டி உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பழமைவாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வரதராஜப் பெருமாள், பெருந்தேவி மகாலட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என இங்குள்ள ஏழுமலை வாசனுக்கு எல்லாமே 7 என்ற எண்ணிக்கையில் அமைந்திருப்பது சிறப்பாகும். இக்கோவில், தமிழகத்தின் திருப்பதி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள், துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்லும் நிலை ஏற்பட்டது. அதன்படி, பல இடங்களுக்கு சென்றுவிட்டு, சூளகிரி மலைப்பகுதிக்கு வந்தனர். அப்போது பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன், பெருமாளை வழிபட எண்ணி, இங்குள்ள பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக நம்பப்படுகிறது.

    அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு சான்றாக இந்த மலையில் 'ஐந்து குண்டு' எனப்படும் ஐந்து குன்றுகள் உள்ளன. இங்கிருக்கும் மலை பார்ப்பதற்கு சூலம் போன்ற அமைப்பில் இருப்பதாலேயே இப்பகுதி சூளகிரி (சூலகிரி) என அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயம், பல காலங்களில் பல மன்னர்களால் படிப்படியாக கட்டப்பட்டதாகும். அர்ஜூனனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமாளுக்கு சோழ மன்னர்கள் கருவறை கட்டி உள்ளனர். விஜயநகர மன்னன் கிருஷ்ண தேவராயர், முன்மண்டபத்தை கட்டி உள்ளார். பின்னர், ஹொய்சாலர்கள், பாளையக்காரர்கள் மற்றும் சில சிற்றரசர்கள் என பலர் கோவிலை விரிவுபடுத்தி உள்ளனர்.

    சுமார் மூன்றாயிரம் அடி உயரம் கொண்ட சூளகிரி மலையின் அடிவாரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வரதராஜப் பெருமாள் மேற்கு திசை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். கருவறை, மற்ற கோவில்களை விட உயரம் குறைவாக காணப்படுகிறது. பெருந்தேவி மகாலட்சுமி தாயார், பெருமாளை பார்த்தபடி கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். மகாமண்டபத்தின் வலதுபக்கத்தில் அனுமன் வீற்றிருக்கிறார்.

    உத்தராயண காலத்தில் சூரியன் மறையும் பெருமாள் வேளையில், சூரியக் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் விழுவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். கோவிலில் வைகுண்ட ஏகாதசியின்போது, கருடசேவை வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் 25 கி.மீ. தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    கோரிக்கைகள் நிறைவேறும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட வீணான குழப்பங்கள் மாறும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    ரிஷபம்

    மகிழ்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று முடிவிற்கு வரும். புதிய உத்தியோகம் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    மிதுனம்

    சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சகபணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கடகம்

    எதிரிகள் விலகும் நாள். வளர்ச்சி அதிகரிக்கும். முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு உண்டு.

    சிம்மம்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும்.

    கன்னி

    கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாள். அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

    துலாம்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ஓய்வெடுக்க முடியாத அளவில் வேலைகள் வந்து சேரும். உணவில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லும்.

    விருச்சிகம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நெஞ்சம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும்.

    தனுசு

    புதிய பாதை புலப்படும் நாள். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நண்பர்கள் அழைப்பு விடுப்பர்.

    மகரம்

    பிரச்சனைகளிலிருந்து விடுபடும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன பராமரிப்பிற்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.

    கும்பம்

    கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். வரவு திருப்தி தரும். சகோதர வழிப் பிரச்சனைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மீனம்

    யோகமான நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். சுபச்செய்தியொன்று வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    • திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம்.
    • திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு தை-14 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : தசமி பிற்பகல் 2.36 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம் : கார்த்திகை காலை 7.42 மணி வரை பிறகு ரோகிணி நாளை விடியற்காலை 4.57 மணி வரை பிறகு மிருகசீர்ஷம்

    யோகம் : அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை

    இன்று சுபமுகூர்த்த தினம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் ராமாவதாரம். இரவு அனுமார் வாகனத்தில் பவனி. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புறப்பாடு. குன்றக்குடி ஸ்ரீ முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலை அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-லாபம்

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-அமைதி

    கடகம்-இன்பம்

    சிம்மம்-நற்செயல்

    கன்னி-உதவி

    துலாம்- நலம்

    விருச்சிகம்-நட்பு

    தனுசு- உழைப்பு

    மகரம்-முயற்சி

    கும்பம்-வெற்றி

    மீனம்-பயணம்

    • சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    • கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை ஒருசேர வந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருப்போரூர்:

    தை கிருத்திகை விழாவையொட்டி இன்று திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

    இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து மாட வீதியில் வலம் வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

    மேலும் முடிக்காணிக்கை செய்த பக்தர்கள் சரவணப் பொய்கையில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கிருத்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை ஒருசேர வந்ததால் கோவில் வளாகத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் உற்சவர் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு சென்றனர்.

    முன்னதாக நேற்று இரவு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு வந்தார். அவர் கோவில் அருகில் வடக்கு மாடவீதியில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்து இன்று அதிகாலை முருகப் பெருமானை அர்ச்சனை செய்து வழிபட்டார்.

    தை கிருத்திகையையொட்டி கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் திருத்தணி முருகன்கோவிலிலும் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

    முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    • காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.
    • திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.

    27-ந் தேதி (செவ்வாய்)

    * கார்த்திகை விரதம்.

    * திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் பவனி.

    * கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் புறப்பாடு.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் நந்தீசுவர வாகனத்திலும், அம்பாள் யாளி வாகனத்திலும் பவனி.

    * காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருவீதி உலா.

    * கீழ்நோக்கு நாள்.

    28-ந் தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் காலை தந்த பல்லக்கிலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் பவனி.

    * திருப்பரங்குன்றம் ஆண்டவர் தெப்ப உற்சவம்.

    * மன்னார்குடி ராஜ கோபால சுவாமி புறப்பாடு.

    * பழனி ஆண்டவர் வெள்ளி காமதேனு வாகனத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    29-ந் தேதி (வியாழன்)

    * சர்வ ஏகாதசி.

    * காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் ரத உற்சவம்.

    * திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாணம்.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * சமநோக்கு நாள்.

    30-ந் தேதி (வெள்ளி)

    * பிரதோஷம்.

    * கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் பவனி.

    * பழனி ஆண்டவர் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.

    * குன்றக்குடி முருகன் வெள்ளி ரதத்தில் பவனி.

    * மேல்நோக்கு நாள்.

    31-ந் தேதி (சனி)

    * நெல்லை கெட்வெல் ஆஞ்சநேயர் வருசாபிஷேகம்.

    * திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.

    * பழனி ஆண்டவர் காலை தெய்வானை திருமணம், இரவு வள்ளி திருமணக் காட்சி.

    * பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு.

    1-ந் தேதி (ஞாயிறு)

    * பவுர்ணமி.

    * தைப்பூசம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வண்டியூர் எழுந்தருளி தெப்பத் திருவிழா.

    * திருச்சேறை சாரநாதர், கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, பழனி ஆண்டவர், மருதமலை முருகன் தலங்களில் ரத உற்சவம்.

    * மேல்நோக்கு நாள்.

    2-ந் தேதி (திங்கள்)

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * சென்னை சிங்காரவேலவர் தெப்ப உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    ×