என் மலர்
வழிபாடு
- பூணூலை தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.
- ஜெபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.
பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப் பட்ட பூணூலை தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜெபித்து ஜெபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம். இதற்கு ஒரு கதை உண்டு.
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டி வந்தார். அவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாழ்ந்து வந்தது. கணவன், மனைவி ஒரு பெண்குழந்தை அவருக்கு இருந்தது.
அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.
பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்தது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ள சம்மதித்தான். ஆனால் அந்த கல்யாணத்தைக் குறைந்தபட்ச செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே... என்ன செய்யலாம் என்று யோசித்தார்.
தன்னுடைய குழந்தையின் திருமணத்தை நடத்த என்ன செய்வது என்று தன்னுடைய மனவியிடம் கூறி கவலையுற்றார். அதற்கு அவருடைய மனைவி காயத்ரி தேவியை நினைத்துக்கொள்ளுங்கள் அவள் நமக்கு உதவி செய்வாள் என்றாள். அதன்பிறகு பிராமணர் மன்னனிடம் சென்றார்.
மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.
அவ்வளவு தானே, நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை என கேட்க கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி," இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும். சமாளித்துக்கொள்கிறேன்." என்று கூறினார்.
மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லி பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க...ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.
மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டும் தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான். சமயோசிதமான மந்திரியோ, "பிராமணரே. இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளை பெற்றுக்கொள்ளும். நாளை வருகையில் புதிய பூணூலை செய்து எடுத்துவரவும்." எனக் கூறினார்.
கலக்கத்துடன் சென்றார் பிராமணர். இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது. மன்னன் பொருள் தருவானா மாட்டானா?
ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்? அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே? நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ? அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா? குறைத்துவிடுவானோ? பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா? அதை வைத்து என்ன எனன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது. அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை. காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார். பூணூலை செய்ய ஆரம்பித்தார்.
வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை. தடுமாறினார். ஒருமாதிரியாக பூணூலை செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார். அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது. அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்க சொன்னான் மன்னன்
என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே? சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று. பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று. அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.
பிராமணர் அங்கிருந்து சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் "முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?" என்று கேட்க மந்திரியோ, மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே. சாதுவும் கூட இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.
தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார். வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது. அந்த பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூட கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம். அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.
ஆனால் அவரை திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா, பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை. அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது." என்றான் மந்திரி.
- தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது.
- கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார்.
முன்பு ஒருமுறை சத்ரியரான கவுசிக மன்னனுடைய நாட்டில் கடும் பஞ்சம் நிலவியது. இதனை போக்க மகரிஷி வசிஷ்டரிடம் இருக்கும் காமதேனு பசுவின் பெண் வயிற்று பிள்ளையான நந்தினி என்ற பசுவை தன் நாட்டின் பஞ்சம் போக்க வேண்டி இரவல் கேட்கிறார். வசிஷ்டர் இவரது கோரிக்கையை நிராகரிக்கிறார். கோபமுற்ற கவுசிகன் அவர் மேல் போர் தொடுத்து தோல்வி அடைகிறார்.
தோல்வியுற்ற கவுசிக மன்னனிடம் வசிஷ்டர், பிரம்ம ரிஷிகளுக்கு மட்டுமே காமதேனு, மந்திரி என்ற பசுக்கள் கட்டுப்படும் எனவே நீர் பிரம்மரிஷியானால் நந்தினி பசுவை தருகிறேன் என்கிறார். மேலும் தவம் இயற்றினாலும் சத்ரியனால் எளிதில் பிரம்மரிஷி பட்டம் வாங்க முடியாது என்று உரைக்க, கவுசிகனும் அந்த பிரம்மரிஷி பட்டத்தை வாங்கி காட்டுவதாக சவால் விடுத்து ஒரு கள்ளி செடியின் முனையில் மேல் நின்று கடும் தவம் புரிகிறார். இதை கண்ட அன்னை சக்தி கவுசிகன் முன் தோன்றி தன கோவிலில் உள்ள விளக்கில் பஞ்சமுகமாக திரி போட்டு தீபம் ஏற்றினால் உன் தவம் சித்தியாகும் என்று அறிவித்து மறைகிறாள்.
சக்தியின் வாக்கை ஏற்று நான்கு வேதங்களின் பிறந்தநாள் (பவுர்ணமி) அன்று அவளது ஆலயம் சென்று பஞ்சமுகமாக திரிவைத்து விளக்கேற்ற முனைகிறார். ஆனால் எவ்வளவு முயன்றும் அந்த திரிகள் எரியவில்லை. உடனே அந்த விளக்கில் தன் தலை, இரண்டு கை மற்றும் கால்கள் இவை ஐந்தையும் வைத்து அந்த விளக்கை ஒரு மந்திரம் ஓதி எரிய வைக்கிறார். தனது உடலையே திரியாக்கி ஒரு நாள் முழுவதும் தனது நாட்டு மக்களுக்காக போராடுவதை கண்ட சக்தி அவரை விசுவாமித்திரர் என்று அழைத்து பிரம்மரிஷி பட்டத்தையும் வழங்குகிறார்.
தனது உடலை திரியாக்கி ஜோதியை மையமாக வைத்து தன் தவத்தின் போது கவுசிக மன்னன் தான் அறிந்த நன்கு வேதத்தின் சாரமாக ஒரு மந்திரம் இயற்றி உச்சாண்டம் செய்ததால் அதுவும் மந்திரத்திற்காக தன் உடலையே திரியாக்கி உச்சாண்டம் செய்து வரம் பெற்றதால் அந்த மந்திரம் காயத்ரி மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் கவுசிகன் கூறிய இம்மந்திரம் நான்கு வேதங்களின் சாரம் என்பதால் இனி வேதியர்கள் ஜோதி சொரூபமாக என்னை நினைத்து உலக நன்மைக்கு பிராத்தனை செய்யலாம் என அருளியதால் அன்று முதல் இன்று வரை நாம் உச்சாண்டம் செய்து பலன் பெறுகிறோம்.
காயத்ரி மந்திரத்திற்கு கட்டுப்பட்டு மனம் இறங்கிய சக்தியை அந்த மந்திரத்தை கொண்டே காயத்ரி தேவி என்று அழைக்கிறோம். சிரவண மாத பவுர்ணமிக்கு மறுநாள் அவர் வரமும் பட்டமும் பெற்றதால் நாமும் அதே நாளில் காயத்ரி மந்திரத்தை உச்சாண்டம் செய்து வணங்குகிறோம். அந்நாளில் இம்மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க பூர்வஜென்ம பாவங்கள் தொலைந்து போகும்.
'காயத்திரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு "காயத்திரி மந்திரம்" என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.
காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் புவ ஸுவ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
இதை தினசரி ஜெபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள்.
- சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-14 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி காலை 8.17 மணி வரை பிறகு பிரதமை பின்னிரவு 3.40 மணி வரை பிறகு துவிதியை.
நட்சத்திரம்: சதயம் இரவு 8.17 மணி வரை பிறகு பூரட்டாதி
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று காயத்ரி ஜபம். சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதரவு
ரிஷபம்-அனுகூலம்
மிதுனம்-ஆதாயம்
கடகம்-நிம்மதி
சிம்மம்-நிறைவு
கன்னி-நற்செயல்
துலாம்- குழப்பம்
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- வாழ்வு
மகரம்-நட்பு
கும்பம்-பிரீதி
மீனம்-முயற்சி
- தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார்.
- நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார்.
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
இளையான்தன் குடிமாறன் அடியானுக்கும் அடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற இளையான்குடி நாயனாரின் வரலாற்றை பற்றி இன்று நாம் தெரிந்துகொள்ளலாம்.
பாண்டியநாட்டில் உள்ளது தான் இளையான்குடி. இந்த ஊரில் மாறனார் என்ற சிவனடியார் இளையான்குடியில் பிறந்ததால் இளையான்குடிமாற நாயனார் என்று சொல்லி அழைக்கப்பட்டார். மிகுந்த செல்வச்செழிப்பில் இருந்த இளையான்குடிமாற நாயனார் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு நல்ல உணவு கொடுத்து உபசரித்து வந்தார்.
இப்படி கொடுத்து கொடுத்தே வறுமையில் வாடினார். இளையான்குடிமாற நாயனாரின் சிவதொண்டில் அவருடைய மனைவியும் அவருக்கு உதவி செய்து வந்தார்.
சிவபெருமான் ஒருநாள் இவர்களை சோதிப்பதற்காக சிவனடியார் போன்று வேடமிட்டு நடுநிசி நேரத்தில் இளையான்குடிமாற நாயனாரும் அவருடைய மனைவியும் உண்ண உணவின்றி பட்டினியாக இருக்கக்கூடிய நேரத்தில் சிவாயநம என்று கூறிக்கொண்டு சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரின் வீட்டுக்கதவை தட்டினார்.
அப்போது மழை கொட்டோகொட்டென்று கொட்டியபடி இருந்தது. இளையான்குடிமாற நாயனார் சிவாயநம என்று சிவனுடைய நாமத்தை கேட்டதும், வந்திருப்பது சிவனடியார் தான் என்று நினைத்து சிவனடியாருக்கு உணவு கொடுக்கனுமே என்று கூறிக்கொண்டு ஓடிவந்து கதவை திறந்தார்.
வந்திருக்கும் சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரை பார்த்து அப்பனே எனக்கு நன்கு பசிக்கிறது என்று சொன்னார். உடனே இளையான்குடிமாற நாயனார் மழையில் நனந்து வந்த சிவனடியாரின் திருமேனியை ஒரு துணியால் துடைத்து வீட்டினுள் உட்கார வைத்தார்.
பின்னர் தன் மனைவியை பார்த்து சிவனடியார் மிகுந்த பசியுடன் வந்திருக்கிறார். ஆனால் இவருக்கு உணவு கொடுக்க நம்முடைய வீட்டில் யாதொரு பொருளும் இல்லையே என்று கூறினார். உடனே அவருடைய மனைவி இப்போது நடுநிசி நேரம் ஆகிவிட்டது. நமக்கு கடனும் யாரும் கொடுக்க மாட்டார்கள். எனவே நாம் சிவனடியாருக்கு உணவு கொடுக்காமல் இருப்பதை விட இறப்பதே நல்லது என்று கூறினார்.
உடனே நாயனாரின் மனைவி, இன்றைக்கு பகலில் விதைத்து வந்தீர்களே விதைநெல் அதை வாரிக்கொண்டு வந்தால் நான் அதை உணவாக சமைத்துவிடுவேன் என்று கூறினார்.
மனைவி கூறியபடியே இளையான்குடிமாற நாயனார் நடுநிசி நேரத்தில் முளைநெல்லை கொண்டுவருகிறேன் என்று கூறிவிட்டு மழையில் நனைந்தவாறே ஐந்தெழுத்து மந்திரிரமான சிவாயநம என்று கூறிக்கொண்டு வயலுக்குள் சென்றார்.
மழையில் முளையில் வயலில் ஒரு ஓரமாக ஒதுங்கி கிடந்தது. அதை வாரி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். உடனே நாயனாரின் கையில் இருந்த நெல்லை மனைவி வாங்கிக்கொண்டு நீரில் போட்டார். உடனே மனைவி இளையான்குடிமாற நாயனாரிடம் இதை சமைப்பதற்கு விறகு இல்லையே என்று கூறினார்.
உடனே இளையான்குடிமாற நாயனார் என்ன செய்தார் என்றால் ஒரு கோடாறியை எடுத்து தன்னுடைய வீட்டின் கூரையில் ஒரு பகுதியை இடித்து அந்த கட்டிகளை எடுத்து அடுப்பு எரிக்க பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறினார்.
உடனே இளையான்குடிமாற நாயனாரின் மனைவி முளைநெல்லை வறுத்து, குத்தி, புடைத்து அரிசியாக்கி சோறும் சமைத்தார். அதன்பிறகு தோட்டத்தில் உள்ள கீரையை எடுத்து கறியும் சமைத்தார்.
சமையல் முடிந்ததும் நாயனாரும் சிவனடியாரிடம் சென்று அய்யனே... சாப்பிட வாருங்கள் என்று அழைத்தார். உடனே சிவனடியார் உருவத்தில் வந்த சிவபெருமான் இருவருக்கும் காட்சி கொடுத்தார்.
இளையான்குடிமாற நாயனாரும் அவருடைய மனைவியும் எல்ல்லையில்லாத மகிழ்ச்சியில் திழைத்தனர். உடனே சிவபெருமான் இளையான்குடிமாற நாயனாரை பார்த்து அன்பனே... சிவனடியார்களுக்கு உணவு கொடுத்த நீங்கள் சிவகணங்களுடன் திகழ வாருங்கள் என்று கூறி மறைந்தார். அதன்பிறகு நாளடைவில் இவர்கள் இருவரும் சிவலோகம் சென்றனர்.
- திரவுபதிக்கு பாதுகாப்பாக இருப்பேன் என்று கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
- சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் கொண்டாடக்கூடாது
இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக ரக்ஷாபந்தன், இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களும் கொண்டாடலாம். ரக்ஷாபந்தன் நாளில், சகோதர சகோதரிகள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறி, நேசத்தை உறுதி செய்து சகோதரத்துவத்தை கொண்டாடுகிறார்கள்.
அதன் அடையாளமாக சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டி, அவர்களின் நெற்றியில் திலகம் பூசிவிடுவார்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை பாதுகாப்பதாகவும், அவர்களை நேசிப்பதாகவும் பரிசுப்பொருட்களை கொடுத்து உறுதியளிக்கிறார்கள்.
மகாபாரதத்தில் ஒருமுறை கிருஷ்ணரின் கையில் இருந்து வழிந்த ரத்தத்தை தடுப்பதற்காக திரெளபதி தனது புடவையை கிழித்து கட்டு போட்டாள். இது கிருஷ்ணரின் மனதை நெகிழச்செய்தது. அன்று முதல் திரெளபதியை தனது சகோதரியாக ஏற்று, எப்போதும் அவளுக்கு பாதுகாப்பாக இருப்பேன் என கிருஷ்ணர் வாக்குறுதி அளித்தார்.
அதன்படியே கவுரவர்கள் திரௌபதியை துகிலுரிக்க முயன்றபோது அவள் கிருஷ்ணா என குரல் எழுப்ப, அவளது மானத்தை காப்பாற்றினார் கிருஷ்ணர். அதன் நினைவாகவே ரக்ஷாபந்தன் கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
பந்தரகல் எனப்படும் முகூர்த்த நேரத்திலேயே சகோதரிகள் தங்களின் சகோதரர்கள் கைகளில் ராக்கி கட்ட வேண்டும். மற்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அபசகுணமாகக் கருதப்படுகிறது. பந்தரகல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி இரவு 9.02 மணிக்கே தொடங்குகிறது. அதனால் இந்த சமயத்தில் மட்டுமே ராக்கி அணிவிக்க வேண்டும்.
அதேபோல் அக்டோபர் 31-ந்தேதி காலை 6.20 மணிமுதல் 7.50 மணிவரையிலான நேரமும், அதன்பிறகு காலை 11.10 மணிமுதல் மாலை 3.50 மணி வரையிலான நேரமும் ராக்கி அணிவிப்பதற்கான நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது.
பொதுவாக சூரியன் அஸ்தமன காலத்திற்கு பிறகு ரக்ஷாபந்தன் விழா கொண்டாடக் கூடாது என்பது ஐதீகம். ஒருவேளை இந்த முகூர்த்த நேரத்தில் தங்களின் சகோதரருக்கு ராக்கி அணிவிக்க முடியாதவர்கள் ஆகஸ்ட் 31-ந் தேதி மாலை 5.30 மணிமுதல் 7.05 மணி வரையிலான நேரத்தில் ராக்கி அணிவிக்கலாம். ஆகஸ்ட் 30-ந் தேதி சகோதரர்களுக்கு ராக்கி அணிவிக்க நினைப்பவர்கள் இரவு 9.05 மணி முதல் 10.48 மணி வரையிலான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- அவினாசி சிவபெருமானுக்கு பவுர்ணமி பூஜை.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-13 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி காலை 10.45 மணி வரை
பிறகு பவுர்ணமி.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 9.58 மணி வரை பிறகு சதயம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று பவுர்ணமி. ஆவணி அவிட்டம். யஜுர் உபாகர்மா, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தீர்த்தவாரி, விருஷபாரூட தரிசனம். அவினாசி சிவபெருமானுக்கு பவுர்ணமி பூஜை. சிறப்பு அபிஷேகம், ஆராதனை திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்ட ராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் அலங்கார திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-வாழ்வு
மிதுனம்-சாந்தம்
கடகம்-உயர்வு
சிம்மம்-தாமதம்
கன்னி-செலவு
துலாம்- பிரயாணம்
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- உறுதி
மகரம்-லாபம்
கும்பம்-வரவு
மீனம்-வெற்றி
- சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
- அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள்.
இறைவனாகிய சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு சிவதொண்டுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் தான் நாயன்மார்கள்.
விரிதிரைசூழ் கடற்நாகை அதிபதற்கடியேன் என்று திருத்தொண்டர் தொகையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் புகழ்ந்து சொல்லப்படுகிற அதிபத்த நாயனார் பற்றி இந்த நாயனார் வரலாற்றில் தெரிந்து கொள்ளலாம்.
சோழநாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் திருநுழைப்பாடி என்ற இடத்தில் மீன்பிடித்து வியாபாரம் செய்யக்கூடிய மீனவ சமுதாயமான பரதவ இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபத்த நாயனார் இருந்தார்.
அதிபத்த நாயனார் என்றால் ஒரு சிறந்த பக்தர் என்று பொருள். தன்னுடைய சிறு வயதில் இருந்தே சிறந்த சிவ பக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப்போகும் போதும் தன்னுடைய வலையில் சிக்கக்கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அதிபத்த நாயனாரில் உயர்ந்த பக்தியை உலகிற்கு உணர்த்த சிவபெருமான், தன்னுடைய திருவிளையாடலை அதிபத்த நாயனாரிடம் நடத்த ஆரம்பித்தார்.
அதிபத்த நாயனார் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது மீன்கள் சிக்குவது குறைந்துகொண்டே வந்தது. இதனால் அதிபத்த நாயனாரின் குடும்பத்தில் வறுமை ஏற்படத்தொடங்கியது. ஆனாலும் அதிபத்த நாயனார் தன்னுடைய வலைகளில் சிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அளிப்பதை நிறுத்தவே இல்லை.
இப்படியே நாட்கள் நகர்ந்தது. அடுத்து வரக்கூடிய நாட்களில் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரேஒரு மீன் மட்டும் சிக்குமாறு விளையாடினார் சிவபெருமான். அதிபத்த நாயனாரும் வழக்கம்போல இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்கு உரியது. சிவார்ப்பணம் என்று கூறி கடலில் விட்டார்.
காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்துகொண்டே வந்தது. இதைபார்த்து மிகுந்த கவலையுடன் அதிபத்த நாயனாரின் மனைவி கணவனிடம் நம் பசியை தீர்க்க வீட்டில் எந்த பொருளுமே இல்லை. நம் குழந்தைகள் எல்லோரும் பசியுடன் பலவீனமாக இருக்கிறார்கள். நீங்கள் பொருள் ஏதாவது சம்பாதித்துக்கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
அதிபத்த நாயனாரும் தனது மனைவி சொல்வதை கேட்டு தனது குழந்தைகளுக்காக கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். அதிபத்த நாயனார் வீசிய வலையில் நவரத்தினங்களும், நவமணிகளும் பதித்த ஒரு தங்க மீன் ஒன்று வலையில் மாட்டியது.
இதைக்கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிபத்த நாயனாரே இன்று உமக்கு ராசியான நாள். அதனால் தான் நீங்க வீசிய வலையில் தங்க மீன் கிடைத்துள்ளது. இந்த மீனை கொண்டுபோய் உங்க மனைவியிடம் கொடுங்க. உங்களது வம்சமே செல்வச்செழிப்பாக வாழலாம் என்று சொன்னார்கள்.
தங்க மீனை கண்டதும் அதிபத்த நாயனாரின் மனதில் எந்த சலனமும் இல்லாமல் வழக்கம் போல் வலையில் சிக்கிய முதல் மீனை இறைவனுக்கு கொடுப்பது போலவே இந்த தங்க மீனையும் சிவபெருமானுக்கு உரியது என்று கூறி கடலில் விட்டு விட்டார்.
அதிபத்த நாயனாரின் இந்த செயலைக்கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றனர். அப்போதுதான் சிவபெருமானும், பார்வதிதேவியும் அதிபத்த நாயனாருக்கு காட்சி அளித்தனார். அதுமட்டுமில்லாமல் கையில் தன்னுடன் இருக்கக்கூடிய பேரின்ப வரத்தையும் அதிபத்த நாயனாருக்கு அளித்தனர்.
இன்றைக்கும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று தங்க மீனை சிவபெருமானுக்கு கொடுக்கும் திருவிழா நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகன சுவாமி கோவில் நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை ஒரு கட்டுமரத்தில் வைத்து மீன்பிடிக்க கடலுக்கு போவார்கள். அப்போது கடலில் வலைவீசுவது போலவும், அந்த வலையில் தங்க மீன் சிக்குவது போலவும் அதை அதிபத்த நாயனார் சிவபெருமானுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவணை செய்வார்கள்.
அந்தநேரத்தில் கோவிலில் இருக்கக்கூடிய சிவபெருமான், அதிபத்த நாயனாருக்கு முக்தி அளிக்க கடற்கரைக்கு வருகிறார். கடற்கரைக்கு வரும் சிவபெருமானுக்கு அந்த தங்க மீனை படைத்து பூஜையும் செய்வார்கள். அப்போது அந்த கடற்கரைக்கு வரக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் சிவபெருமான் அருளாசி புரிவார்.
அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் அன்று அனைத்து சிவன் கோவில்களிலும் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானின் அருள் கிடைக்க பணமோ, பொருளோ கல்வியோ தேவையில்லை. தூய்மையான மனமும்ம் இறை அர்ப்பணிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்பதை தான் இந்த அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது.
- ஆவணி அவிட்டம் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும்.
- குளக்கரைகளில் பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
ஆவணி மாத பவுர்ணமியை யொட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் ஆவணி அவிட்ட விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாளில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள் மற்றும் உபநயணம் செய்துக்கொண்ட பிராமணர்கள் ஆற்றங்கரைகளில் அல்லது குளக்கரைகளில் தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்துக்கொள்வர்.
ஆவணி அவிட்டம் என்று சொன்னாலே, பலருக்கும் இது பூணூல் மாற்றும் ஒரு நிகழ்வு என்று தான் முதலில் நினைவுக்கு வரும். பூணூல் அணியும் பழக்கம் உள்ளவர்கள், விடியற்காலையிலேயே குளித்து நீர்நிலைகளின் அருகில் அல்லது ஏதேனும் ஒரு கோவிலில் ஒரு குழுவாக சேர்ந்து புரோகிதர் மந்திரம் சொல்ல பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாதவர் ஒரு ஒரு பூணூல், திருமணம் ஆனவர் இரண்டு பூணூலையும், திருமணம் ஆகி தந்தையை இழந்தவர்கள் மூன்று பூணூலையும் அணிந்து கொள்வர். அதன்படி ஆவணி அவிட்டத்தையொட்டி உபநயணம் எனப்படும் பூணூல் மாற்றி தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் இது பூணூல் மாற்றும் சடங்கு என்பது மட்டுமல்லாமல் ஆவணி அவிட்டத்திற்கு பல்வேறு முக்கியத்துவம் உள்ளன. உபகர்மா என்று கூறப்படும் இந்த நிகழ்வு பிராமணர் சமூகத்தில் கல்வி கற்பதை தொடங்குவதற்கான ஒரு முக்கியமான நாளாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ஒருசில சமூகங்களில் பூணூல் அணிந்தவர்கள் தான் கர்மகாரியம், அதாவது திதி கொடுப்பது, தெவசம் செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும் என்ற வழக்கமும் இருக்கிறது.
ஆவணி அவிட்டம் என்ற பேரிலேயே இந்த நிகழ்வு எந்த மாதம் எந்த நாளன்று வரும் என்பது தெரிந்து விடுகிறது. தமிழ் மாதங்களின் அடிப்படையில், சூரியன், சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமரும் ஐந்தாவது மாதமான ஆவணி மாதத்தில், அவிட்ட நட்சத்திர நாளன்று பூணூல் மாற்றிக் கொள்வார்கள். இந்த நாள் பெரும்பாலும் பவுர்ணமி அன்று வரும். இந்த நாளை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுகிறார்கள்.
இத்தகைய சிறப்பு மிக்க ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 30-ந்தேதி புதன்கிழமை வருகிறது. காயத்ரி ஜெபம் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. ஆவணி அவிட்டம் அன்று இரவு 9.58 மணிவரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. ஆனால் பவுர்ணமி திதி காலை 10.45 மணி வரை மட்டுமே உள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை எமகண்ட நேரம். இதனால் பூணூல் மாற்றுபவர்கள் காலை 7.15 மணிக்கு முன்பாக மாற்றி விட வேண்டும். முடியாதவர்கள் 9.15 முதல் 10.15 வரையிலான நல்ல நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம்.
- 30-ந்தேதி பவுர்ணமி, ஆவணி அவிட்டம்.
- 3-ந்தேதி சங்கடஹரசதுர்த்தி, முகூர்த்தநாள்.
29-ந்தேதி (செவ்வாய்)
* ஓணம் பண்டிகை
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சட்டத்தேர்.
* சுவாமிமலை ஆயிரம் முருகப்பெருமான் கொண்ட நாமாவளி தங்கப்பூமாலை சூடியருளல்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
30-ந்தேதி (புதன்)
* பவுர்ணமி.
* ஆவணி அவிட்டம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தீர்த்தம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோவிலில் நாசிம்மருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
31-ந் தேதி (வியாழன்)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவில் தெப்பம்.
* சுவாமி மலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்குநாள்
1-ந் தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* திருவேடகம் ஏலவார் குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.
2-ந்தேதி (சனி)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
3-ந்தேதி (ஞாயிறு)
* முகூர்த்த நாள்.
* சங்கடகர சதுர்த்தி.
* திருவரங்கம் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
4-ந் தேதி (திங்கள்)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* திருவைகுண்டம் புறப்பாடு.
* வைகுண்டபதி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சனம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.
- வடபழனி, திருப்போரூர் கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்டத்தேரில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆவணி-12 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி நண்பகல் 1.10 மணி வரை பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 11.35 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்றைக்கு ஒணம் பண்டிகை. ருக் உபாகர்மா. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சட்டத்தேரில் பவனி. குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி. உப்பிலியப்பன் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-அமைதி
ரிஷபம்-சுகம்
மிதுனம்-உயர்வு
கடகம்-லாபம்
சிம்மம்-வரவு
கன்னி-பிரீதி
துலாம்- நட்பு
விருச்சிகம்-செலவு
தனுசு- நிறைவு
மகரம்-பக்தி
கும்பம்-வெற்றி
மீனம்-மாற்றம்
- விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
- தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்று வருகிறது.
விழாவின் 11-வது நாளான இன்று பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்ட நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு திரு நடைதிறத்தலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு வைகுண்டசாமி பச்சை பல்லக்கு வாகனத்தில் வந்து பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. பகல் 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சவர்ண தேரில் அய்யா வீற்றிருக்க தேரோட்டம் தொடங்கியது.
மேள தாளங்கள் முழங்க சந்தன குடம், முத்துக்குடை ஏந்திய பக்தர்கள் முன்னே செல்ல காவியுடை அணிந்த அய்யா வழி பக்தர்கள் அய்யா சிவசிவ அரகரா அரகரா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சிக்கு பூஜித குரு. சாமி தலைமை தாங்கினார். பூஜிதகுரு.ராஜசேகரன், பூஜிதகுரு.தங்க பாண்டியன், வக்கீல் ஆனந்த், பொறியாளர் அரவிந்த், வக்கீல் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைப்பதியின் முன்பிருந்து புறப்பட்ட திருத்தேர் கீழரத வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி வழியாக வடக்கு ரத வீதியில் உள்ள தலைமைப்பதியின் வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது.
திருத்தேர் வடக்கு வாசல் பகுதிக்கு வரும்போது திரளான அய்யா வழி பக்தர்கள் அய்யா வைகுண்டசாமிக்கு பழம், வெற்றிலை, பாக்கு, பன்னீர் உள்ளிட்ட பொருட்களை நீண்ட வரிசையில் நின்று சுருளாக படைத்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்தேர் மாலை 6 மணிக்கு நிலைக்கு வந்தடைகிறது.
தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாமிதோப்பிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. காவல்துறை சார்பில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இரவு 7 மணிக்கு அய்யாவின் ரிஷப வாகன ஊர்வலம் நடைபெறுகிறது.
- அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள்.
- ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் கோவிலில் உள்ளன.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு வடமேற்கு முனையில் அமைந்துள்ளது பிட்டாபுரத்தி அம்மன் கோவில். இங்கு வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அன்னையை, 'வடக்கு வாய் செல்வி, நெல்லை மாகாளி, செண்பகச்செல்வி' என்றும் அழைக்கிறார்கள். தற்போது இந்த அம்மன் 'பிட்டாரத்தி அம்மன்' என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறாள்.
இங்குள்ள அம்மன் நான்கு கரங்களுடன் வலது கைகளில் உடுக்கையும், சூலமும், இடக்கைகளில் பாசமும், கபாலமும் கொண்டு காட்சியளிக்கிறாள். அன்னையின் திருவடியின் கீழ் அரக்கன் வீழ்ந்து கிடக்க அழகிய எழிலுடன் வீற்றிருக்கிறாள். அருகில் இரு பக்கமும் படைக்கல தேவியும் (அஸ்திர தேவதை), சீபலி அம்மனும், ராஜராஜேஸ்வரியும் செப்பு படிமங்களில் காட்சியளிக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் விநாயகர், நெல்லையப்பர், காந்திமதி, நந்தி, வள்ளி, முருகன், தெய்வானை, மயில் மற்றும் ஐந்து சிறு தெய்வங்களும், பதினான்கு கன்னியர்களின் கற்படிமங்களும் உள்ளன.
அம்மன் கருவறையை அடுத்து அர்த்த மண்டபமும், அதற்கு அடுத்து கருவறையும் உள்ளது. கருவறையில் அன்னை பிட்டாபுரத்தி அம்மன் சுமார் 6 அடி உயரத்தில், 5 அடி அகலத்தில் அழகிய இருக்கையில் (பீடத்தில்) வலது காலை பீடத்தின் மேலே ஊன்றி, இடது காலை தொங்க விட்டு வலது கைகளில் அரவு, வேதாளம், வாள், சூலம் ஆகியவற்றையும், இடது கைகளில் தீ, மணி, கேடயம், கபாலம் ஆகியவைகளை தாங்கியும், இருக்கையின் கீழ் வீழ்ந்து கிடக்கும் அரக்கனை வலக்கை சூலத்தால் அழுத்தியபடி எழிற்கோலம் காட்டுகிறாள்.
இந்த அன்னைக்கு நடைபெறும் இருநேர பூஜையிலும் பிட்டு படைக்கப்படுவது சிறப்பான ஒன்றாகும். பிட்டு படைப்பதால்தான் இந்த அம்மனுக்கு பிட்டா புரத்தி அம்மன் என்று பெயர் வந்துள்ளதாக தெரிகிறது. அம்மனுக்கு தீபாராதனை ஆன பின்னர் அலங்காரத்தில் ஏற்படும் குறைகளை சரிசெய்ய மாட்டார்கள். அதேபோல் தீபாராதனை முடிந்த பின்னர் மாலைகளோ, பூக்களோ அம்மனுக்கு அணிவிக்கப்படாது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை குணப்படுத்துவது இந்த அம்மனின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் 64 விதமான நோய்களுக்கும் இக்கோவிலில் வேர்கட்டி, மையிடப்படுகிறது. இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குணம் அடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இதனை நிரூபிக்கும் விதமாக நாள்தோறும் ஏராளமானோர், நோயால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் குழந்தைகளை இக்கோவிலுக்கு கொண்டு வந்து தீர்த்தம் தெளித்தும், மையிட்டும் செல்கிறார்கள். இந்துக்கள் மட்டுமல்லாது பிற மதத்தை சேர்ந்தவர்களும் இக்கோவிலுக்கு தங்கள் குழந்தைகளை கொண்டு வந்து செல்வது சிறப்பம்சமாகும்.
மேலும் மகப்பேறு விரும்பியும், பீடைகள் நீங்கவும், நோய்கள் தீரவும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திரளான பெண்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனை வேண்டி செல்கிறார்கள். ராகுகால நேரத்தில் இந்த அம்மனை வழிபடுவது சிறப்பாகும்.






