என் மலர்tooltip icon

    வழிபாடு

    • ஆஞ்சநேயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • சாந்த சொரூபியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இக்கோவிலில் கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கிடையே நடப்பாண்டில் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, ரூ.64 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பணிகள் முடிக்கப்பட்டன.

    மகா கும்பாபிஷேகம்

    இதையடுத்து 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (1-ந்தேதி) ஆஞ்சநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை யொட்டி கோவில் முன்பு வாழை, செங்கரும்பு, காய்,கனிகளால் தோரணங்கள் கட்டி அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவில் வளாகத்தில் அலங்கார பந்தலுடன் யாகசாலை அமைக்கப்பட்டு, நேற்று முன்தினம் யாகசாலை பூஜை தொடங்கி நடைபெற்று வந்தது.

    இதையடுத்து இன்று (புதன்கிழமை) காலை 7.15 மணி அளவில் வருண தீர்த்தம், புனித படுத்துதல் அனுதின ஹோமம், ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, தாரா ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், திருவாராதனம், சக்தி சங்கரஹணம், காலை 9.10 மணிக்கு யாத்ராதானம், கும்பப்ரயாணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு எனும் மகா கும்பாபிஷேக பெருவிழா, மகா சம்ப்ரோஷணம் கோலாகலமாக நடை பெற்றது. ஆஞ்சநேயர் சாமி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்க ளுக்கு அருள்பாலித்தார்.

    அதனை தொடர்ந்து 10.45 மணிக்கு தசதரிசனம், சிறப்பு திருவாராதனம், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், பிரம்ம ேகாஷம், அருட்பிரசாதம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், ஆச்சார்ய பஹுமானம், காலை 11.45 மணிக்கு ஸர்வ தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேக விழாவில் வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், கே.ஆர்.ராஜேஷ்குமார் எம்.பி., கலெக்டர் உமா, இந்து சமய அறநிலைய துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், அறங்காவல் குழு தலைவர் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், மல்லிகா குழந்தைவேல், ரமேஷ்பாபு, செல்வசீராளன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணைதலைவர் பூபதி, நகர்மன்ற உறுப்பினர் டி.டி. சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.

     பக்தர்கள் குவிந்தனர்

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசம் முழங்க ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் நீண்ட நேரம் நின்று வரிசையில் இரும்பு தடுப்புகள் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவை காண அகன்ற திரை அமைக்கப்பட்டிருந்தது.

    கோவில் மற்றும் கோவில் வளாகம் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. விழாவில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கோவில் வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள தெருக்களில் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டு கோவில் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டு உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்தனர். இதேபோல் கண்காணிப்பு கோபுரம் அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தப்படி இருந்தனர்.

    பக்தர்களுக்கு பல்வேறு குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

     தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்துதுறை, நகராட்சி, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    • திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

    தற்போது திருப்பதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் சில்லென்று குளிர்காற்று வீசுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால் பக்தர்கள் தரிசனத்திற்கு வர தயங்குகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    பனிப்பொழிவு மற்றும் மழையின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்து காணப்படுவதால் நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் சுமார் 7 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 62,269 பேர் தரிசனம் செய்தனர். 19,255 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி.
    • முக்குறுனி விநாயகர் கோவிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-15 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 11.57 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: ரோகிணி காலை 6.54 மணி வரை. பிறகு மிருகசீர்ஷம்.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. சுப முகூர்த்த தினம். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பவனி. பத்தமடை, தென்காசி, தூத்துக்குடி தலங்களில் அம்பாள் புறப்பாடு. உத்தரமாயூரம் வள்ளலார் சந்நிதியில் சந்திரசேகரர் புறப்பாடு. திருநெல்வேலி காந்தியம்மன் காமதேனு வாகனத்திலும், மாலை விருஷப வாகனத்திலும் வீதிஉலா. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருநாரையூர் பொள்ளா பிள்ளையார், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், திருச்சி உச்சிப்பிள்ளையார், மதுரை முக்குறுனி விநாயகர் கோவில்களில் காலையில் கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- சுகம்

    ரிஷபம்- நலம்

    மிதுனம்- நிறைவு

    கடகம்- அமைதி

    சிம்மம்- முயற்சி

    கன்னி- ஆர்வம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்- தாமதம்

    தனுசு- ஆக்கம்

    மகரம்- உயர்வு

    கும்பம்- பெருமை

    மீனம்- நிறைவு

    • ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவது 'துலா ஸ்நானம்'
    • 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் சங்கமம் ஆவதாக ஐதீகம்

    ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று கூறுவார்கள். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், உலகில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும், 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும், காவிரி நதியில் சங்கமம் ஆவதாக ஐதீகம். அன்றைய தினம் மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் முன்பு உள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்புக்குரியது.

    புண்ணிய நதிகளில் நீராடினால் தங்களின் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கையில், பலரும் புனித தீர்த்தங்களில் நீராடி வருகிறார்கள். அப்படி தங்களை நாடி வருபவர்களின் பாவங்களைப் போக்கி, அந்த பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக்கொள்கின்றன.

    இதனால் அனைத்து பாவங்களையும் சுமந்து மாசுபட்டு நிற்கும் புண்ணிய நதிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில், மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

    அப்படி அனைத்து புண்ணிய நதிகளும் வசிக்கும் காவிரியில், ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயமாகி, 6 நாழிகைக்குள் நீராட வேண்டும். அதாவது சூரியன் உதயமாகி 2 மணி நேரத்திற்குள் காவிரியில் நீராட வேண்டும். துலா மாதத்தில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் கூட காவிரியில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

    ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்றாவது மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். ஐப்பசி கடைசி நாள் நீராடலை, "கடை முழுக்கு' என்று அழைக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும். திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றி பாடியுள்ளனர்.

    கோவிலின் முதல் சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் அம்மன். மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால். இத்திருத்தலத்திற்கு 'மயிலாடுதுறை' என்று பெயர் வந்தது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்- பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நடராஜப்பெருமான், மயூர தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில், இந்த நடராஜருக்குத் தான் முதல் பூஜை செய்யப்படும்.

    முடவன் முழுக்கு

    ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியின் துலா கட்டத்தில் நீராடினால் நன்மைகள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பதால், அந்த நாளில் நீராட ஒரு சிவ பக்தர் நினைத்தார். ஆனால் அவரால் நினைத்தபடி ஐப்பசி மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் நீராட முடியவில்லை. அந்த சிவ பக்தர், ஒரு கால் பலகீனமான மாற்றுத் திறனாளி. அந்த பக்தர் காவிரி துலா கட்டத்திற்கு வருவதற்குள், ஐப்பசி மாத இறுதி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்று முடிந்து விட்டது.

    அப்போது அவர் சிவபெருமானை நினைத்து தன் வேதனையை வெளிப்படுத்தினார். "இறைவா.. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லையே" என்று புலம்பினார். அப்போது சிவபெருமான் அசரீரியாக தோன்றி, `கார்த்திகை முதல் நாளில் நீ, இந்த துலா கட்டத்தில் நீராடு. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் உனக்கும் கிடைக்கும்" என்று அருளினார்.

    அதன்படி கார்த்திகை மாத முதல் நாளில், அந்த சிவபக்தர் தீர்த்த நீராடி பலன்களை அடைந்தார். எனவே இந்த நிகழ்வு கார்த்திகை முதல் நாளில் 'முடவன் முழுக்கு' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த தினத்திலும் பக்தர்கள் காவிரி தீர்த்தத்தில் நீராடினால், உரிய பலன்கள் கிடைக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூர்நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன்.
    • நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.

    சரீரத்திற்கு தேவையானவற்றை மனிதர்கள் சேமிக்கிறார்கள். ஆனால் சரீரத்தை விட மதிப்பு மிக்கது நமது ஜீவன். அது நித்திய நித்திய காலம் வாழக்கூடியது என்பதை உணர முடியாமல் மனிதன் இருப்பது வருந்தத்தக்கது.

    கல்வி கற்கின்ற ஒருவன் தான் வேலைவாய்ப்பு பெற, அடுத்து என்ன படிக்க வேண்டும் என கற்றவர்களிடம் ஆலோசனை கேட்கிறான். நோய்வாய்ப்பட்ட ஒருவர், ஏற்கனவே வியாதிப்பட்டு குணமடைந்த ஒருவரிடம் எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெற்றீர்கள் என விசாரிக்கிறார்.

    இப்படியாக எல்லாவற்றிற்கும் ஆலோசனை கேட்கும் நாம் மரித்தும் உயிரோடு எழுந்த இயேசுவிடம், நமது நித்திய வாழ்வுக்கான வழியை கேட்டு தெரிந்து கொள்ள விருப்பமற்றவர்களாக இருக்கிறோம்.

    'மரித்தேன், ஆனாலும் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன். நான் மரணத்திற்கும் பாதாளத்திற்கும் உரிய திறவுகோல்களை உடையவனாயிருக்கிறேன்' (வெளி 1:18) என இயேசு கூறுகிறார்.

    கடவுளிடம் வேண்டினால் விண்ணுலகை அடையலாம் என்றும், நன்மை செய்தால் மறுவாழ்வு உண்டு என்றும் பொதுவாக நம்மில் சிலர் நினைப்பது உண்டு.

    ஆனால் வேத வசனத்தில் தேவன் நமக்கு ஜீவனைத் தந்திருக்கிறார். அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது (1 யோவான் 5:11,12) என்று கூறப்பட்டுள்ளது.

    அதாவது கடவுள் நமக்கு நித்திய முடிவில்லாத வாழ்வை தந்தது உண்மைதான். ஆனால் அந்த வாழ்வு அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது என்றும், கிறிஸ்துவை உடையவன் ஜீவனை உடையவன் என்றும் வேதம் கூறுகிறது.

    இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் தங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் பொழுது, தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக நினைத்துக் கொள்வார்கள். குறிப்பாக செல்வச்செழிப்பான வாழ்க்கை மற்றும் வியாதி இல்லாத வாழ்க்கை வாழ்பவர்கள், தாங்கள் ஆசீர்வாதமாக இருப்பதாக எண்ணிக்கொள்வது உண்டு. ஆனால் இவை அனைத்தும் உலகப்பிரகாரமான ஆசீர்வாதங்கள்.

    இவை எல்லாவற்றிற்கும் மேலான ஆசீர்வாதத்தை கடவுள் நமக்கு வைத்திருக்கிறார். அது தான் நித்திய வாழ்வு. முடிவில்லாத வாழ்க்கை. நிரந்தரமாக வாழ்கிற வாழ்க்கை. மரித்த பின்பு ஒரு வாழ்க்கையா? என நம்மில் சிலர் வாக்குவாதம் பண்ணுவது உண்டு.

    ஆனால் வேதம் கூறுகிறது, "கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வான்.

    என்னிடத்தில் விசுவாசமாய் இருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகிறேன்" (யோவான் 16.7).

    "நித்திய ஜீவனை தருவேன் என்பதே அவர் நமக்குத் தந்த வாக்குத்தத்தம்" (1 யோவான் 2:25).

    இந்த பூமியில் தன்னுடைய வாழ்வை காப்பாற்ற போராடுகிற மனிதன், தான் மரித்த பின்பு தன்னுடைய சரீரத்தை விட்டு பிரிகிற ஜீவன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என யோசிக்க தவறி விடுகிறான்.

    "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும், அது அவனுக்கு ஜீவன் அல்ல" என்று (லூக் 12:15) வேதம் கூறுகிறது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன?

    மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" என்று (மத்.16.26) வேதம் கூறுகிறது.

    "நானே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 1.25) என்று இயேசு கூறுகிறார். தன்னை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய வாழ்வு மட்டுமல்ல, உலக ஐசுவரியங்களையும் கொடுக்க தேவன் விரும்புகிறார்.

    "நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க வேண்டும் என்பதே நம் தேவனுடைய விருப்பம். கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும்" (நீதிமொழிகள் 10-12).

    "என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின் படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" என்று பிலிப்பியர் 4:20 கூறுகிறது.

    எப்படி கிறிஸ்து வழியாக நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது நிச்சயமோ, அதுபோல இவ்வுலகில் நம்முடைய எல்லா தேவைகளும் கிறிஸ்து வழியாக நிறைவாக்கப்படும் என்று வேதம் கூறுகிறது.

    எதை உடுப்போம்; எதை குடிப்போம் என்று கவலைப் படாதீர்கள். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:31-33) என்பதே கர்த்தருடைய வார்த்தை.

    கடவுள் நமக்கு ஐசுவரியங்களைத் தருவது நிச்சயம். ஆனால் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தில் நித்தியகாலம் வாழ்கிற வாழ்க்கையை நாம் விரும்பித் தேட வேண்டும். அப்படி நாம் செய்யும் போது இவ்வுலகில் நாம் மகிழ்ச்சியாக வாழ என்ன தேவையோ, அவை எல்லாவற்றையும் சேர்த்து தர அவர் வல்லமை உள்ள தேவன்.

    ஒருவேளை இன்று ஏதோ ஒரு தேவையைக் குறித்து கவலையோடு இருக்கிறீர்களா? கலங்காதீர்கள். அவரை விசுவாசிக்கிற ஒவ்வொருவரையும் கர்த்தர் எல்லா ஆசீர்வாதங்களாலும் நிரப்ப விரும்புகிறார். ஏனென்றால் அவர் உங்களை நேசிக்கிறார். இம்மையிலும் மறுமையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட அவரை விசுவாசத்தோடு ஏற்றுக்கொள்வோம், ஆமென்.

    • உறவுகள்-நட்பில் விரிசலுக்கு கோபமே காரணமாக அமைகிறது.
    • ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்.

    எப்போதும் மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்ததாக இந்த உலக வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே மனிதர்கள் பலரின் விருப்பமாக உள்ளது. நினைத்தது நடக்க வேண்டும், விரும்பியது கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்க்கைப் பாதையாக இருக்கின்றது. அதேபோல இன்றைய மனிதன் தனது வெற்றிக்காக, மகிழ்ச்சிக்காக அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எளிதில் கோபம் கொள்கிறான். கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூட உணராமல் வார்த்தைகளை அள்ளி வீசுகின்றான்.

    கோபம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் பற்றியும் திருக்குர்ஆனும், நபிமொழிகளும் விரிவாக எடுத்துக்கூறி மனிதர்களுக்கு நல்வழி காட்டுகின்றது. இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களில் பிரிவு, உறவுகள்-நட்பில் விரிசல் போன்றவற்றுக்கு கோபமே காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே தான் கோபம் கொள்ளுதலை தவிர்க்க வேண்டும் என்று திருக்குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் வற்புறுத்துகின்றன. அவற்றை காண்போம்:

    `இறை நம்பிக்கையாளர்கள் பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள்' (திருக்குர்ஆன் 42:37)

    `பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால், அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கிக்கொள்வார்கள்; மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்'. (திருக்குர்ஆன் 3:134)

    கோபம் குறித்து நபிகள் நாயகம் அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய இந்த தகவல்கள் புகாரி நூலில் இடம்பெற்றுள்ளது. அவை:

    `மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்'.

    `ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'கோபத்தைக் கைவிடு' என்று அறிவுரை கூறினார்கள். அவர் 'அறிவுரை கூறுங்கள்' எனப் பல முறை கேட்டபோதும் நபி(ஸல்) அவர்கள் 'கோபத்தைக் கைவிடு' என்றே சொன்னார்கள்'.

    கோபம் ஏற்படும் போது நாம் என்ன செய்யவேண்டும்

    `சுலைமான் இப்னு ஸுரத் (ரலி), நபி (ஸல்) அவர்கள் அருகில் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டார்கள். அப்போது நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் அமர்ந்திருந்தோம். அவர்களில் ஒருவரின் முகம் சிவந்து கோபத்துடன் தம் தோழரைத் திட்டிக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எனக்கு ஒரு (பிரார்த்தனை) வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும். அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என்பதே அச்சொல்லாகும்' என்று கூறினார்கள். எனவே, மக்கள் அம்மனிதரிடம், 'நபி (ஸல்) அவர்கள் சொல்வதை நீர் செவியேற்கவில்லையா?' என்று கூறினார். அந்த மனிதர், 'நான் பைத்தியக்காரன் அல்லன்' என்றார். (நூல்: ஸஹீஹ் புகாரி)

    கோபத்தினால் 3 நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்காதீர்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்.

    இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) கூறுகின்றார்: "ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக, அல்லாஹ்வின் அடியார்களே! அன்பு பாராட்டுவதில் சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று". (நூல்: ஸஹீஹ் புகாரி)

    கோபத்தில் இருந்து வெளியேறுங்கள்

    இறைத்தூதர் (ஸல்) "ஒருவர் தம் சகோதரரிடம் மனஸ்தாபம் கொண்டு மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருவரைவிட்டு ஒருவர் முகத்தைத் திருப்பிக்கொள்வர். இவ்வாறு செய்யலாகாது. ஸலாமை முதலில் தொடங்குகிறவர் தாம் இவர்கள் இருவரில் சிறந்தவர் ஆவார்". அறிவிப்பாளர்: அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி), நூல்: ஸஹீஹ் புகாரி).

    கோபம் ஏற்படும் போது செய்ய வேண்டியது:

    உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: ஸுனன் அபூதாவூத்)

    "நிச்சயமாக கோபம் ஷைத்தானின் குணம். ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டான். நீரைக் கொண்டுதான் நெருப்பை அணைக்க முடியும். எனவே உங்களில் ஒருவர் கோபப்பட்டால் ஒளு (உறுப்புக்களை நீரால் கழுவி சுத்தம்) செய்து கொள்ளட்டும்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அதிய்யா (ரலி) நூல்: ஸுனன் அபூதாவூத்).

    இறைவனின் நல்லடியார்களே, கோபத்தை கைவிடுவோம், சாந்தியையும், சமாதானத்தையும் பரப்புவோம்.

    • கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் கட்டளைதாரர்கள் மூலம் வடமாலை அபிஷேகம் நடைபெற்று வருகிறது.

    இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இக்கோவிலில் நாளை (1-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தையொட்டி ரூ.67 லட்சம் மதிப்பீட்டில் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறுகிறது.

    இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் கோவில் வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து இன்று காலையில் வருண தீர்த்தம், புனிதபடுத்துதல், அக்னி பகவான் பூஜை, ஆழ்வார்கள் அருளிய தமிழ் திவ்ய பிரபந்த வேள்வி, அனுதின பெருவேள்வி, மகாசாந்தி ஹோமம், அதிவாச ஹோமம், வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம், அருட்பிரசாதம் வழங்குதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மாலையில் பிம்ப வாஸ்து, மகாசாந்தி வேள்வியை நிறைவு செய்தல், ஒன்பது கலச திருமஞ்சனம், கங்கணம் கட்டுதல், சயனாதி வாசம், சகல தேவதைகளை வரவழைத்து விசேஷ பூஜை, பிரதான வேள்வியை நிறைவு செய்தல், தமிழ் திவ்ய பிரபந்த சமர்ப்பணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்ய போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு, சுகாதாரம், வருவாய், போக்குவரத்து துறை, நகராட்சி, காவல் துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் கும்பாபிஷேகத்துக்கான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.

    விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ., கோவில் அறங்காவல் குழுத் தலைவர் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

    இன்று காலை முதலே கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    • சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புனிதமான தலம் திருவெண்ணெய்நல்லூர்.
    • சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது.

    சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த புனிதமான தலம் திருவெண்ணெய்நல்லூர். ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி "சுந்தரா வா" என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு 'சுந்தரர்' என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

    திருப்பாற்கடலை கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை பந்துபோல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் 'ஆலகால சுந்தரர்' என்றானது.

    சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெய்யால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே 'திருவெண்ணெய்நல்லூர்' என்றானது.

    ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே இருந்த பார்வதியின் தோழிகளான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து, காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.

    உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, "தன்னை பூலோகத்தில் தக்க சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார்.

    இதையடுத்து திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த அந்த பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார்.

    சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தனர். சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.

    அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, "இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையின் படி, அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய்நல்லூர் அந்தணனுக்கு அடிமை" என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார். அதைக் கேட்ட சுந்தரர், "உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?" என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார்.

    முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. "இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய்நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்" என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.

    சுந்தரரோ, "அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்" எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார். திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் வழக்கு நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர்.

    முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர்.

    இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், `ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?' என வினவினார், சுந்தரர். உடனே அந்த முதியவர், `அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது' என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.

    சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. `ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா?. நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே' என்றார் சுந்தரர். முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார்.

    அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக்குறடுகளை (காலணி) கழற்றி விட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.

    சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கி மறைந்தார். இதையடுத்து சிவபெருமானின் மீது, ``பித்தா பிறை சூடி.." என்று தொடங்கும் தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.

    சுந்தரருடன் பஞ்சாயத்து சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட, இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என்கிறார்கள். சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும்.

    சந்தான குரவரான மெய்கண்டார், 'சிவஞான போதம்' அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.

    தலவரலாறு

    தாருகாவனத்து முனிவர்கள் அகந்தையால் வேள்வி உண்டாக்கி சிவபெருமானை கொல்ல முயன்றார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. அவர்கள் ஏவிய ஆயுதங்கள் எல்லாவற்றையும் சிவன் தன்னிடத்தே பெற்று வைத்துக்கொண்டார். முனிவர்கள் தங்கள் அகந்தை அழிந்து இத்தலத்தில் தவம் புரிந்தார்கள். இறைவன், அவர்களது தவறை பொறுத்து அருள் புரிந்தார்.

    எனவே இக்கோவில் அருட்டுறை (அருள் துறை) என பெயர் பெற்றது. முனிவர்களின் தவறை மன்னித்து இங்கு இறைவன் கிருபை புரிந்ததால் `கிருபாபுரீஸ்வரர்' எனப்பெயர் பெற்றார். மறைகள், இறைவன் ஆணைப்படி இங்கு தவம் புரிய அவற்றின் நடுவில் இறைவன் அக்னியாகத் தோன்றினார். அவை கேட்டுக்கொண்டபடி இங்கு சுயம்பு லிங்கமாக எழுந்தருளினார்.

    இத்தல மங்களாம்பிகை அம்மன் சன்னிதியில் வழிபட்டால், செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் அனைத்தும் கிடைக்கும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பாகும். அறுபத்து மூவர், சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன. சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் இங்கு உள்ளது.

    இத்தல இறைவனுக்கு `தடுத்தாட்கொண்ட நாதர்' என்ற பெயரும் உண்டு. 11 திங்கட்கிழமைகள் இத்தல ஈசனின் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வந்தால், எவ்வித பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இங்குள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம்.

    தர்மதேவதையே நந்தி வடிவில் இங்கு இருப்பதால் திருமணம் ஆகாதவர்கள், தாங்களும் மாலை போட்டு நந்திக்கும் மாலை போட்டு வலம் வந்தால் திருமண வரம் கண்டிப்பாக ஈடேறும். உடல் ஆரோக்கியம் வேண்டியும், தொழில் சிறக்கவும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து கோவிலில் யாகம் நடத்துகிறார்கள்.

    பூர்வ ஜென்ம பாவம் விலகவும் யாகம் செய்கிறார்கள். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் இத்தலத்தில் இருப்பது மேலும் ஒரு சிறப்பு. இங்குள்ள தல விருட்சத்தை பூஜித்து பால் அபிஷேகம் செய்து 5 தீபம் ஏற்ற, நவகோள்களால் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

    பொல்லாப்பிள்ளையார்

    இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் பொல்லாப்பிள்ளையார். இவர் உளியால் செதுக்கப்படாத விநாயகர். சுயம்புவாக தானே தோன்றியவர். இவர், மெய்கண்டதேவருக்கு 5 வயதில் ஞான உபதேசம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேச்சு குறைபாடு உள்ளவர்கள் இவரை வழிபட்டால், பேச்சு வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    அமைவிடம்

    விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல்பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.

    • கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விருட்சப வாகனம்.
    • சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    31-ந்தேதி (செவ்வாய்)

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் விருட்சப வாகனம்.

    * திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி தங்கப் பூமாலை சூடியருளல்.

    * மேல்நோக்கு நாள்.

    1-ந்தேதி (புதன்)

    * முகூர்த்த நாள்.

    *உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் புறப்பாடு.

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் பவனி.

    * சமநோக்கு நாள்.

    2-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    3-ந்தேதி (வெள்ளி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் அலங்காரத்துடன் பவனி.

    * திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    * மேல்நோக்கு நாள்.

    4-ந்தேதி (சனி)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன், காலையில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் காட்சி, இரவு காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

    * உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சந்திரசேகரர் பவனி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    5-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம், இரவு தங்கக் கிளி வாகனத்தில் வீதிஉலா.

    * மதுரை தெற்கு மாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    6-ந்தேதி (திங்கள்)

    * திருநெல்வேலி காந்திமதி அம்மன் மாலை சிவ பூஜை செய்தல், இரவு சப்தாவரண பல்லக்கில் பவனி.

    * தூத்துக்குடி பாகம்பிரியாள் அலங்காரத்துடன் திருவீதி உலா.

    * கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    • கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் விருஷப வாகனத்தில் பவனி.
    • முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஐப்பசி-14 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை இரவு 11.50 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: கார்த்திகை காலை 6.32 மணி வரை. பிறகு ரோகிணி.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்.

    ராகுகாலம்: மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் விருஷப வாகனத்தில் பவனி. திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை கமல வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், பவனி. மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்- இன்பம்

    ரிஷபம்- நற்செயல்

    மிதுனம்- உற்சாகம்

    கடகம்- வாழ்வு

    சிம்மம்- பக்தி

    கன்னி- லாபம்

    துலாம்- பரிவு

    விருச்சிகம்- பாசம்

    தனுசு- உண்மை

    மகரம்- உவகை

    கும்பம்- நலம்

    மீனம்- ஓய்வு

    • 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை
    • சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார்.

    சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் சொர்ண ஆகர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்குநோக்கி அமைந்திருக்கும் ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு, அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

    கோவிலின் நுழைவாயிலில் ராஜகோபுரம் இருப்பது போல் உலகின் மிகவும் பிரம்மாண்டமான 39 அடி உயரமுள்ள காலபைரவர் சிலை உருவாகியுள்ளது. அவர் வழியாகத்தான் ஆலயத்தில் உள்ளே செல்ல வேண்டும். சிவனின் அவதாரமாக பைரவர் இருக்கிறார் என்பது நம்பிக்கை. பைரவரின் வாகனம் நாய். காலபைரவரின் பின்னால் பிரம்மாண்டமான நாய் உருவம் உள்ளது.

    பொதுவாக சிவாலயங்களில் தெற்குப் புறமாக சிறிதாக இரண்டு அடி உயரத்தில் ஒரு கால பைரவர் சிலை இருக்கும். ஆனால் பைரவருக்கு முதன்மையாக இவ்வளவு பெரிய ஆலயமும் மிகப்பெரிய சிலையும் உருவாகி உள்ளது இங்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசியாவிலேயே உயரமான 39 அடி கால பைரவரை நுழைவாயிலாகக்கொண்ட நமது தென்னக காசி பைரவர் திருக்கோயில் தலம்,

    இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இங்கே 650 கிலோ எடையுள்ள சொர்ண ஆகர்ஷன பைரவர் சிலை ஒன்று உள்ளது. இது முழுக்க ஐம்பொன்னால் ஆனது. அதை வணங்குபவர்களுக்குப் பலன்களும் வளங்களும் கிடைத்து வருகின்றன.

    கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இருக்கும் பைரவர் சிலையினை பொதுமக்கள் தொட்டு வணங்கலாம். தாங்களே எல்லா விதமான அர்ச்சனைகளையும் அபிஷேகங்களையும் மக்கள் செய்து கொள்ளலாம். இதற்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. அந்த வகையில் பொது மக்களின் ஆலயமாக சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் வணங்கக் கூடிய ஆலயமாக இது உருவாகியிருக்கிறது.

    அமைவிடம்

    பைரவ பீடம் ( பைரவர் கோவில் ) ஈரோடு - காங்கேயம் மெயின் ரோடு, இராட்டைசுற்றிபாளையம், அவல்பூந்துறை - 638115 ஈரோடு.

    • ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.
    • மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    * ஆடையில் நல்ல வாசனைத்திரவியம் (செண்ட்) தடவிக்கொள்வது அதிர்ஷ்டத்தை பெருக்கும்.

    * சிலருக்கு அதீத காமசிந்தனையினால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்கள் ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி வரலாம்.

    * மனைவியை தவிர வேறு பெண்களுடன் தவறான தொடர்பு வைத்திருந்தால் பிற்காலத்தில் குடும்பத்திற்குள் மரியாதைக்குறைவு, மன உளைச்சல், பொருளாதார வீழ்ச்சி ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.

    * மனைவியை வீட்டு முற்றத்தில் எரியும் நெருப்பில் நீல நிற பூக்களை போடச்சொல்லலாம். இது தம்பதிகளுக்கு இடையே உள்ள தோஷ நிவாரணமாகவும், அன்யோன்யத்தை பெருக்குவதாகவும் அமையும்.

    * பொருளாதார வசதி இருந்தால் ஏதேனும் ஒரு ஏழைக்கு பசுமாடு தானம் செய்யலாம்.

    * பட்டு, நைலான், பாலியஸ்டர் போன்ற மென்மையான ஆடைகள் மிகவும் உங்களுக்கு அதிர்ஷ்டமானவை.

    ×